4/30/2011

புலிகளின் பிரதிநிதிகளாகவே தமிழ் கூட்டமைப்பு இன்னமும் செயற்படுகின்றது: கெஹலிய _  ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வரவேற்பது கண்டிக்கத்தக்கதாகும். புலிகளின் பிரதிநிதிகளாகவே இன்னும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த நிலைப்பாட்டிலிருந்து கூட்டமைப்பு மீளவேண்டும் என்று அரசாங்கம் கோரிக்கை விட்டுள்ளது.

நிபுணர் குழுவின் இந்த அறிக்கை குறித்து அண்டைநாடான இந்தியா ஆழமாக சிந்தித்து அவதானம் செலுத்தி மந்தகதியில் செயற்படுகின்றது என்பது தவறானதாகும். இந்தியா புத்திசாதூரியமாகவே செயற்படுகின்றது. அதேபோலவே நிபுணர் குழுவின் அறிக்கையானது இலங்கையில் தமிழ்சிங்கள மக்களுக்கிடையேயான உறவிற்கும் ஐக்கியத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் என தமிழக முதலமைச்சர் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளமை வரவேற்கத்தக்கதாகும் என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தினையிட்டு புதுமையடைவதற்கு ஒன்றுமில்லை, கூட்டமைப்பு புலிகளின் பிரதிநிதிகளாவே அன்றிருந்து செயற்பட்டு வருகின்றது.

அறிக்கையை கூட்டமைப்பு வரவேற்றுள்ளமையை அரசாங்கம் கண்டிக்கின்றது அதேபோல புலிகளின் பிரதிநிதிகளாக செயற்படுவதிலிருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு மீட்சிபெறவேண்டும்.தமிழ் கூட்டமைப்பினரே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனும் தொனிப்பொருளில் சென்றுக்கொண்டிருக்கின்றனர். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ் மக்களின் ஏகபிரதிநிதி என்ற தொனிப்பொருள் கடந்தகாலங்களில் பொய்த்து விட்டது. அது இன்றும் புலனாகிகொண்டிருக்கின்றது எனினும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி நாங்கள் தான் என்ற அந்த நிலைப்பாட்டில் நின்று நிலைப்பதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு முயற்சித்துக்கொண்டிருக்கின்றது.

நீங்கள் கூறுவதை போல இந்தியா இந்த விடயத்தில் மந்தமாக செயற்படுவதாக அர்த்தமில்லை மறுபுறத்தில் அவதானமாக சிந்தித்து புத்திசாதூரியமாக செயற்படுவதாக அர்த்தப்படும். இந்த அறிக்கையினை பாராதீய ஜனத்தா கட்சி வரவேற்றிருந்தாலும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கையானது தமிழ் சிங்கள மக்களின் ஐக்கியத்திற்கு இடையூறு விளைவிக்கும் என்று கூறியுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். அறிக்கை தொடர்பில் இவ்வாறான கருத்துக்கள் வெளியாகுவதே ஜனநாயகத்தின் இலக்கணமாகும்.

இந்த விடயத்தில் அரசாங்கம் எதனையும் மூடிமறைக்கவில்லை மறைப்பதற்கும் முயற்சிக்கவில்லை இது இறைமையுள்ள நாட்டிற்கு முக்கியமான விடயமாகும் என்பதுடன் அரசாங்கம் பொறுப்புகூறுவதற்கு கடமைப்பட்டுள்ளது என்பதனால் மேற்படி விவகாரங்களை தீவிரமாக கணக்கில் எடுத்தே செயற்படுகின்றது என்றார். ___ 
Comments
»»  (மேலும்)

உலக தொழிலாளர் உரிமைகளை வென்றெடுத்த மேதினம் நாளை
நாளை சர்வதேச தொழி லாளர் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே உலகளாவிய ரீதியில் பிரதி வருடமும் வருகின்ற மே முதலாம் நாளை மே தினமாக கொண்டாட சர்வதேச தொழிலாளர் வர்க்கம் ஏகமனதாக முடிவு செய்தது.
இத்தினத்தில் தொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற நிகழ்வுகள், அணிவகுப்பு ஒன்றுகூடல் என்பன முக்கிய பங்கினை வகிக்கின்றன என்றும் கூறலாம். மே தினத்தை தேசிய விடுமுறை தினமாக அநேகம் நாடுகள் அறிவித்துள்ளன. இலங்கையிலும் மே தினத்தை அரசாங்கம் பொது விடுமுறை தினமாகப் பிரகடனப் படுத்தியுள்ளது. இதனால் வர்த்தகம், வங்கிச் சேவையாளர் அடங்கலாக அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பொதுவிடுமுறை தினமாக்கப் பட்டுள்ளது.
அன்றைய தினம் நமது நாட்டிலுள்ள பிரதான அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி என்பன கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் ஊர்வலங்க ளையும், ஒன்று கூடல்களையும் நிகழ்த்தவுள்ளன. அதேவேளை மக்கள் விடுதலை முன்னணி, லங்கா சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தமிழ் தேசியக் கூட்டணி என்பனவும் மே தினத்தை கொண்டாடுகின்றன.
மே தினத்தை தேசிய விடுமுறை தினமாக அநேகம் நாடுகள் அறி வித்துள்ளன.
சால்வேனியா, செர்மியா மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகளில் மே இரண்டாம் திகதியும் தேசிய விடுமுறை தினமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. கரீபிய நாடுகளில் தொழிலாளர் விடுமுறை தினம் மே மாதத்தில் முதல் திங்கட்கிழமையன்று வழங்கப்படுகின்றது. டொமினிக்கா, டொமினிக் குடியரசு, குயீன்ஸ்லாந்து போன்றவற்றில் இந்தக் கொள்கை யையே பின்பற்றுகின்றன.
இனி உலகெங்குமுள்ள பிரதான நாடுகளில் மேதினம் எவ்வாறு கொண்டாடப்படுகின்றது என்பதை விரிவாக ஆராய்வோம். அல்பேனியா வில் மே ஒன்று தேசிய விடுமுறை தினமாக தொழிலாளர் இயக்கத்தினை நினைவு கூரும் விதமாகக் கொண் டாமப்படுகிறது. அல்பேனியாவில் பொதுவுடமை நிகழ்வின் போது அகலமான பிரதான வீதிகளில் ஆடம்பரமான அணி வகுப்பை ஏற்பாடு செய்தது. அணிவகுப்பில் செல்வோர் தொழிலாளர் சமூகத்திற்கு அவசியம் தேவைப்படுகின்ற முக் கியமான உரிமைகளைப் பதாகைகளில் அழகுற எழுதி அவற்றை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு செல்வார்கள். இக்கைங்கரியம் அனைத்துக்குமே தொழிற்சங்கங்கள் உறுதுணை புரிகின்றன என்பது நிதர்சனம் ஆகும்.
அவுஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கத்தை கொண்டாடுகையில் அத்தினம் பொதுவிடுமுறையாக பல்வேறு மாநில மற்றும் பிரதேச அரசாங்கங்களிலும் உறுதி செய்யப் படுகின்றது. அவுஸ்திரேலியாவின் தலைநகர் பிரதேசம் நியூசவுத்வேல்ஸ் (னிலீw ஷிouth தீalலீs) மற்றும் தெற்கு அவுஸ்திரேலியா விக்டோரியா, தாஸ்மானியா ஆகியவற்றிலும் வெகு விமர்சையாக மே தினக் கொண் டாட்டங்கள் நிகழ்கின்றன. அவுஸ்திரே லியாவில் 1856ம் ஆண்டுதான் முதன் முதல் மே தின விடுமுறை வழங் கப்பட்டதாம்.
பாரிய தொழிற்சாலைகள் எங்கு ஆரம்பிக்கப்படுகின்றதோ அங்கு வேலை நிறுத்தங்கள் உருவாகுவது சகஜம். அமெரிக்காவின் சிக்காகோ நகரில் தொழிலாளர்கள் மூன்று நாள். பொது வேலை நிறுத்தம் மேற்கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து பிற்பகலில் பேரணி ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பேரணி நடைபெறுவதை அறிந்த காவல் துறையினர் அங்குள்ளோரை அமைதியாகக் கலைந்து செல்லுமாறு பலமுறை பணித்தும் தொழிலாளர் கலைய மறுத்தனர். இதனையடுத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக நான்கு தொழிலாளர் பலியா கினார்கள். ஆகவே ஆங்காங்கே வன்செயலும் கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஏக காலத்தில் கூட்டத்தை நோக்கி இனந்தெரியாத நபரொருவரினால் குண்டொன்று வீசப்பட்டது இதனால் ஒரு பொலிஸ் உட்பட பன்னிரெண்டு தொழிலாளர் இறக்க நேரிட்டது. பின்னர் தொழிற்சங்கப் பேராட்டங்கள் நடைபெற்றன. இதனால் தொழி லாளர்களுக்கு நாளொன்றுக்கு எட்டு மணித்தியாலங்கள் வேலை நேரம் ஆக்கப்பட்டது. அன்றைய தினத் திலிருந்து மே தினத்திற்கு உகந்த கெளரவம் தொழிற்சாலை நிர்வாகத் தினால் வழங்கப்பட்டு மே தினத்தை தேசிய விடுமுறை தினமாகவும் பிரகடனப்படுத்தினார்கள்.
இனி பிரான்ஸ் நாட்டு மே தினம் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படு கின்றது என்பதைச் சற்றுப் பார்ப்போம். அங்கும் மே ஒன்றைத்தான் மே தினக் கொண்டாட்டங்களுக்கு ஒதுக் கியுள்ளனர்.
பிரான்ஸ்சில் தொழிலாளர் மாணவர்கள் மே தின லில்லியை பிரெஞ்சு வீதிகளில் விற்கும் அதே வேளை அவர்கள் தொழிற்சங்கங்களின் நலனுக்காக வீடு வீடாகச் சென்று நிதி திரட்டுகின்றனர். ஏனைய மே தின நிகழ்வுகள் வழக்கம் போல் நடைபெறுகின்றன.
ஜெர்மனியில் நாசிக் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றில் தொழிலாளர் தினம் அதிகாரபூர்வ விடுமுறை தினமாகத் தொடக்கப்பட்டது. இது மக்களிடையே புதிய ஒன்றுமையை வளர்ப்பதாகக் கருதப்படுகிறது. எமது அண்டை நாடான இந்தியாவில் 1927ம் ஆண்டிலிருந்து மே முதலாம் திகதியை மே தினக் கொண்டாட் டங்களுக்கு தெரிவு செய்யப்பட்டது. அத்துடன் அங்கு தொழிலாளர் வாரத்தையும் கடைப்பிடிக்க தொடங்கினார்கள். மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மே தின வாரம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவதாகவும் அறிய முடிகின்றது மகாராஷ்டரா மற்றும் குஜராத் மாநிலங்கள் 1960 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வாரமும் இதனுடன் அமைந்துள்ளது. சிறப்பு அம்சமெனக் கொள்ளலாம்.
1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்கு முன்னர் ஈரான் பேரரசில் தொழிலாளர் தினமானது கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள அதே நாளில் விடுமுறையாக இருந்தது. ஈரான் இஸ்லாமியக் குடியரசில் எழுபத்தொன்பது முதல் இன்றுவரை தொழிலாளர் தினம் விடுமுறை தினமாக இல்லை. ஆனால் அது சமூகத்தில் முக்கியமான பிரிவினரான தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்க மே முதலாம் திகதி அதிகார பூர்வமாக கொண்டாடப்படுகின்றது.
அயர்லாந்தில் தொழிலாளர் தினம் மே தினத்தில் அதாவது மே மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் வருகின்றது இது பொது விடுமுறையாகும்.
இஸ்ரேலில் மே ஒன்று அதிகார பூர்வமாக கொண்டாடப்படுவதில்லை. ஆனால் ஒவ்வொரு வருடமும் சோசலிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் இளைஞர் இயக்கங்கள் டெல்அவிவில் அணிவகுப்பை ஏற்பாடு செய்து திருப்தியடைகின்றனர்.
இத்தாலியின் மே ஒன்று தேசிய விடுமுறை தினம் ஆகும். வர்த்தக சமூகத்தின் உரிமை தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் பரவலாக இடம்பெறுகின்றன. 1990 களில் இருந்து வர்த்தக அமைப்புக்கள் உரோமில் மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்துடன் மிகப் பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கின்றன.
நியூசிலாந்தில் தொழிலாளர் தினம் மே திங்களில் கொண்டாடப்படுவ தில்லை இங்குதான் ஒரு தொழிலாளி எட்டு மணி நேரம் மட்டும் சேவை யாற்றுவதற்கான அங்கீகாரம் உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு சேவையிலீடுபடும் தொழிலாளர்களுக்கு எட்டு மணித்தியாலம் வேலை நேரமாக மட்டுப்படுத்தப்பட்டது. இங்கும் தொழிலாளர் தினம் பொது விடுமுறை தினமாகப் பிரகடனப்பட்டிருந்தும் வெவ்வேறு மாகாணங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப் பட்டதினால் கப்பலோட்டிகள் அதிகப்படியான விடுமுறையைப் பெறும் வாய்ப்பு தன்னிச்சையாகவே உருவாகிவிடுகிறன்றது. இதனால் கப்பல் உரிமையாளர்கள் பாடு பெரும் திண்டாட்டம் ஆகிவிட்டது. ஒரு துறைமுகத்தில் ஒரு நாளும் அடுத்த துறைமுகத்தில் மற்றொரு நாளும் தொழிலாளர் தினம் கொண் டாடப்படுவதால் கப்பலோட்டிகள் அதிகப்படியான விடுமுறை எடுக் கின்றனர் என்று கப்பல் உரிமையாளர் அங்கலாய்த்தனர். 1910இல் அரசாங்கம் விடுமுறை தினத்தை ‘திங்கட்கிழமை யாக்கியது’ எனவே அது நாடு முழுவதும் அதேநாளில் அனுசரிக்கும் படியாக இருந்தது. இன்றைய தினத்தில் நியூசிலாந்து மக்களுக்கு மேலதிக விடுமுறை தினமாக்கப் பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் யூனியன் ஆப் ரெரோ டெ மோக் கரட்டிகாடே பிலிப்பினாஸ் சின் கீழ் மே தினம் நடத்தப்பட்டது. ஆயிர க்கணக்கான தொழிலாளர்கள் டொண் டாவில் பிளாசா மொரினோஸிலிருந்து ‘மலகனனங்பேலஸ்’ வரையில் அணிவகுத்துச் சென்று பின்னர் பிலிப்பைன்ஸ் கவர்னர் ஜெனரல் அவர்களிடம் மனுவொன்றைக் கையளித்தனர்.
இதனைத் தொடர்ந்து 1908 ஆம் ஆண்டு ஏப்பிரல் எட்டாம் திகதி பிலிப்பைன்ஸ் சட்டமன்றம் மே மாதத்தின் முதல் நாளை தேசிய விடுமுறை தினமாக்கும் சட்டத்தை இயற்றியது. பிலிப்பைன்ஸ் ஒரு பழைய அமெரிக்கப் பிரதேசமாக இருந்ததால் அது லேபர் டே என்று தலைப்பிடப்பட்டு அமெரிக்க ஆங்கிலத்தில் உச்சரிக்கப்பட்டது.
ஒவ்வொரு மே முதலாந் திகதியும் தொழிலாளர் யூனியன்கள் அணிவகுத்து கியூசன்சிட்டி மணிலா எல்லையில் உள்ள மயூஹேரோட்டோண்டா விலிருந்து ப்ளாசா மிராண்டா என்ற முதன்மை வாயிலின் அருகிலுள்ள பாலம் வரையிலும் அணிவகுத்துச் சென்றனர்.
துருக்கியில் 2009 மே ஒன்று தொழிலாளர் மற்றும் ஒருமைப்பாடு தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இது ஒரு பொதுவிடுமுறை தினமாகவும் கருதப்படுகின்றது. அமெரிக்காவில் தொழிலாளர் தினம் என்பது அமெரிக்க பெடரல் விடுமுறை தினத்தில் கொண்டாடப்படுகின்றது. இது தனிப்பட்ட முறையில் கோடையின் முடிவாகவும் குறிப்பாக விடுமுறை காலத்தின் முடிவாகவும் பார்க்கப்படுகின்றது. அடுத்த கல்வியாண்டிற்கு பல பாடசாலைகள் தொழிலாளர் தினம் நிறைவடைந்தபின் வரும் வாரத்தில் திறக்கின்றன. கனடாவிலிருந்து தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டபின்னர் வெள்ளை ஆடையை அணிவதில்லை என்ற மரபை அமெரிக்காவும் ஏற்றுக் கொண்டது.
அது எவ்வாறு இருப்பினும் மே தினத்தை தொழிலாளர் வர்க்கம் தனது உரிமைகளை வென்றெடுத்த பொன்னாளாகக் கொண்டாடி வருகின்றது. ஆகவே மே தினத்தை மதித்து அதற்கு உகந்த கெளரவத்தை அளித்திடல் வேண்டும். இதுவே தொழிற்சங்கவாதிகளின் தலையாய வேண்டுகோளாகும் என்பது வெள்ளிடைமலை.
»»  (மேலும்)

