1/12/2011

வெள்ள நீரை வெளியேற்றும் முயற்சியில் கிழக்கு முதல்வர்.

50 ஆண்டுகளின் பின்னர் மட்டக்களப்பில் வெட்டப்பட்ட முகத்துவாரம்.
_mg_9789
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள நீர் மட்டம் மணித்தியாலத்திற்கு மணித்தியாலம் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதனால் குளங்களிலும் நீர் மட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் குளங்களின் வான் கதவுகள் அடிக்கடி திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக குளத்து நீர் மாவட்டத்தின் சகல பிரதேசங்களையும் மூடியுள்ளது. இதனால் மாவட்டததின் அனைத்துப் பிரதேசங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது.
மட்டக்களப்பு மாநகர எல்லை முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்pன் வழமையான முகத்துவாரம் திறந்து இருந்தும் நீர் ஓடுகின்ற அளவு போதாது உள்ளது. இதனால் புதியதொரு முகத்துவாரத்தினை தோண்டி அதன் ஊடாக நீரை கடலுக்குள் செலத்துகின்ற முயற்சியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழு ஒன்று செயற்பட்டுவருகின்றது .
மட்டக்களப்பு நாவலடியில் 1957 ஆம் ஆண்டு இதே போல் முகத்தவாரம் வெட்டப்பட்டு வெள்ள நீர் வெளியேற்றப்பட்டிருக்கின்றது. அதே இடத்தினாலே மேற்படி முகத்துவாரமும் வெட்டப்பட்டு வெள்ள நீர் வடிந்தோட விடப்பட்டிருக்கின்றது. இதனால் மட்டக்களப்பு மாநகர எல்லையைச் சூழவுள்ள வெள்ள நீர் விரைவாக வடிந்து கொண்டு இருக்கிறது. 50ஆண்டுகளுக்குப் பின்னர் மட்டக்களப்பில் இவ்வாறானதோர் நிலை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான முதலமைச்சரின் துணிகரமான செயலுக்க மக்கள்
பாராட்டுக்கனைத் தெரிவித்துள்ளார்கள்._mg_9794
_mg_9795
_mg_9796
_mg_9804


  _mg_9805

0 commentaires :

Post a Comment