உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

6/20/2012

| |

கிழக்கு மாகாண சபை கலைப்பு தொடர்பான இடைக்கால தடை உத்தரவுகோரும் மனு மீதான விவாதம் மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று

மனு யூலை 11ந் திகதிக்கு ஒத்திவைப்பு.
 
கிழக்கு மாகாண சபையை கலைப்பது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சராகிய சிவநேசதுரை சந்திரகாந்தன், ஆளுனருக்கு ஆலோசனை வழங்குவதற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவனைக் கோரும் மனுவானது,இன்று(19.06.2012) மேன் முறையீட்டு நீதி மன்றில் நீதிபதிகள் சிகந்தராஜா மற்றும் திபாலி விஜயசுந்தர மன்னிலையில் விசாரணணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
 
இதன்போது முதலமைச்சர் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி பாயிஸ முஸ்தபா இம் மனுவானது சட்டவலுவற்றது என்பதுடன் அரசியல் அமைப்பில் முதலமைச்சருக்கு குறித்தொகுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை கேள்விக்கு உட்படுத்துவதாகவும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுடன் இது சட்டரீதியல் எதுவித அடிப்படை உண்மையும் அற்றது என வாதிட்டார்.
 
இவ் வாதத்தினை ஏற்றுக் கொண்ட மேன்முறையீட்டு நீதி மன்றம் மனுமீதான இடைக்கால தடை உத்தரவோ ,பிரதிவாதிகளுக்கு அழைப்பாணையோ(நோட்டீஸ்) விடுக்காமல் மேலதிக ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக இவ் வழக்கினை எதிர்வரும் யூலை 11ந் திகதிக்கு ஒத்தி வைத்தியுள்ளது.
 
கிழக்கு மாகாண சபை கலைப்பது தொடர்பிலான இடைக்கால தடை உத்தரவினைக் கோரும் மேற்படி மனுதாரர் சார்பில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பி.சுமந்திரனனின் நெறிப்படுத்தலில் மொஹான் பாலேந்திரா ஆஜராகி இருந்தார். உண்மையில் இவ் வழக்கினை தொடுத்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் என்பது தௌ;ளத் தெளிவாக புலப்படுகிறது.
 
இவர்களுக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல்  நடந்தால் நிச்சயம் அரசாங்கம் ஆட்சி அமைக்கும் அதன்போது தமிழ் தேசயிக் கூட்டமைப்பும் போட்டியிட்டு படுதோல்வியை அடையும் அதன் பின்னர் கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அஸ்த்தமனமாகி விடும் என்ற பயத்திலே இது போன்ற பல செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவது வெளிப்படையே.