உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

6/22/2012

| |

மட்டக்களப்பில் சீபிளேன் விமான சேவை விரைவில்! பரீட்சார்த்தம் பார்க்க மட்டு வாவியில் இன்று இறங்கிய சீபிளேன்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய சிவில் விமான சேவைகள் அமைச்சின் அங்கீகாரத்தில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வரை (சீபிளேன்) கடல் விமான சேவையை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன் பொருட்டு கொழும்பு சீதுவைப் பிரதேசத்திலுள்ள தண்டன் ஓயா வாவியிலிருந்து இந்தப் பரீட்சார்த்த விமானம் புறப்பட்டு இன்று மட்டக்களப்பு வாவியில் வந்து தரையிறக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட தகவல் ஊடக அதிகாரி பி.ரீ.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வாவியில் வந்திறங்கிய இவ்விமானத்தில் வந்த சிவில் விமான சேவை அதிகார சபை மற்றும் ஸ்ரீலங்கா விமான சேவை அதிகாரிகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார்.