4/29/2011

13 தடவைகள் என் மீது புலிகள் தற்கொலை முயற்சி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈ.பி.டி.பியினர் புலிகளால் கொலை தருஸ்மனின் அறிக்கையில் புலிகளின் கொடூரம் காட்டப்படாதது ஏன்?

ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையினை எழுதியிருப்பவர்கள் ஐ.நா வின் எந்தவொரு அமைப்புக்கும் உரித்தானவர்களல்லர்.
இவர்கள் இலங்கையையும் இலங்கையின் படை வீரர்களினதும் நற்பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் செயலாளர் நாயகத்தினால் கூலிக்கு அமர்த்தப்பட்ட எழுத்தாளர்கள் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஏசியன் ரிபியூன் என்ற இணையத்தளத் துக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது;ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், இந்தோனேசி யாவைச் சேர்ந்த மர்சூக்கி தருஸ்மன், தென்னாபிரிக்காவைச் சேர்ந்த யெஸ்மின் சூக்கா, ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீபன் ராட்னர் ஆகிய மூவர் கொண்ட நிபுணர் குழுவினை நியமித்ததன் மூலம் ஐ. நா. வின் வளங்களையும் நிதியையும் வீணடித்துள்ளார்.
ஐ. நா. செயலாளர் நாயகம், தொடர்ந்தும் தமது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக சுய இலாப நோக்கத்துடன் சில நாடுகளினதும் அமைப்புக்களினதும் அபிலாஷைகளை திருப்திப்படுத்தும் விதத்தில் இலங்கை ஜனாதிபதிக்கும் இராணுவ தலைவர்களுக்கும் அவதூறு ஏற்படும் வகையில் இந்த எழுத்தாளர்களை நியமித்துள்ளார்.
எமது மக்களுக்கான உரிமை களைப் பெற்றுக்கொடுப்பத ற்காக நான் 15 வருடங்களாக இலங்கைப் படையினருக்கு எதிராக ஆயுதமேந்தி மோதல்களை முன்னெடுத்தவன். பின்னர் இந்நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொண்டேன். ஆனால், தற்போது தருஸ்மன் அறிக்கையின்படி, எனது மக்கள் கொல்லப் பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் அவ்வறிக்கையில் குற்றஞ் சாட்டப்பட்டிருப்பதில் எவ்வித உண்மையும் இல்லை. இலங்கைத் தமிழர்கள் சார்பாக பேசுவதற்கு எனக்கு உரிமையும் அதிகாரமும் உண்டு. இந்த தமிழர்களே என்னை அவர்களது பிரதிநிதியாக 1994 ஆம் ஆண்டு முதல் தெரிவு செய்து வருகின்றனர்.
எல். ரீ. ரீ. ஈ. தலைவர் பிரபாகரனின் தவறான அரசியலினால் இந்த நாடு ஆயிரக்கணக்கான அப்பாவி சிவிலியன்களை இழந்துள்ளது. உண்மையில், கடந்த 30 வருடங்களாக வடக்கு, கிழக்கில் கொல்லப்பட்ட 70 ஆயிரம் அப்பாவி மக்களின் மரணங்களுக்கு பிரபாகரனே பொறுப்பானவராவார்.
தோல்வியுற்ற தலைவர் பிரபாகரனும் அவருடன் சேர்ந்த ஏனையோரும் துடைத்தெறியப்பட்ட பின்னரும் மேற்குலகில் எல்.ரீ.ரீ.ஈயினரின் ஒரு பகுதியினர் இன்னமும் செயற்பட்டுக் கொண்டிக்கின்றனர்.
இவர் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. செயலகத்திற்கு உள்ளும் புறமும் எப்போதும் நோட்டம் விட்டுக் கொண்டிருப்பதாகவும் நியூயோர்க்கில் வசிக்கும் சிலர் ஐ.நா. செயலகத்திற்கு மிகவும் நெருக்கமான அதிகாரிகள் வீடுகளுக்குச் சென்று அவர்களுடன் வெளிப்படையாக பழகுவதன் மூலமும் இலங்கை அரசாங்கத்தினை குற்றஞ் சுமத்தியிருக்கும் அறிக்கையினை வெளியிடச் செய்வதற்கான தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் எமக்கு அங்கிருந்து தகவல்கள் கிடைத்த வண்ணமுள்ளன.
துரதிஷ்டவசமாக அவர்கள் நினைத்ததை நடத்தியுள்ளார்கள். இதற்காக ஆயிரக்கணக்கான டொலர்கள் கைமாறியிருப்பதாக நாம் அறிந்தோம்.
எல்.ரீ.ரீ.ஈ யினருடன் இறுதி மோதல் இடம்பெற்ற காலப் பகுதியான 2008 செப்டம்பர் இலிருந்து மே 2009 வரையான காலப் பகுதிக்குள்ளேயே இந்த தருஸ்மன் அறிக்கை எழுதிய குழுவினர் சுய விருப்பின் பேரில் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் காரணமாகத்தான் இக்காலப் பகுதியினுள் வந்துள்ளனர். மோதலின் இறுதித் தறுவாயில், எல்.ரீ.ரீ.ஈ யினரை தமது காலடிக்கு கொண்டு வருவதற்காக படையினர் ஈடுபட்டிருந்த வேளை எல்.ரீ.ரீ.ஈ யினர் மிகவும் துன்பகரமான மற்றும் பயங்கரமான சம்பவங்களுக்கு முகம் கொடுப்பதாக சித்தரித்துக் காட்டியுள்ளனர்.
அவர்கள் தமது கற்பனையில் சேவல் மற்றும் எருமை மாடுகளின் கதைகளை 196 பக்க அறிக்கையாக எழுதியுள்ளனர். நான் ஒரு தமிழ் அமைச்சர் என்ற போதிலும் பிரபாகரன் என்னைக் கொலை செய்வதற்காக 13 தடவைகளுக்கும் மேலாக தற்கொலைப் போராளிகளை என் மீது ஏவியுள்ளார். ஆயிரத்துக்கு மேற்பட்ட ஈ.பி.டி.பி அமைப்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார்கள் எல். ரீ.ரீ.ஈ யினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவை குறித்த விடயங்கள் தருஸ்மன் அறிக்கையில் தவறவிடப்பட்டுள்ளன ஏன்?
பிரபாகரனினாலும் அவரது ஆட்களினாலும் நடத்தப்பட்ட கொலைகள் மற்றும் நாசகரமான சம்பவங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காகவும் நிலையான அரசியல் தீர்வினை ஏற்படுத்துவதற்காகவும் எமது ஈ.பி.டி.பி இயக்கம் 2005 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.
நான் ஒரு தமிழன். இலங்கைத் தமிழன். என்னை தமிழ் மக்களே வாக்களித்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தனர். அப்படியிருக்க, எவ்வித சட்ட ஆதாரமும் இல்லாமல் பொறுப்புள்ள முறையில் குறைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த தருஸ்மன் அறிக்கையினை நான் நிராகரிக்கிறேன்.
இதன்போது கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது ஏதேனும் நாடோ அப்பாவித் தமிழர்களுக்கு நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் தமது இரக்கத்தைக் காட்ட நினைத்தால் அவர்கள் இழப்புகளுக்கான நட்ட ஈடுகளை வழங்க முன்வரவேண்டும். பிரபாகரனும் அவரது ஆட்களினது ஏவப்பட்ட பயங்கரவாத யுத்தத்தினால் கடந்த 30 வருடகாலமாக எனது மக்கள் துன்புற்றிருக்கிறார்கள்.
தால்விகளும் ஏமாற்றங்களும் நிறைந்த 60 வருடகால பயங்கரமான கதைதான் இந்த தமிழர் பிரச்சினை. 1987 இல் செய்யப்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தம், ஒரு சோகக்கதை, ஏமாற்றத்தி லேயே முடிவடைந்தது. ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருந்த பண்டா- செல்வா ஒப்பந்தம், டட்லி- செல்வா ஒப்பந்தம் ஆகியவற்றினூடாகவும் பிரச்சினைக்கான நிலையான தீர்வினைப் பெறமுடியாமல் போனது.
»»  (மேலும்)

