1/10/2011

கிழக்கு மாகாணத்தில் சகல கிராமங்களுக்கும் இன்னும் ஒருவருடத்திற்குள் மின்சாரம் கிடைக்கும்.களுதாவளை விச்சுக்காலை கிராமத்திற்கு மின்சாரம் வழங்கும் நிகழ்வில் *முதலமைச்சர்
கிழக்கு மாகாண முதலமைச்சரின் விசேட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட 40இலட்சம் ரூபாய்; மூலம் களுதாவளையின் விச்சுக் காலைக் கிராமத்திற்கு மின்சார விநியோகம் மேற்கொள்ளப்பட்டது. இதனை உத்தியோகபூர்வமாக மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று(08.01.2011) இடம் பெற்றது. அதில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன் குறிப்பிடுகையில்:
மக்களினது அடிப்டைப் பிரச்சினைகளில் மிகவும் முக்கிய ஒன்றாக தற்போது மின்சாரம் திகழ்கின்றது. இலங்கையில் இருக்கின்ற ஒவ்வொரு கிராம மக்களும் மின்சாரத்தினை பயன் படுத்தவர்களதாக இருக்க வேண்டும். அதற்கான வேலைத் திட்டங்கள் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விசேடமாக கிழக்கு மாகாணத்தில் இன்னும் ஒருவருடத்திற்குள் சகல கிராமங்களுக்கும் மின்சாரம் கிடைக்கும். அதற்கான சில விசேட திட்டங்கள் மத்திய அரசியன் அனுசரணையோடு மாகாண அமைச்சினால் தயார்படுத்தப்பட்டுவருகின்றமை குறிப்ப்pடத்தக்கது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மற்றும் களுவாஞ்சிக்குடிப் பிரதேச சபைத் தவிசாளர் சிவகுணம் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டார்கள்.
_mg_8963
_mg_8961_mg_8961

0 commentaires :

Post a comment