1/19/2011

மண்முனைப்பற்று பிரதேச செயலக ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு _

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலக ஊழியர்கள், அலுவலர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர். நேற்று இப் பிரதேச செயலகத்தின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு கோரியே இப்போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆரையம்பதி பிரதேச செயலாளர் எம். தனபாலசிங்கத்திடம் வினவியபோது சம்பவத்தின்போது நான்கு ஊழியர்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை கைது செய்யப்படும்வரை அவ் ஊழியர்கள் வேலைக்கு சமுகமளிக்கமாட்டோமென தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவாக ஏனைய ஊழியர்களும் அலுகத்திற்கு சமுகமளிக்கவில்லை என்றார். பிரதேச செயலகத்தை சுற்றி அதிகளவிலான பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்

0 commentaires :

Post a comment