4/28/2011

'இலங்கையில் போர்க்குற்றங்கள்' - ஐ.நா. நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை _

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு வெளியிடப்பட்டுள்ளது இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றசாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் விபரம் வருமாறு:

அறிமுகம்

1. கருத்து வேறுபாடுகளுக்கிடையே துன்பம் மிகுந்த விதத்தில் இலங்கையில் யுத்தம் முடிவடைந்தது. அதன் இரக்கமற்ற தன்மைக்கு பெயர்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு 27 வருடங்களுக்குப் பின்னர் ஆயுதமேந்திய மோதல் முடிவுக்கு வந்ததையிட்டு இலங்கையர் பலரும் உலகம் முழுவதில் உள்ள ஏனையவர்களும் மன ஆறுதல் அடைந்தனர். ஆயினும், நாட்டின் ஆயுதப்படையினர் வெற்றியை அடைவதற்காகக் கையாண்ட வழிமுறைகள் பற்றி இலங்கை மற்றும் ஏனைய இடங்களில் உள்ளவர்கள் அதிக மனத்தாக்கம் அடைந்தனர். நாட்டின் வடகிழக்குக் கரையோரப்பகுதியான வன்னியின் ஒரு சிறிய இடத்தில் தப்பியோட முடியாமல் மும்முரமாக யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினருக்கிடையே பல இலட்சக்கணக்கான தமிழ் பிரஜைகள் சிக்குண்டிருப்பதை அதிகரித்து வரும் அச்சத்துடன் பல மாதங்களாக அவர்கள் நோக்கியவண்ணம் இருந்தனர். உயிரிழந்த மற்றும் காயமடைந்த பிரஜைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்தது. அரசாங்க தரப்பிலிருந்து எறியப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள் சிக்கினர்“ அப்பகுதியில் இருந்து தப்பியோட முயற்சித்த போது பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பலரை எல்ரிரிஈ இனர் சுட்டனர். மனிதாபிமான உதவிக்கான தேவை அதிகரித்த போதிலும், அரசாங்கத்தினால் அது தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்பட்டது. அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் அல்லது பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு வசதியாக யுத்தத்தைப் போதியளவு தளர்த்துவதற்கான முயற்சிகள் தடுமாற்றமடைந்தன.

2. மோதல் வலயத்தில் இருந்து பாரபட்சமற்ற அறிக்கை விடுத்தலுக்குத் தட்டுப்பாடு நிலவியதால், 2009 மே மாதம் 19ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி வெற்றியைப் பிரகடனப்படுத்திய நாள் வரை இறுதி இராணுவத் தாக்குதலின் போத என்ன நேர்ந்தது என்பதை சரியாக நிர்ணயிப்பது சிரமாக இருந்தது. ஆயினும், அரசாங்கம் அப்பிரதேசத்தில் இருந்ததாக முன்னர் கூறிய மதிப்பீட்டை அதிக எண்ணிக்கையால் விஞ்சுமளவிற்கு யுத்த வலயத்தில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் 290,000 மக்கள் மூடப்பட்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர். பாரிய காயங்களுக்கு இலக்காகிய பலர் அடங்கிய சுமார் 14,00 மக்கள் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினால் கடல் மார்க்கமாக பாதுகாப்பான இடத்துக்கு அகற்றப்பட்டனர். எல்லா அறிகுறிகளின்படி, மரணித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்ததோடு, இன்று கூட சரியான கணிப்பொன்று நிர்ணியக்கப்படவில்லை. எனினும், "பூஜ்ய பொதுமக்கள் சேதத்துடன்' தான் "மனிதாபிமான மீட்டு நடவடிக்கையொன்றினை' மேற்கொண்டதாக அரசாங்கம் உறுதியாக வாதிட்டு வந்துள்ளது.

3. யுத்தம் முடிவுற்று மூன்று நாட்களுக்குப் பின்னரே செயலாளர் நாயகம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டதோடு மோதல் வலயத்தின் சில இடங்களையும் மோதல் பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான ஒரு முகாமையும் அவர் நேரடியாகப் பார்வையிட்டார். அவரின் விஜயத்தின் முடிவில், இலங்கை ஜனாதிபதியுடன் இணைந்து செயலாளர் நாயாகம் கூட்டு அறிக்கையொன்றை விடுத்தார். இராணுவ நடவடிக்கைகளின் போது நேர்ந்த சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்ட மீறல்கள் பற்றி நடவடிக்கை எடுப்பதற்காக பொறுப்புக்கூறும் ஒரு செயற்பாட்டின் முக்கியவத்துவத்தை செயலாளர் நாயகம் அதில் வலியுறுத்தினார் என்பதோடு அத்தகைய இன்னல்கள் பற்றிய நடவடிக்கை எடுப்பதற்கு ஜனதிபதி இணக்கம் தெரிவித்தார். நிபுணர்கள் குழுவின் நியமனம் அந்த கூட்டு அறிக்கையின் தொடர் நடவடிக்கையாக செயலாளர் நாயகத்தினால் மேற்கொள்ளப்பட்டதாகும்.

4. யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பான கூட்டு இணக்கப்பாட்டை அமுல் செய்வது பற்றி செயலாளர் நாயகத்துக்கு அறிவுரை வழங்குவது குழுவின் ஆணையாகும். இவ்வறிக்கையில் இக்குழு குற்றஞ்சாட்டப்பட்ட சர்வதேச சட்டங்களின் மீறல்களின் சுபாவம் மற்றும் அவற்றின் நோக்கெல்லை அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் பதில் ஆகியவற்றை மதிப்பீடு செய்கிறது. குறிப்பாக, கற்ற பாடங்கள் மற்றும் மீளிணைக்கப்பாட்டு ஆணைக்குழு சர்வதேச தரங்கள் மற்றும் ஒப்பீட்டளவிலான அனுபவங்கள் ஆகியவற்றின் பின்னணியில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இலங்கையின் சட்ட அமைப்பு மற்றும் பொறுப்பக் கூறல் தொடர்பான உள்நாட்டு நிறுவனங்களையும் குழு மறுபரிசீலனை செய்கிறது. அதன் செயற்பாடு முழுவதிலும், இலங்கையின் வரலாற்று மற்றும் அரசியல் சூழ்நிலைப் பொருத்தங்களையும் பொறுப்புக் கூறல் பற்றிய இலங்கையின் தற்கால சூழலையும் குழு கவனத்துக்கு எடுத்துக் கொண்டது. இவ்வறிக்கை குழு மேற்கொண்ட செயற்பாட்டின் பிரதிபலானாகவுள்ளதோடு சிபாரிசுகள் தொகுதிகளாக செயலாளர் நாயகத்துக்கான அறிவறுத்தலையும் அது உள்ளடக்குகிறது.

1. ஆணை, தொகுப்பு மற்று வேலைத் திட்டம்.

அ. குழுவினை அமைத்தல்.

5.இலங்கையின் ஆயுத மோதலின் இறுதிக் கட்டங்களின்போது குற்றஞ் சாட்டப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்ட மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறல் விடயங்கள் பற்றித் தனக்கு அறிவுரை வழங்குவதற்காக 2010 யூன் 22ஆம் திகதி இக்குழுவின் நியனமத்தை செயலாளர் நாயகம் அறிவித்தார். குழுவின் நோக்கெல்லை பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டது: செயலாளர் நாயகமும் இலங்கை ஜனாதிபதியும், 2009 மே 23ஆம் திகதி நாட்டுக்கான செயலாளர் நாயகத்தின் விஜயத்தின் முடிவில் விடுத்த கூட்டு அறிக்கையில், இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இராணுவ நடவடிக்கைகளின் போது நேர்ந்த சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்ட மீறல்கள் பற்றி நடவடிக்கை எடுப்பதற்காக பொறுப்புக்கூறும் ஒரு செயற்பாட்டின் முக்கியவத்துவத்தை செயலாளர் நாயகம் அதில் வலியுறுத்தினார். அத்தகைய இன்னல்கள் பற்றிய நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார். இத்தருணத்தில் மற்றும் இதன் பின்னணியில்:

1. யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பாக சொல்லப்பட்ட உறுதிப்பாட்டினை அமுல் செய்வதற்காக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை அமைப்பதற்கு செயலாளர் நாயகம் தீர்மானித்தார்.

2.குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லை பற்றியவற்றைக் கவனத்துக்கெடுத்து, கூட்டு அறிக்கையின் பொறுப்புக் கூறுவதற்கான செயற்பாட்டு பற்றிய உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான தோதான முறைமைகள், ஏற்படைத்தான சர்வதேச தரங்கள் மற்றும் ஒப்பீட்டளவிலான அனுபவம் பற்றிய செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவது குழுவின் குறிக்கோளாகும்.

