4/26/2011

ரூ. 40 ஆயிரம் கோடி *சாய்பாபாவின் வாரிசு யார்?

 சாய்பாபாவின் மறைவைத் தொடர்ந்து புட்டபர்த்தியில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அவரது அடுத்த வாரிசு யார், ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் எதிர்காலம் என்ன என்பது பெரும் கேள்விக்குறியை ஏற் படுத்தியுள்ளது. இருப்பினும் பகவான் சாய்பாபாவின் வாரிசு யார் என்பது இப்போதைக்கு அறிவிக்கப்படாது என்றே தெரிகிறது. சில காலத்திற்கு அறக்கட்டளை நிர்வாகிகளே நிர்வாகத்தை தொடர்ந்து நடத்துவார்கள் என்றும் தெரிகிறது.
கிட்டத்தட்டட ரூ. 40 ஆயிரம் கோடி முதல் ரூ. 1 இலட்சம் கோடி அளவுக்கு சொத்துக்களைக் கொண்டுள்ளது. சாய்பாப அறக்கட்டளை, இதை நிர்வகிப்பது தொடர்பாக அறக்கட்டளை உறுப்பினர்களுக் கும், பாபாவின் குடும்பத்தினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. பகவான் உடல் நலம் குன்றி படுத்த படுக் கையான நாள் முதலே இது வெடிக்கத் தொடங்கி விட்டது.
இதன் காரணமாகவே பகவானின் உடல் நிலை குறித்த விவரங்களைக் கூட அவரது பக்தர்களால் அறிய முடி யாமல் போய்விட்டது. பெரும் மர்மமான சூழலிலேயே பகவான் சாய்பாபாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதன் காரணமாக ஆந்திர மாநில அரசு களத்தில் இறங்கி பாபாவின் நிலை குறித்தும் அறக்கட்டளை நிர்வாகம் குறித்தும் உண்மை தக வல்களை அறி அதிகாரிகள் குழுவை நியமிக்க நேரிட் டது. அறக்கட்டளையின் தலைவராக இதுவரை பகவான் சாய்பாபா தான் இருந்து வந்தார். அவர் மட்டுமே காசோலைகளில் கையெழுத்திடக் கூடிய அதிகாரம் பெற்ற வராக இருந்தார். இதன் காரணமாக அறக்கட்டளையின் அடுத்த கட்டம் பெரும் தேக்க நிலையை சந்தித்துள்ளது.
பிற சாமியார்கள், மதத் தலைவர்கள் போல அல்லாமல் பகவான் தனது குடும் பத்தினருடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணிக் காத்து வந்தார். எனவேதான் அவர்கள் தற்போது அறக்கட்டளையின் நிர்வாகத்தில் பங்கு கேட்கின்றனர். பகவானின் உறவினரான ஆர். ஜே. ரத்னாகர் அவர்களில் ஒருவர் இவர் கேபிள் டிவி ஆபரேட்டராகவும், காஸ் ஏஜென்சி உரிமையாளராகவும் உள்ளார். இவர் அறக்கட்டளையில் ஒரு உறுப்பின ராகவும் உள்ளார். தனக்கு நிர்வாகத்தில் மிக முக்கிய பொறுப்பு தர வேண்டும் என்று கோருகிறார் ரத்னாகர். இவர் சாய்பாபாவின் தம்பி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் அறக்கட்டளை செயலாளர் சக்கரவர்த்தி மற்றும் சில உறுப்பினர்கள், பல்வேறு பிரமுகர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவை அமைத்து அதன் மூலம் அறக்கட்டளையை நிர்வகிக்க வலியுறுத்தி வருகின்றனர்.
சக்கரவர்த்தியின் யோசனைக்கு அறக் கட்டளை உறுப்பினர்களான முன்னாள் தலைமை நீதிபதி பி.என். பகவதி, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் எஸ்.வி. கிரி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்தப் பிரச்சினையில் அரசியலும் கலந்து விட்டதால் பெரும் குழப்ப நிலை காணப்படுகிறது.
கடந்த 1972ம் ஆண்டு செப்டம்பர் 2ம் திகதி அனந்தப்பூரில் உள்ள அறநிலைய உதவி ஆணையர் அலுவலகத்தில் தான் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது. இந்த அலுவலகமும் தற்போது பாபா அறக்கட்டளை விவகாரம் குறித்து பெரு த்த மெளனம் சாதித்து வருகிறது. யார் அறக்கட்டளையை அடுத்து நிர்வகிக்க வேண்டும் என்பது குறித்து இந்த அலு வலகம் தான் கூற முடியும் என்பது குறிப் பிடத்தக்கது.
அறக்கட்டளை பதிவு ஆவணத்தில் அறக்கட்டளையின் அறங் காவலர் குழுவில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் நிறுவன அறங்காவலர் - அதாவது பகவான் சாய்பாபா - அனுமதி பெற்றே செய்ய வேண்டும். நிறுவன அறங்காவலருக்கே மாற்றம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நிறுவன அறங்காவலர் இல்லாத பட்சத்தில் அறக்கட்டளையில் எப்படி மாற்றம் செய்வது என்பது குறித்து குறிப்பு ஏதும் இல்லை.
தற்போதைய நிலையில் அறக்கட்டளை விவகாரத்தில் தலையிடும் திட்டம் இல்லை என்று ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது. இதை ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியே தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி பகவான் சாய்பாபாவின் அடுத்த வாரிசு யார் என்பது குறித்து அறிவிக்கப்படாது என்றே தெரிகிறது. சில காலம் வரை அறக்கட் டளையே நிர்வாகத்தை கவனித்து வரும் என்றும் பிரச்சினைகள் சரி செய்யப்பட்ட பிறகுதான் அடுத்த வாரிசு, அறக்கட்டளையின் தலைவர் யார் என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று தெரிகிறது.

0 commentaires :

Post a Comment