1/15/2011

துனீஷியாவில் அரசியல் கொந்தளிப்புதுனீஷிய அதிபர் பென் அலி
துனீஷிய அதிபர் பென் அலி கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக ஆட்சி செய்து வருகிறார்.
துனீஷியாவில் 2014ஆம் ஆண்டு நடக்கக்கூடியத் அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என அந்நாட்டின் நெடுங்கால அதிபர் ஸீன் அல் ஆபிதீன் பென் அலி கூறியுள்ளார்.
அண்மைய காலமாக அரசாங்கத்துக்கு எதிராக நடந்த மக்களின் வன்முறைமிக்க கொந்தளிப்பை அடுத்து பென் அலியின் அறிவிப்பு வந்த்டுள்ளது.
இந்த அறிவிப்பு ஆர்ப்பாட்டங்களின் உக்கிரத்தைத் தளர்த்தும் என்று அதிபர் ஸீன் அல் ஆபிதீன் பென் அலி கருதியிருக்கலாம்.
ஆனால் கடந்த காலங்களில், அரசியல் சட்டத்தில் மாற்றங்களைச் செய்தாவது மீண்டும் மீண்டும் தானே அதிபராவதைச் செய்ய பென் அலி தயங்கியதில்லை. ஆனால் தற்போது இருக்கும் அரசியல் சாசனத்தின் பிரகாரம் 75 வயதுக்கு மேல் ஒருவர் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று உள்ள விதியை தான் மதித்து நடப்பேன் என்று பென் அலி கூறியிருக்கிறார். அவருக்கு தற்போது 74 வயதாகிறது.
ஆனால் பென் அலியின் இந்த அறிவிப்பு பற்றி பலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
 இருபத்து மூன்று வருடங்களாக ஆட்சியதிகாரத்தை தன் கையிலேயே வைத்துக்கொண்டிருக்கும் பென் அலியின் வார்த்தைகளை யாராலும் நம்பிக் கொண்டிருக்க முடியாது. 
 
இன்திஸார் கெரிஜி

"இவரது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள், சித்ரவதைகள், ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சிக்காரர்கள் போன்றோர் மாயமாய் மறைந்து போவது, சுயாதீன அமைப்புகள், தொழிற்சங்கங்கள் தடைசெய்யப்படுவது போன்ற விஷயங்கள் தொடர்ந்து நடந்துவந்துள்ளன. துனீஷியாவில் எந்த ஒரு மனித உரிமை அமைப்பும் தடையின்றி செயல்பட அனுமதியில்லை. இந்த நிலை அம்னெஸ்டி போன்ற சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பலவற்றுக்கும் நன்றாகத் தெரியும். ஆகவே கடந்த காலத்தைப் பார்க்கையில், அவர் வார்த்தைகளில் நம்பிக்கை கொள்ள வழியில்லை. "என்கிறார் மனித உரிமை ஆராய்ச்சியாளரும் துனீஷிய அரசியல் விமர்சகருமான இன் திஸார் கெரிஜி.
 

0 commentaires :

Post a Comment