3.ஏற்ற மற்றும் சம்பந்தப்பட்ட அனுபவத்தைக் கொண்ட மூன்று உறுப்பினர்களை அது கொண்டிருக்கும். குழு அதற்கென்றே தனது செயற்பாட்டு முறைமைகளை ஏற்படுத்திக் கொள்வதோடு OHCHR இன் துணையோடு செயலயகமொன்று அதற்கு உதவி வழங்கும்.

4.அது செயற்பாட்டை ஆரம்பித்து நான்கு மாதங்களுக்குள் குழு அதன் அறிக்கையை செயலாளர் நாயகத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும். 5.குழுவுக்கான நிதியளிப்பு செயலாளர் நாயகத்தின் எதிர்பாரான நிகழ்வுகள் வரவு செலவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

6.மர்சுக்கி தாருஸ்ஸமான் (இந்தோனேசியா), தலைவர்; ஸ்ரீவன் ரத்னர் (ஐக்கிய அமெரிக்கக் குடியரசு“ மற்றும் யஸ்மின் சூக்கா (தென் ஆபிரிக்கா) ஆகியவர்களை குழுவின் உறுப்பினர்களாக செயலாளர் நாயகம் நியமித்தார்.

ஆ. குழுவின் ஆணை

1.குழுவின் சகலதையும் உள்ளிட்ட பொறுப்பு

7.செயலாளர் நாயகத்துக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையிலான 2009 மே 23ஆம் தேதிய கூட்டு அறிக்கையை சகல குற்றஞ்சாட்டல்கள் பற்றிய உண்மையான சுபாவம் மற்றும் நோக்கெல்லை பற்றி அமுல் படுத்துவதற்காக இலங்கை இதுகாலவரை மேற்கொண்ட மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டியவை பற்றி செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவது குழுவின் பணியாகும். இவ்வாறாகக் குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்று இலகுவாகத் தாக்கமுறக் கூடிய குழுக்களுக்கெதிரான தெளிவான மீறல்கள் உள்ளிட்ட சர்வதேச மனிதாபினமா மற்றும் மனித உரிமைகள் சட்டங்களின் மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறல் பற்றிய முறைமைகள், தரங்கள் மற்றும் ஒப்பீட்டளவிலான அனுபவங்கள் மீது குழு பரவலாகக் கவனம் செலுத்தியது. இப்பிரச்சினை தொடர்பான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் தற்கால அணுகுமுறை பற்றி இயன்றவரை முழுமையானதொரு காட்சியைக் கண்டு பிடிக்க அது முயற்சியெடுத்துள்ளது. இலங்கையின் உள்நாட்டு மற்றும் சர்வதெச கடப்பாடுகளை அவை நிறைவு செய்கின்றனவா மற்றும் எவ்வளவு தூரம் அவை சிறந்த சர்வதேச நடைமுறைகளை பிரதிபலிக்கிறது என்பதை நிர்ணயிப்பதற்காக பொறுப்புக் கூறல் தொடர்பாக தோதான அல்லது தோதான நிலைச்சக்தியைக் கொண்ட இலங்கையின் உள்நாட்டுப் பொறித்தொகுதியையும் அது ஆராய்ந்தது. இறுதியாக, யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் பொறுப்புக் கூறல் தொடர்பான அரசாங்கத்தின் தற்கால கொள்கைகளையும் குழு கவனத்துக்கெடுத்துக் கொண்டது. கற்ற பாடங்கள் மற்றும் மீளணிக்கப்பாட்டு ஆணைக்குவினை அமைத்தலை இக்கொள்கைகள் உள்ளிட்டது.

8.கடந்த கால மனித உரிமைகள் மற்றும் கௌரவம் ஆகியவற்றின் மீறல்கள் தொடர்பாக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் அரசியல், சட்ட மற்றும் நல்லொழுக்கப் பொறுப்புக்களை நிர்ணயிப்பதில் விரிவானதொரு செயற்பாடாக பொறுப்புக்கூறலை குழு நோக்குறிது“ உண்மை, நீதி, மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நக்ஷ்ட ஈடு ஆகியவற்றையும் பொறுப்புக்கூறல் உள்ளடக்குகிறதோடு, மோதலுக்குப் பின்னர் ஒரு நாட்டில் நிலைத்தகவுள்ள சமாதானத்தை அடைவதற்காக பாரியதொரு செயற்பாட்டின் ஒன்றிணைந்த அம்சமாகவுள்ளது.

பின்னர் இந்த அறிக்கையில் பொறுப்கூக்கூறலின் அம்சங்களையும் பொறுப்புக்கூறல் பற்றிய இலங்கை அரசாங்கத்தின் கருத்துக்களையும் இக்குழு விளக்குகிறது.

9.சூன்யத்தில் பொறுப்புக்கூறலுக்கான தரங்கள் மற்றும் பொறித்தொகுதிகளை ஆராய முடியாது என்பதோடு, "குற்றம்சாட்டப்பட்ட மீறல்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லை தொடர்பாக' செயலாளர் நாயகத்துக்கு அதன் ஆலோசனையை வழங்க வேண்டும் என்பதை குழுவின் வரையறை நோக்கெல்லை சுட்டிக் காட்டுகிறது. "சுபாவம் மற்றும் நோக்கெல்லை' என்பது குற்றச்சாட்டுக்களின் அளவு மற்றும் சட்ட தகைமைகள் என்பதைக் குறிக்கிறது. குற்றச்சாட்டுக்களின் அளவினை வருணிப்பதற்காக, குழு பல்வேறு மூலங்களின் இருந்து தகவலைப் பெற்று, சட்டத்தின் அடிப்படையில் அவற்றைச் சீர்தூக்கிப்பார்த்து, பொறுப்புக்கூறல் பற்றிய கூட்டு அறிக்கையை செயற்படுத்துவது தொடர்பில் செயலாளர் நாயகத்துக்கு சிறந்த ஆலோசனையை வழங்குவதை இவ்வேற்பாடு தேவைப்படுத்தியது. அது சர்ச்சைக்குள்ளான உண்மைகள் பற்றி நிஜத் தீர்மானங்கைளை எடுக்கவில்லை என்பதால் வழக்கமான ஐக்கிய நாடுகள் சொற்றொடர் குறிக்கும் உண்மையைக் கண்டறியும் நடவடிக்கையை குழு மேற்கொள்ளவில்லை என்பதோடு நாடுகள், நாடற்ற அமைப்புக்கள் அல்லது தனிநபர்களின் சட்டப்படியான பொறுப்பு அல்லது குறைகூறத்தக்க நிலை பற்றிய தீர்மானங்களை எடுப்பதற்கான முறைசாநர்ந்த புலனாய்வொன்றையும் மேற்கொள்ளவில்லை.

10. குற்றச்சாட்டுக்கள் பற்றிய மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய பல்வேறு முறைமைகள் பற்றிக் குழு மேற்கொண்ட மதிப்பீட்டின் அடிப்படையில், இலங்கையில் பொறுப்புக்கூறலை தொடர்வதற்கான சிபாரிசுகள் தொகுதியொன்றை செயலாளர் நாயகத்தின் பாவனைக்காக குழு முன் வைத்துள்ளது. குழு அதன் கடமையைச் செய்யும் கால வரையறையின் போது அதற்குக் கிடைத்த தகவல் மற்றும் கிடைத்த இலக்கியங்களின் அடிப்படையில் இவ்வறிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

(தொடரும்) _
»»  (மேலும்)

ஐ நா அறிக்கை - புலம்பெயர் தமிழர் மீது குற்றச்சாட்டு

இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் நிகழ்ந்த விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலருக்கு ஆலோசனை கூற அமைக்கப்பட்ட மூவர் குழுவின் அறிக்கையில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் செயல்பாடுகளும் கணிசமாக விமர்சிக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளுக்கு கணிசமான பொருளுதவியையும், தார்மீக ஆதரவையும் பல ஆண்டுகளாக புலம் பெயர் தமிழர்கள் வழங்கி வந்துள்ளனர் என்றும் இவர்கள் இலங்கை அரசு மீது மனக்குறைகளை கொண்டிருக்கின்றனர் என்றும் ஐ நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரம் விடுதலைப் புலிகள் செய்யும் அத்து மீறல்களையும், வன்னியில் நடைபெற்ற மனிதப் பேரழிவில் புலிகள் வகித்த பங்கு குறித்தம் ஒப்புக் கொள்ள புலம் பெயர் தமிழர்கள் மறுப்பது, நீடித்த அமைதியை உருவாக்க தடையாக இருப்பதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
போரின் இறுதி கட்டத்தில் வன்னிப் பகுதியில் பல்லாயிரக்கணக்கானோரை கட்டாயமாக பிடித்து வைத்திருந்தது, தப்பிச் செல்ல முயன்றோரை வன்முறையால் தடுத்தது, சிறார்களை பலவந்தமாக படையணிகளில் சேர்த்தது போன்ற விடயங்களை புலிகள் செய்தாலும் புலம் பெயர் தமிழர்கள் பலர் இது பற்றி பேசத் தயங்கியதாக கூறப்பட்டுள்ளது.
ஈழம்
வன்னிப் போரில் இரு தரப்புக்கும் இடையே சிக்கித் தவிக்கும் போது மக்களை காப்பாற்றுவதை விட தமிழ் ஈழம் என்ற அரசியல் கோட்பாட்டை காப்பாற்றவே புலம் பெயர் தமிழர்களில் ஒரு சாரார் முன்னுரிமை அளித்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் மாபியா கும்பல் போன்ற நடவடிக்கைகளை கைக் கொண்டு புலம் பெயர் தமிழர்களிடம் நிதி வசூல் செய்தார்கள் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் சார்பு அமைப்பாக வெளி நாடுகளில் செயல்பட்ட அமைப்பு தற்போது தனியார் வர்த்த அமைப்புக்கள் மூலம் இயங்குவதாகவும், சில கோயில் நிதிகளில் அது ஆதிக்கம் செலுத்துவதாகவும் ஐ நா கண்டறிந்துள்ளது.
பணம்
புலம் பெயர் தமிழர்களிடமிருந்தும், பிற வழிகளில் இருந்தும் விடுதலைப் புலிகள் பெற்ற பணம் இன்னமும் இருப்பதாகவும், அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நலனுக்கு அது செலவிடப்பட வேணடும் என்றும் அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
புலம் பெயர் தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கும் - புலிகளின் அதிதீவிர தமிழ் தேசியத்துக்கும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியமை இலங்கை தமிழர்கள் மத்தியில் எதிர்மறையான விளைவுகளை - அதாவது பிளவுகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் இந்த அறிக்கை இது சிங்கள தேசியத்தை பலப்படுத்தவும் வழி வகுத்ததாக கூறியுள்ளது. இலங்கையில் வாழும் அனைத்து இனத்தினர் மட்டுமல்லாது - புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர்களும்- தமக்கு பொதுவான தாயகத்தில்- மற்றவர்களின் உரிமைகளை மதித்துப் போற்றி வாழ்வதில்தான் இலங்கைக்கு ஸ்திரமான எதிர்காலம் ஏற்படும் என்று யோசனை கூறப்பட்டுள்ளது.
நல்ல கல்வியறிவும், பொருளாதார வளமும் பெற்றுள்ள புலம் பெயர் தமிழர்களால் இலங்கையின் எதிர்காலத்தில் மேலும் ஆக்கபூர்வ பங்களிப்பை வருங்காலத்தில் வழங்க முடியும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
 
»»  (மேலும்)

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல்.

