உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

7/08/2012

| |

இலங்கையின் இறைமைக்கு எதிரான பேராட்டத்தில் யோகேஸ்வரன் இணைவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனடாவில்இ இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்றை நடாத்த உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் வடக்கில் காணி அபகரிப்பை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்து கனடாவில் போராட்டமொன்று நடத்தப்பட உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாக சி. சிறீதரன் மற்றும் சீ. யோகேஸ்வரன் ஆகியோர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
கனடாவின் ஸ்னாப்ரோவின் ஸ்ரீ ஜயப்பன் கோயில் கலாச்சார மண்டபத்தில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
வடக்கின் அனைத்து பகுதிகளிலும் பௌத்த விஹாரைககள் அமைக்கப்படுவதாகவும் வடக்கை முழுவதுமாக இராணுவத்தினர் ஆக்கிரமித்து உள்ளதாகவும் சர்வதேச ரீதியில் பிரசாரம் செய்வதே இந்தப் போராட்டத்தின் நோக்கமாகும் என திவயின தெரிவித்துள்ளது.
புலி ஆதரவாளரான செரியன் ரத்ரமூர்த்தி என்பவரினால் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் பகலில் வேட்டியுடன் சென்று கோயில்களில் பிச்சை எடுப்பதாகவும் இரவில் நட்சத்திர விடுதியில் உற்சாக பாணத்துடன் உல்லாசம் நடனமாடுவதாகவும் தெரியவருகின்றது மட்டக்களப்பு மக்களுக்கு பூசாரி வேசம் போடும் இவர் கனடாவில் ஆசாமி வேசம் போடுவதா?