கிழக்கு மாகாண சபையால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் மாகாண சபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் கிழக்கு மாகாண சபையினால் கிண்ணியாவில் நடாத்தப்பட இருக்கின்ற கண்காட்சி தொடர்பாகவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையில் ஆளும் கட்சி எதிர்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
»»  (மேலும்)

தருஸ்மன் அறிக்கை; மட்டு மாநகரசபையில் கண்டனத் தீர்மானம்

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கைக் கெதிராக மட்டக்களப்பு மாநகர சபை கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
நேற்றுக் காலை மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் தலைமையில் கூடிய மாநகர சபை உறுப்பினர்கள் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றினர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, புளொட், ஈ. பி. ஆர். எல். எப். உறுப்பினர்கள் கண்டனப் பிரேரணை அங்கீகாரத்தின் போது அமர்வில் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈரோஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிகளின் உறுப்பினர்கள் சபையில் சமுகமளித்திருக்கவில்லை. இதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினரும் பிரதி மேயருமான ஜோர்ஜ் பிள்ளையும் இத்தீர்மான நிறை வேற்றத்தை பகிஷ்கரித்து சபையில் சமுகமளித்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சபையில் உள்ள ஒரேயொரு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான என். கே. றம்ழானும் பகிஷ்கரிப்பிலே ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
சபையில் உள்ள 19 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்களின் ஆதரவுடன் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மாநகர மேயர் தெரிவித்தார்.
»»  (மேலும்)

தருஸ்மன் அறிக்கை சட்டரீதியானதல்ல ஒருதலைப்பட்சம் என சு.க நிராகரிப்பு

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை சட்ட ரீதியானது அல்ல. ஒரு தலைப்பட்சமாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை. இதனை முழுமையாக நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்கள் நேற்று தெரிவித்தனர். அறிக்கை வெளியிடப்பட்டமைக்கு கட்சி என்ற வகையில் தமது கண்டனத்தையும், அதிருப்தியையும் தெரிவித்துக்கொள்வதாகவும் தலைவர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறான ஒரு அறிக்கையை வெளியிடவோ, தயாரிப்பதற்கோ, சட்ட ரீதியான, சாசன ரீதியான, ஒழுக்க ரீதியான உரிமை கிடையாது என்றே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவிக்கிறது என கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜயந்த, சரத் அமுனுகம, டலஸ் அழகப்பெரும ஆகியோர் நேற்று தெரிவித்தனர்.
சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை பற்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக தெரிவிக்கும் நோக்குடன் மகாவலி கேந்திர நிலையத்தில் நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டின்போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.இது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஒரு ஆலோசனைக் குழு மட்டுமே.
இந்த குழு நியமிக்கப்படும் போதே அதனை இலங்கை அரசு எதிர்த்தது. இவ்வாறான ஒரு குழு நியமிப்பதற்கான அவசியம் இல்லை என்பதை ஆரம்பம் முதலே எமது அரசு வலியுறுத்தி வந்தது. இதுவே எமது அரசினதும் கட்சியினதும் நிலைப்பாடாகும்.
ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காகவே குழு நியமிக்கப்படுகிறதே தவிர இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்துவதற்கல்ல என்பதையும் ஐ.நாடுகள் செயலாளர் நாயகமும் தெரிவித்திருந்தார்.
எனவே இந்த குழுவின் அறிக்கையை வெளியிடவோ அல்லது வேறு எந்த விதமான நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தவோ அவர்களுக்கு சட்ட ரீதியான, சாசன ரீதியான, ஒழுக்க ரீதியான உரிமை கிடையாது. அவர்கள் ஐ.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்காக மட்டும் இதனை பயன்படுத்த வேண்டும்.
ஐ.நா. சபையின், ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் அல்லது, வேறு அமைப்பின் அனுமதி பெறப்படாமலேயே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. எனவே ஒருதலைப்பட்சமாக ஐ.நா. செயலாளரினால் எடுத்த முடிவுக்கமைய அமைக்கப்பட்ட குழு அத்துடன் ஒருதலைப்பட்சமாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அறிக்கையே இது என ஸ்ரீல. சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம
இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்துவதற்கு நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மிகவும், சுதந்திரமாக வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் சென்று விசாரணை நடத்துகிறது. இந்த விசாரணைகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையாக நடத்தப்படுகிறது.
இவ்வாறான விசாரணைகளின் அறிக்கை வெளியிடப்படும் வரை அறிக்கையை வெளியிடவேண்டாம் என இந்த நாட்டிலுள்ள புத்தி ஜீவிகள், அமைப்புகள் பல வேண்டுகோள் விடுத்திருந்தன. எனினும் இவற்றை பொருட்படுத்தாமல் தருஸ்மன் அறிக்கை வெளியிடப்பட்டது.
இதனை ஐ.நா. நிபுணர் குழு என ஊடகங்கள் தப்பான அர்த்தத்துடன் அழைக்கிறது. இது ஒன்றும் நிபுணர் குழு அல்ல. ஐ.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு மட்டுமே.
பொதுசன ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த எம்.பி.
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் பிரகாரம் உலக நாடுகள் மத்தியில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதே பிரதான நோக்கம்.
எனினும் அறிக்கை வெளியிட்டதன் மூலம் ஐக்கியப்படுத்துவதற்கு பதிலாக பிளவை ஏற்படுத்துவதுடன் பிளவை மேலும் மேலும் அதிகரிப்பதாக அமையும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான எமது அரசு புலிகள் இயக்கத்தை முற்றாக ஒழித்துள்ளது. இன்னும் உலக நாடுகள் சில புலிகள் இயக்கத்தை தடைசெய்துள்ளது. புலிகள் இயக்கம் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தார்கள். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பிரபாகரன் தான் குற்றவாளி என்பதையும் நிரூபித்தார்கள்.
இந்தியாவின் இந்த நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக எவரேனும் சவால் விடுத்தார்களா? இல்லை. உலகில் எந்த ஒரு நாடும், எந்த ஒரு அமைப்பும் இது தவறு எனக் கூறவில்லை.
இவ்வாறான ஒரு புலிகள் அமைப்பை பரிசுத்தமானவர்கள் என காண்பிக்கப் பார்க்கிறார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் அமைச்சர் டலஸ் அழகப் பெரும எம்.பி
ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கைக்கும் இடையே முரண்பாடு என்றும், ஐ.நா. செயலாளருக்கும் இலங்கைக்கும் இடையே முரண்பாடு என்றும் ஐ.நா. வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையே தனிப்பட்ட முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் சிலர் வெளிக்காட்ட முனைகிறார்கள் என்பது எமக்கு நன்றாக தெரிகிறது.
எனினும் ஐ.நாவுக்கும் இலங்கைக்கும் ஐ.நா. செயலாளருக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் இடையில் எந்தவொரு தனிப்பட்ட முரண்பாடுகளும் கிடையாது என்பதை பொறுப்புடன் கூற விரும்புகிறேன். இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலும் ஐ.நாவின் உறுப்புரிமை பெற்றுள்ளமையின் ஊடாக அதன் கெளரவத்தை பேணுவோம். உறுப்புரிமை பெற்றுள்ளதை கெளரவமாகவும் கருதுகிறோம்.
ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கவென நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர் சிலரது தனிப்பட்ட கருத்துக்களை அமைப்பின் கருத்துக்களாக அர்த்தப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட ஒரு முயற்சியே இது என்றும் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

4/26/2011

வெருகலில் நடாத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர்

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு  23ம் படைப்பிரிவு ராணுவ வீரர்களால் வெருகலில் நடாத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டபோது.
»»  (மேலும்)

ஆசிரியர் சமமின்மையை நீக்கும் முதற்கட்ட நடவடிக்கை

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் திருகோணமலை விஜயத்தின் போது கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் சமமின்மை காணப்படுவதையும், இதனை உடன் சமப்படுத்தி சகல மாணவர்களுக்கும் சமகல்வி வாய்ப்பு கிடைப்பதை உறுதிப்படுத்துமாறும் கூறினார்.
நாட்டின் சகல மாணவர்களுக்கும் சமகல்வி வாய்ப்பு வழங்க வேண்டும் எனும் ‘மகிந்த சிந்தனை’க்கமைவாக சகல மாணவர்களுக்கும் சமகல்வி வாய்ப்பை உறுதிப்படுத்த கிழக்கு மாகாணத்தின் கௌரவ ஆளுனர், கௌரவ முதலமைச்சர், கௌரவ கல்வி அமைச்சர் ஆகியோரின் வழிகாட்டலுக்கமைவாக இத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. ஏனெனில் கிழக்கு மாகாணத்தின் பல பாடசாலைகளி;ல தேவைக்கும் மேலதிகமாக ஆசிரியர்கள் குவிக்கப்பட்டுள்ள அதே வேளை வேறு பல பாடசாலைகளில் போதிய ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் தமது அடிப்படைக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட நிலையில் துன்பப்படுகின்றனர்.
திருகோணமலை, பட்டிருப்பு, கல்முனை, அக்கறைப்பற்று, சம்மாந்துறை, அம்பாறை ஆகிய வலயங்களில் 1131 மேலதிக ஆசிரியர்கள் நேரசுசூசி இன்றி காணப்படுவதுடன் இவர்களுக்காக மாதாந்தம் சுமார் 17 மில்லியன் ரூபாய்கள் சம்பளமாக வழங்கி அரச நிதி வீண் விரயம் செய்யப்படுகின்றது.
இதே வேளை, மூதூர், கந்தளாய், கிண்ணியா, திருகோணமலை வடக்கு, கல்குடா, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு, மகா ஓயா ஆகிய வலயங்களில் 872 ஆசிரியர்களுக்கான தேவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பல்வேறு செல்வாக்குகள் மூலம் பெரும்பாலும் நகர்ப்புற பாடசாலைகளில் மேலதிகமாக குவிக்கப்பட்டுள்ள இவ்வாசிரியர்காளல், அப்பாவி கிராமப்புறபாடசாலை மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். கிராமப்புற பாடசாலைகளின் வெற்றிடங்களுக்காக நியமிக்கப்படும் பல ஆசிரியர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் மருத்துவ காரணஙகளைப் பயன்படுத்தி நகர்ப்புறங்களுக்கு மாற்றம் பெற்றும் சென்று விடுகின்றனர். இதனால் மாகாணத்தின் ஆசிரியர் தேவை வெளிப்படையாக பூர்த்தி செய்யப்பட்டது போன்ற பிரமை ஏற்படுத்தப்பட்டாலும் பல அப்பாவி மாணவர்கள் ஆசிரியர்களின்றி அநாதரவாகக் கைவிடப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக மாகாணம் முழுவதிலுமுள்ள பாடசாலைகளில் 2213 ஆசிரியர்கள் பாடரீதியாக மேலதிகமாகவும், 1749 ஆசிரியர்கள் பாடரீதியாக பற்றாக்குறையாகவும் காணப்படுகின்றனர். கிழக்கு மாகாணத்தில் ஒரு சில பாடவகுதிகளைத் தவிர ஏனைய பாடங்களில் மேலதிக ஆசரியர் இருக்கத்தக்கதாக, ஆசியர்கள் தேவை இல்லாத பாடசாலைகளுக்கு மேலதிக ஆசிரியர்காக நியமிக்கப்பட்டு நியமன நோக்கத்துக்கு மாறாக பயன்படுத்தப்படுவதால் ஆசிரியர் தேவையுள்ள மாணவர்கள் கைவிடப்படுவதுடன், மூலம் அவர்களது கல்விக்கான உரிமையும் மறுக்கப்படுகின்றது. இது அடிப்படை உரிமை மீறல் மட்டுமன்றி இவ்வாறான தவறான ஆளனிப் பயன்பாடு மூலம் விரயம் செய்யப்படும் அரச நிதிக் கையாளுகை சட்டரீரியாக குற்றச் செயலாகும்.
எனவே, ஆசிரியர் தேவையினை சமன்செய்ய வேண்டிய பொறுப்பும், அரச நிதி வீண் விரயத்தைத் தவிர்க்கும் கடமையும் மாகாண கல்விப் பணிப்பாளருக்கும், வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் உரியது என்பதை உணர்ந்து ஆசிரியர் சமமின்மையை நீக்கும் முதற்கட்ட நடவடிக்கையாக பாடரீதியாக காணப்படும் மேலதிக ஆசிரியர்களை பாடரீதியாக தேவையுள்ள பாடசாலைகளுக்கு இடமாற்றும் திட்டத்தினை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்விடமாற்றத் திட்டம் இரு வகுதிகளைக் கொண்டது.
1.    வலய மட்டத்தில் பாடரீதியாக காணப்படும் ஆசிரியர் சமமின்மையை நீக்குதல்
2.    வலயங்களுக்கிடையில் பாடரீதியாக காணப்படும் ஆசிரியர் சமமின்மையை நீக்குதல்
»»  (மேலும்)

சித்தாண்டி பிரதேசத்தில் வெள்ள நீரை வெளியேற்ற முதலமைச்சரினால் விசேட வடிகால் அமைப்பு

வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களில் சித்தாண்டி முதலிடம் வகிக்கிறது. இப் பிரதேசத்தில் சிறிய மழை பெய்தாலும் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகின்றது. இதற்கான காரணம் ஒழுங்கான வடிகால் அமைப்பு இல்லை என்பதுதான். இதனைக் கருத்திற்கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன் தனது விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் சித்தாண்டி முச்சந்தியிலிருந்து தொடங்கி முறக்கொட்டான் சேனை ஆற்றில் விழும் விதம் நவீன முறையில் வடிகால் அமைக்கப்பட இருக்கிறது. இதனால் இப் பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்தமுடியும் என அப் பிரதேச மக்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.முதலமைச்சர் சந்திரகாந்தன் வடிகால் அமைக்கப்படுவுள்ள இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டதனை படத்தில் காணலாம


»»  (மேலும்)

குவாண்டனாமோ சிறையில் நிரபராதிகள்: விக்கிலீக்ஸ்

குவாண்டனாமோ பே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் பெரும்பங்கினர் ஒன்று நிரபராதிகள் என்றோ அல்லது வெறுமனே கீழ் மட்டத்தில் செயல்பட்டவர்கள் என்றோதான் அமெரிக்க அதிகாரிகள் நம்பியிருந்தனர் என்று விக்கிலீக்ஸ் கசியவிட்டுள்ள ஆவணங்கள் காட்டியுள்ளன.
டெய்லி டெலிகிராஃப், வாஷிங்டன் போஸ்ட் போன்ற நாளிதழ்களில் தற்போது வெளிவந்துள்ள ஆவணங்கள், குவாண்டனாமோ பே சிறையில் பல்வேறு காலகட்டங்களிலுமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த எழுநூற்று எண்பது பேர் பற்றி ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட மதிப்பீடுகள் பற்றி தகவல் தருகின்றன.
முன்னர் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களில் சுமார் நூற்று ஐம்பது பேர், நிரபராதிகளாக கருதப்படக்கூடிய ஆப்கானியர்கள் மற்றும் பாகிஸ்தானியர் என்று ஆய்வுகள் மூலம் செய்யப்பட்ட மதிப்பீடுகளில் வருணிக்கப்பட்டுள்ளனர்.
இதில் வேறு 380 பேரும்கூட கீழ் மட்டத்தில் செயல்படுபவர்கள் என்றேதான் அமெரிக்க அரசாங்கத்தால் செய்யப்பட்டுள்ள ஆய்வுகளால் மதிப்பிடப்பட்டுள்ளனர்.
மொத்தம் 780 பேரில் வெறும் 220 பேர்தான் ஆபத்து மிக்க பயங்கரவாதிகளாக இந்த மதிப்பீடுகளில் கருதப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேறு ஒருவர் என்று தவறுதலாகக் கருதப்பட்டதால் கைது செய்யப்பட்டு வருடக் கணக்கில் குவாண்டனாமோ பேயில் அடைபட்டிருந்தவர்களும் இருக்கிறார்கள் என்று அமெரிக்க அரசாங்கக் குறிப்புகள் காட்டுகின்றன.
குபாவில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளமான குவாண்டனாமோ பேயில் தற்சமயம் உள்ள இந்த தடுப்புக் காவல் மையத்தில் நூற்று எண்பதுக்கும் சற்றுக் கூடுதலானவகள் மட்டுமே அடைபட்டுள்ளனர்.
போதிய கண்காணிப்பு இன்றி விடுவிக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு ஆபத்து விளைவிப்பார்கள் என்று கருதப்படக்கூடியவர்கள் அவர்கள் என்று கருதப்படுகிறது.
பயங்கரவாதத் தாக்குதல் சதித் திட்டங்கள்
தவிர அதிர்ச்சி தரும் வகையிலான பயங்கரவாத சதித்திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தமை குறித்தும் அமெரிக்க அரசாங்கம் நடத்திய ஆய்வுகளில் தெரியவந்திருந்தது.
ஒசாமா பின் லேடன் பிடிபடும் பட்சத்தில் தாங்கள் மறைத்துவைத்துள்ள அணு ஆயுதத்தை ஐரோப்பாவில் வெடிப்பது என்ற ஒரு திட்டமும், அமெரிக்காவின் பொதுக் கட்டிடங்களின் குளிரூட்டும் கருவிகளில் சைனைட் என்ற கொடிய விஷத்தை கலப்பது என்ற ஒரு திட்டமும், லண்டனின் ஹீத்ரு விமான நிலைய ஊழியர்களை தமது ஆளணியில் சேர்க்க அல்கைதாவினர் முயற்சி மேற்கொள்ளவது என்ற திட்டமும் தீட்டப்பட்டிருந்ததாக கசிந்துள்ள ஆவணங்கள் தகவல் தருகின்றன.
இந்த ரகசியத் தகவல்கள் வெளியில் கசிந்திருப்பது துரதிருஷ்டவசமானது என்றும், இந்தக் கூற்றுக்கள் எல்லாம் அந்தந்த காலகட்டத்துக்குரிய விஷயங்கள் என்றும், தற்போதைக்கு இவையெல்லாம் காலாவதியாகிப் போய்விட்டுள்ளன என்றும் அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகான் வருணித்துள்ளது.
»»  (மேலும்)

ரூ. 40 ஆயிரம் கோடி *சாய்பாபாவின் வாரிசு யார்?

 சாய்பாபாவின் மறைவைத் தொடர்ந்து புட்டபர்த்தியில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அவரது அடுத்த வாரிசு யார், ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் எதிர்காலம் என்ன என்பது பெரும் கேள்விக்குறியை ஏற் படுத்தியுள்ளது. இருப்பினும் பகவான் சாய்பாபாவின் வாரிசு யார் என்பது இப்போதைக்கு அறிவிக்கப்படாது என்றே தெரிகிறது. சில காலத்திற்கு அறக்கட்டளை நிர்வாகிகளே நிர்வாகத்தை தொடர்ந்து நடத்துவார்கள் என்றும் தெரிகிறது.
கிட்டத்தட்டட ரூ. 40 ஆயிரம் கோடி முதல் ரூ. 1 இலட்சம் கோடி அளவுக்கு சொத்துக்களைக் கொண்டுள்ளது. சாய்பாப அறக்கட்டளை, இதை நிர்வகிப்பது தொடர்பாக அறக்கட்டளை உறுப்பினர்களுக் கும், பாபாவின் குடும்பத்தினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. பகவான் உடல் நலம் குன்றி படுத்த படுக் கையான நாள் முதலே இது வெடிக்கத் தொடங்கி விட்டது.
இதன் காரணமாகவே பகவானின் உடல் நிலை குறித்த விவரங்களைக் கூட அவரது பக்தர்களால் அறிய முடி யாமல் போய்விட்டது. பெரும் மர்மமான சூழலிலேயே பகவான் சாய்பாபாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதன் காரணமாக ஆந்திர மாநில அரசு களத்தில் இறங்கி பாபாவின் நிலை குறித்தும் அறக்கட்டளை நிர்வாகம் குறித்தும் உண்மை தக வல்களை அறி அதிகாரிகள் குழுவை நியமிக்க நேரிட் டது. அறக்கட்டளையின் தலைவராக இதுவரை பகவான் சாய்பாபா தான் இருந்து வந்தார். அவர் மட்டுமே காசோலைகளில் கையெழுத்திடக் கூடிய அதிகாரம் பெற்ற வராக இருந்தார். இதன் காரணமாக அறக்கட்டளையின் அடுத்த கட்டம் பெரும் தேக்க நிலையை சந்தித்துள்ளது.
பிற சாமியார்கள், மதத் தலைவர்கள் போல அல்லாமல் பகவான் தனது குடும் பத்தினருடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணிக் காத்து வந்தார். எனவேதான் அவர்கள் தற்போது அறக்கட்டளையின் நிர்வாகத்தில் பங்கு கேட்கின்றனர். பகவானின் உறவினரான ஆர். ஜே. ரத்னாகர் அவர்களில் ஒருவர் இவர் கேபிள் டிவி ஆபரேட்டராகவும், காஸ் ஏஜென்சி உரிமையாளராகவும் உள்ளார். இவர் அறக்கட்டளையில் ஒரு உறுப்பின ராகவும் உள்ளார். தனக்கு நிர்வாகத்தில் மிக முக்கிய பொறுப்பு தர வேண்டும் என்று கோருகிறார் ரத்னாகர். இவர் சாய்பாபாவின் தம்பி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் அறக்கட்டளை செயலாளர் சக்கரவர்த்தி மற்றும் சில உறுப்பினர்கள், பல்வேறு பிரமுகர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவை அமைத்து அதன் மூலம் அறக்கட்டளையை நிர்வகிக்க வலியுறுத்தி வருகின்றனர்.
சக்கரவர்த்தியின் யோசனைக்கு அறக் கட்டளை உறுப்பினர்களான முன்னாள் தலைமை நீதிபதி பி.என். பகவதி, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் எஸ்.வி. கிரி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்தப் பிரச்சினையில் அரசியலும் கலந்து விட்டதால் பெரும் குழப்ப நிலை காணப்படுகிறது.
கடந்த 1972ம் ஆண்டு செப்டம்பர் 2ம் திகதி அனந்தப்பூரில் உள்ள அறநிலைய உதவி ஆணையர் அலுவலகத்தில் தான் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது. இந்த அலுவலகமும் தற்போது பாபா அறக்கட்டளை விவகாரம் குறித்து பெரு த்த மெளனம் சாதித்து வருகிறது. யார் அறக்கட்டளையை அடுத்து நிர்வகிக்க வேண்டும் என்பது குறித்து இந்த அலு வலகம் தான் கூற முடியும் என்பது குறிப் பிடத்தக்கது.
அறக்கட்டளை பதிவு ஆவணத்தில் அறக்கட்டளையின் அறங் காவலர் குழுவில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் நிறுவன அறங்காவலர் - அதாவது பகவான் சாய்பாபா - அனுமதி பெற்றே செய்ய வேண்டும். நிறுவன அறங்காவலருக்கே மாற்றம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நிறுவன அறங்காவலர் இல்லாத பட்சத்தில் அறக்கட்டளையில் எப்படி மாற்றம் செய்வது என்பது குறித்து குறிப்பு ஏதும் இல்லை.
தற்போதைய நிலையில் அறக்கட்டளை விவகாரத்தில் தலையிடும் திட்டம் இல்லை என்று ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது. இதை ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியே தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி பகவான் சாய்பாபாவின் அடுத்த வாரிசு யார் என்பது குறித்து அறிவிக்கப்படாது என்றே தெரிகிறது. சில காலம் வரை அறக்கட் டளையே நிர்வாகத்தை கவனித்து வரும் என்றும் பிரச்சினைகள் சரி செய்யப்பட்ட பிறகுதான் அடுத்த வாரிசு, அறக்கட்டளையின் தலைவர் யார் என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று தெரிகிறது.
»»  (மேலும்)

4/25/2011

இலங்கையின் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ஒருவர் HIV/ எயிட்ஸ் நோயினால் மரணிக்கிறார்கள்

இலங்கையின் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ஒருவர் HIV/  எயிட்ஸ் நோயினால் மரணிக்கிறார்கள். இந்த நோய் பெரும்பாலும் கணவன்மார்கள் மூலமாகவே பெண்களுக்கும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் பரவுகின்றன என்று எயிட்ஸ் நோய் நிபுணர்கள் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
உலகில் எயிட்ஸ் நோய், சயரோகம், மலேரியா போன்ற நோய்களை எதிர்த்து போராடுவதற்கான ஐக்கிய நாடுகள் செயற்றிட்டத்தின் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, எங்கள் நாட்டில் தற்போது மூவாயிரத் திற்கும் அதிகமானோர் எயிட்ஸ் நோயி னால் பாதிக்கப்பட்டிருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்.
இவர்களின் 1250 பேருக்கு HIV/ எயிட்ஸ் நோய் இருப்பது வைத்தியர் களினால் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இம்மூன்று நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள ஆகக்குறைந்த வருமானத்தை உடையவர்களுக்கும் மத்திய வருமானத்தை உடையவர்களுக்கும் இந்நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதலான பணத்தை அரசாங்கம் இப்போது செலவிட்டு வருகின்றது.
இலங்கையில் எயிட்ஸ் நோயை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கக் கூடியதாக இருக்கின்ற போதிலும், பொதுமக்களினதும் சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகளினதும் அசமந்தப் போக்கினால் இந்நோய் அதிகளவில் பரவி வருகிறது.
இலங்கையிலுள்ள எயிட்ஸ் நோயாளிகளில் 61% ஆனோர் மேல் மாகாணத்திலேயே இருக்கிறார்கள். இதுபற்றி தேசிய தொற்று நோய் / எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் நிமால் எதிரிசிங்க இங்கு இல்லத்தரசிகள் மட்டுமன்றி, விலைமாதர்களுக்கும் இந்நோய் ஆண்களின் மூலம் அதிவேகமாக பரவி வருகின்றது.
தன்னினச் சேர்க்கையின் மூலமும் ஆண்களினால் இந்நோய் சாதாரண பொதுமக்களுக்கு மட்டுமன்றி சிறைக்கைதிகளுக்கும் பரவி வருவதாக வைத்திய அறிக்கைகள் ஊர்ஜிதம் செய்துள்ளன.
இலங்கையின் சுமார் 40,000 பேர் பாலியல் தொழிலில் சட்டவிரோதமாக ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்களுடன் மேலும் 40,000 பேர் போதைவஸ்துக்களை பயன்படுத்துவதில் ஈடுபாடு கொண்டுள்ளனர். எயிட்ஸ் நோயை தடுக்க வேண்டுமாயின் அதன் ஆபத்து குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிற்சிப் பாசறைகளை நடத்த வேண்டும் என்று வைத்தியர்கள் ஆலோசனை கூறியுள்ளார்கள்.
அடுத்த ஐந்தாண்டு காலத்தில் எயிட்ஸ் நோய் தடுப்பு மற்றும் அந்நோயை கண்டுபிடித்து சிகிச்சையளிக்கும் செயற்பாடுகளுக்காக தங்களுக்கு வெளிநாட்டில் இருந்து 12.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியாக கிடைக்கும் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் ரவீந்திர அபேசிங்க தெரிவித்துள்ளார்.
»»  (மேலும்)

4/24/2011

கோரகலிமடு விளையாட்டு போட்டியில் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.

கோரகலிமடு விளையாட்டு போட்டியில் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.

ரகலிமடு கணேஸ் விளையாட்டு கழகம் நடாத்திய விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் போட்டிகளில் வெற்றியீட்டிய கழகங்களுக்கு கிண்ணமும், பரிசுப்பொதிகளையும் வழங்கிவைத்தார். இந் நிகழ்வில் கோரளைப்பற்று தவிசாளர், உப தவிசாளரும் கலந்து கொண்டார்கள்.

»»  (மேலும்)

4/23/2011

ஐயாவுக்கும் புத்தி வந்துடிச்சிடோய்


கடந்த வருடம்ஒரு தடவை  சம்பந்தரிடம் பசில் சொன்னாராம் ஐயா பிள்ளையானுக்கு இருக்கிற புத்தி கூட  உங்களுக்கு இல்லை என்று ஐயாவுக்கும் புத்தி வந்துடிச்சிடோய்
  இலங்கை அரசாங்கம் மற்றும் பிரான்ஸ் அரசின் 4ஆயிரத்து 587 மில்லியன் நிதியுதவியின் கீழ் திருகோணமலை குடிநீர் விநியோகத் திட்டம் மற்றும் கந்தளாய் குடி நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமையமாக்கல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தலைமையில் இன்று திருகோணமலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்டின் ரொபிசன், நீர் வளங்கள் மற்றும் வடிக்கால் அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


___
»»  (மேலும்)

நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க வெளிநாட்டு தீய சக்திகள் சதி * பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கண்டனம்

யுத்த கருமேகங்கள் எங்கள் நாட்டிலிருந்து நிரந்தரமாக விடுபட்டு இன்று அமைதியும், சமாதானமும் நிலைகொண்டிருப்பதுடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து பொறாமைப்படும் சில ஐரோப்பிய நாடுகளும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் சில அதிகாரிகளும் இலங்கைக்கு எதிரான போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி பிரச்சினைகளை உண்டுபண்ண எத்தணிக்கிறார்கள். நாம் அனைவரும் இலங்கையர் என்ற முறையில் ஒன்று பட்டு இத்தகைய வெளிநாட்டு சக்திகளுக்கு எமது ஏகோபித்த எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமென்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முறிகண்டி இந்து மகாவித்தியாலயத்தின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்ட போதே பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இந்தக் கருத்தை வெளியிட்டார். இவ் வைபவத்தில் பிரதம அதிதிகளாக அம்பாந்தோட்டை தொகுதியின் பாராளு மன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ, மீள் குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன், நிர்மாணத்துறை பொறியியல் சேவை வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட மேலும் பலர் கலந்து கொண்டார்கள்.
பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அங்கு தொடர்ந்து உரையாற்று கையில், இலங்கையில் இன்று 30 ஆண்டு கால யுத்தம் முடிவுற்றமை குறித்து சில ஐரோப்பிய நாடுகளும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் சில உயர் அதிகாரிகளும், மன வேதனையில் இருப்பதனால் தான் இலங்கைக்கு எதிரான பலதரப்பட்ட தீய செயல்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தொடர்ந்தும் யுத்தம் நடந்து கொண்டி ருப்பதையே பெரிதும் விரும்புவதாகவும் நாட்டை பிளவுபடுத்துவதே இத்தகைய தீய சக்திகளின் குறிக்கோளாக இருக்கிற தென்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
‘‘நான் சிறுவனாக இருந்த போது எங்கள் பிரதேசத்திற்கு ஆடம்பரமாக போலி வேடமணிந்து வந்த அரசியல் வாதிகளைப் பார்த்து ஏமாந்து போனேன். அதனால் தான் கல்வியை இடை நடுவில் நிறுத்திக் கொண்டு காடுகளில் தஞ்சமடைந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டேன்.
என்னைப் போன்ற அப்பாவி இளைஞர்களை தவறான வழியில் இட்டுச் செல்வதற்கு வழியமைத்துக் கொடுத்த இந்த அரசியல்வாதிகள் தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி பட்டம் பெறவைத்தனர். நாங்கள் படிப்பையும், கல்வியையும் சீர்குலைத்துக் கொண்டோம். இன்று நாம் உண்மை எது, போலி எது என்பதை புரிந்துக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையின் நல்வழியில் ஜனநாயக நீரோட்டத்தில் சங்கமித்து விட்டோம்” என்று பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உணர்வு பூர்வமாக கூறினார். சில அரசியல்வாதிகள் இன்றும் கூட சிங்கப்பூருக்கு சென்று இனப்பிரச்சினை குறித்து மாநாடுகளை நடத்துகிறார்கள். அவர்கள் அதற்கு பதில் ஏன் கிளிநொச்சிக்கோ, மட்டக்களப்பிற்கோ வந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்தும், ஏனைய உதவிகளையும் செய்து கொடுக்க தயங்குகிறார்கள் என்றும் பிரதி அமைச்சர் வினா எழுப்பினார். டயஸ்போரா என்று தங்களை பெருமையாக ஆங்கிலத்தில் அழைத்துக் கொள்ளும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் இங்கு வந்து உண்மை நிலை என்ன என்பதை உணர்ந்து கொள்ளாமல் தங்கள் இஷ்டப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்த பிரதி அமைச்சர், இந்த டயஸ்போராவைச் சேர்ந்த தமிழர்கள் மாலைப் பொழுதில் மதுசாலைகளுக்குச் சென்று மதுவிற்காக செலவிடும் பணத்தை மீதப்படுத்தி இங்கு வீடின்றி துன்பப்படும் மக்களுக்கு ஒரு வீட்டையாவது கட்டிக்கொடுத்து தங்களது தமிழ் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
»»  (மேலும்)

4/22/2011

களுவாஞ்சிகுடி பொலிசாரின் புதுவருட விளையாட்டு விழா

சித்திரைப் புதுவருடத்தையொட்டி களுவாஞ்சிகுடி பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி மாணாமடு தலைமையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய வளாகத்தில் விளையாட்டு விழா நடத்தப்பட்டது. அங்கு விஜயம் செய்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன்;,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆலோசகர் க. துரைநாயகம் ஆகியோர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் உரையாடுவதையும், வழுக்கு மரம் ஏறும் போட்டியாளர்களை பார்வையிடுவதையும் படத்தில் காணலாம்.
»»  (மேலும்)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் என்னை புறக்கணிக்கிறார்கள் இன்று நேற்றல்ல இது ஒரு நூற்றாண்டு கால புறக்கணிப்பு அய்யா

இன்று நேற்றல்ல இது ஒரு நூற்றாண்டு கால புறக்கணிப்பு அய்யா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழு சிங்கப்பூர் சென்ற விடயம் எனக்குத் தெரியாது. எனக்கு அறிவிக்கவும் இல்லை. மேற் கண்டவாறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிங்கப்பூர் விடயம் தொடர்பாக மட்டக்கள ப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு எம். பிக்கள் கூட எனக்குக் கூறவில்லை.

யோகேஸ்வரன்

என்னைத் திட்ட மிட்டுப் புறக்கணிக்கின்றார்கள். என் செல்வாக்கு அதிகரிப்பை சகிக்க முடியாத எம். பி. ஒருவரே அனைத்துக்கும் காரணம். பொது மக்களுக்கும் இவ்விடயம் நன்கு தெரியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம். பிக்கள் மக்களுக்கு என்ன செய்கிறார்கள் என பொதுமக்கள் கேட்கின்றனர். அவர்கள் கேட்பது சரி. ஆனால், நான் அன்றும் சேவை செய்தவன் இன்றும் சேவை செய்கின்றேன். நாளையும் சேவை செய்வேன்.
வெள்ள அனர்த்தத்தின் போது கிராமம் கிராமமாகச் சென்று உலர் உணவுப் பொருட்கள், உடு துணிகள் ஆயிரக் கணக்கானோருக்கு வழங்கினேன். இது ஊடகவியலாளர்களுக்கு நன்கு தெரியும். புதுவருடத்திற்கும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் பலவற்றிற்கு புத்தாடைகள் வழங்கினேன். பல்கலைக்கழகம் தெரிவான, பெற்றோரை இழந்த மாணவர்களையும் பராமரித்து வருகின்றேன்.
இதுதான் மக்கள் சேவை எனது எம். பி. சம்பளத்தையும் முற்றாக பொது மக்களுக்காகவே பயன்படுத்துகின்றேன் நான் கெளரவப் பிச்சை எடுத்து பொதுமக்களுக்கு சேவை செய்கின்றேன். இது போன்று ஏன் மற்றைய தமிழ் கூட்டமைப்பு எம். பிக்களுக்கு முடியாது.
தங்களை வளப்படுத்த, செல்வாக்கு உள்ளவர்களை நிராகரித்துவிட்டு, தொடர்ந்தும் தாங்கள் எம். பியாக இருக்க சில எம். பிக்கள் திட்டமிட்டுச் செயற்படுகின்றனர். திட்டமிட்ட சதிதான் சிங்கப்பூர் விடயம் தொடர்பாக எனக்கு அறிவிக்கவில்லை.
அவர்கள் சிங்கப்பூர் செல்லட்டும். பேசட்டும் ஏன் எனக்கு மட்டு. தமிழ் கூட்டமைப்பு எம். பிக்களாவது கூறவில்லை.
»»  (மேலும்)

நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிடக் கூடாது: ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை வேண்டுகோள்

இது ஏற்றுக்கொள்ள முடியாத தவறான அறிக்கை என்று இலங்கை திட்டவட்டமாக அறிவிப்பு

*குழுவுக்கு விசாரணை நடத்தும் அதிகாரம் இல்லை
*அதிகார எல்லையை மீறி ஐ.நா செயற்படுகிறது

ஐ. நா. செயலாளர் நாயகம் பான்கிமூனின் நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிடவோ அதிலுள்ள சிபார்சுகளை செயற்படுத்தவோ கூடாது என இலங்கை அரசாங்கம் ஐ. நா. செயலாளரை கோரியுள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிடுவது முற்றிலும் தவறானது எனவும் அதன் மூலம் இலங்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐ. நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்க மாத்திரமே நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டது. இதற்கு விசாரணை நடத்தவோ சிபார்சுகளை செயற்படுத்தவோ அதிகாரம் கிடையாது. இந்தக் குழு ஐ. நா. குழுவோ உத்தியோகபூர்வ அதிகாரமுள்ள குழுவோ அல்ல என வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஐ. நா. செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் ஊடகவிய லாளர் மாநாடு நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இதில் பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மேலும் கூறியதாவது:-
ஐ. நா. செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை கடந்த 12 ஆம் திகதி நியூயோர்க்கில் உள்ள எமது பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டது. இது ஐ. நா. வினால் நியமிக்கப்பட்ட குழுவாக குறிப்பிடுவது தவறாகும். தனக்கு ஆலோசனை வழங்க மட்டுமே இந்தக் குழு நியமிக்கப்பட்டதாக ஐ. நா. செயலாளர் தெளிவாக கூறியுள்ளார். இதற்கு விசாரணை நடத்த அதிகாரம் கிடையாது. குற்றச் சாட்டுகள் குறித்து விசாரிக்கவோ இதன் உண்மைத் தன்மை குறித்து முடிவுக்கு வரவோ நிபுணர் குழுவுக்கு அதிகாரம் இல்லை. ஆனால் தமது அதிகார எல்லையை மீறி இந்தக் குழு செயற்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் கசப்பான யுகத்திற்கு முடிவு காணப்பட்டது. பொருளாதாரத்தை கட்டி எழுப்பவும் சகல இனத்தவரையும் ஒன்றுபடுத்தவும் நாம் முயற்சி செய்து வருகிறோம். இந்த நிலையில் பிளவு ஏற்படுத்துவது உகந்ததல்ல. சகல மக்களையும் இணைப்பதே காலத்தின் தேவையாகும்.
ஆலோசனை குழுவின் அறிக்கை மூலம் எத்தகைய பலன் ஏற்படும் என்பதை ஐ. நா. ஆழமாக சிந்திக்க வேண்டும். குழுவின் அறிக்கை மூலம் நாம் எதிர்பார்க்கும் இலக்கை எட்ட முடியுமா அல்லது அதனால் தடங்கல் ஏற்படுமா என்பதை கவனிக்க வேண்டும்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய நல்லிணக்க ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கு உலக நாடுகள் பலவும் பாராட்டுத் தெரிவித்தன.
ஆனால், ஆணைக்குழுவின் பணிகள் முடிவடைந்து அதன் அறிக்கை வெளியாக முன்னரே ஐ. நா. செயலாளரின் நிபுணர் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் காலம் மே 15 ஆம் திகதியே முடிவடைகிறது. அதன் அறிக்கையை நாம் எதிர்பார்த்துள்ளோம்.
அதன் இடைக்கால அறிக்கையை செயற்படுத்த சட்டமா அதிபர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட முன் அது தொடர்பில் கருத்துத் கூற முடியாது. இலங்கையின் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன் நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிட்டது முற்றிலும் தவறாகும்.
உள்நாட்டு செயற்பாட்டை நிராகரித்து அதற்கு சர்வதேச மட்டத்தில் தீர்வு காண முயல்வது தவறானதாகும். நிபுணர் குழுவின் அறிக்கை இந்த வாரம் வெளியிடப்படும் என ஐ. நா. பேச்சாளர் கூறியுள்ளார். ஆனால், நிபுணர்கள் குழுவின் அறிக்கையை வெளியிடுவது முற்றிலும் தவறானதாகும். அதனால் எமது நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும். இது சட்டபூர்வமானதல்ல. அது அநீதியான செயலாகும்.
நாம் எழுச்சி பெறுகையில் அதற்கு வேண்டுமென்றே தடங்கல் செய்யப்படுகிறது. இலங்கை ஐ. நா. அங்கத்துவநாடாகும். எமது நாட்டையும்
ஐ. நா. கெளரவமாக நடக்க வேண்டும். இலங்கைக்கு நன்மை செய்ய ஐ. நா.வும் சர்வதேச சமூகமும் முன்வர வேண்டும். நாம் நியமித்துள்ள ஆணைக் குழுவை மதிக்க வேண்டும்.
ஐ. நா. செயலாளரின் நிபுணர் குழுவை நாம் ஒரு போதும் ஏற்கவில்லை. அதற்கு அந்தக் குழுவுக்கு வரையறை உள்ளது. அதனை மீறிச் செயற்பட முடியாது. நிபுணர் குழுவின் அறிக்கை எமது பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்ட போது எமது ஆட்சேபனையை முன்வைத்தோம். அதனை பிரசுரிக்கவோ வெளியிடவோ செயற்படுத்தவோ கூடாது என ஐ. நா. செயலாளருக்கு அறிவித்துள்ளோம்.
நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிடுவது ஐ. நா. நடைமுறைமைக்கு முற்றிலும் தவறாகும்.
இந்த அறிக்கை 200 பக்கங்களைக் கொண்டதாகும். அதன் உள்ளடக்கம் குறித்து எமது நிலைப்பாடை வெளியிட முடியாது. ஏனென்றால், அந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. அறிக்கை வெளியிடப்பட்டால் எமது நிலைப்பாட்டை அறிவிப்போம்.
நிபுணர் குழுவின் அறிக்கையிலுள்ள சில விடயங்கள் ஊடகங்கள் மூலம் கசிந்துள்ளன. இலங்கை அரசாங்கமே அதனை வெளியிட்டுள்ளதாக ஐ. நா. பேச்சாளர் கூறியுள்ளதை நிராகரிக்கிறோம். நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிடக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ள நாம் ஏன் அதனை வெளியிட வேண்டும்.
ஐ. நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட குழுவால் எப்படி அதனை வெளியிட முடியும். ஐ. நா. வுக்கென்று சில கடப்பாடுகள் உள்ளன. எனவே அது உறுப்பு நாடுகளை மதிக்க வேண்டும்.
தூதுவர்களிடம் விளக்கம்
ஐ. நா. செயலாளரின் நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து சகல வெளிநாட்டுத் தூதுவர்களையும் சந்தித்து எமது நிலைப்பாட்டை தெரிவித்தோம். உலக சமூகம் எமது கருத்தை ஏற்கும் என்று நம்புகிறோம். நீதி எமது பக்கமே உள்ளது.
நிபுணர் குழுவின் அறிக்கை ஐ. நா. பாதுகாப்பு சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் செய்தி முற்றிலும் தவறானதாகும். நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாமென நாம் ஐ.நாவைக் கோரியுள்ளோம்.
காஸாவில் இடம்பெற்ற கொலைகள் குறித்து விசாரணை செய்ய ஐ. நா. குழுவொன்றை நியமித்தது. ஆனால் இஸ்ரேல் உட்பட பல நாடுகள் இதனை எதிர்த்தன. இந்த நிலையில் அதன் தலைவர் தனது அறிக்கை தவறானது என்று கூறினார். அத்தகைய நிலை இலங்கை தொடர்பிலும் ஏற்படுவதை ஏற்க முடியாது.
நாட்டுக்கு எதிராக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ள நிலையில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்றி சகலரும் பொது நோக்கத்திற்காக ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும் என்றார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பெருமளவு உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
»»  (மேலும்)