Election 2018

7/18/2012

| |

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை பேணும் நாடாக முன்னேறும் இலங்கை

* தென் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க வலய நாடுகளுடனான உறவுகள் பற்றிய சுற்றாடல் மாநாட்டின் போது மெருகூட்டப்பட்ட இலங்கையின் அடையாளம்.
* அபிவிருத்தி இலக்கை அடைவதில் ஜனாதிபதியின் துரித செயற்பாடுகள்
ஆசிய வலயத்தினுள் முன்னேற்றமடைந்துவரும் ஒரு நாடாக இலங்கை அடையாளப்படுத்தப் பட்டுள்ளது. சர்வதேச உறவுகளை மேலும் விஸ்தரிக்கும் வகையில் ஆபிரிக்க கண்டம் மற்றும் தென் அமெரிக்க வலயம் ஆகிய பிரதேசங்களுடன் ஆரம்பிக்கப்படுகின்ற சர்வதேச உறவுகள் பற்றி கவனம் செலுத்தும் போது ஜனாதிபதி அவர்களின் சர்வதேச உறவுகள் தொடர்பான நோக்கானது மற்றொரு சிறந்த திட்டமாகும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அண்மையில் முடிவடைந்த ரியோ + 20 சுற்றாடல் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், இலத்தீன் அமெரிக்க வலய நாடுகள் உட்பட உலகின் ஏனைய நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு முக்கியமான ஒரு செய்தியை (193 நாடுகள்) வழங்கினார்.
இதன் மூலம் தென் அமெரிக்க வலய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவினை விருத்தி செய்யும் ஒரு முயற்சியாக இது விளங்குகிறது. பிரான்ஸ், பிரித்தானியா போன்ற வல்லரசுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் காலனித்துவ நாடுகளாக காணப்பட்ட லத்தீன் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகள் இன்று சர்வதேச மட்டத்தில் துரித அபிவிருத்தியை அடைந்துள்ளன. இதன் மூலம் அந்த நாடுகள் இறைமை மிக்க நாடுகளைக் கொண்ட ஒரு வலய மாகவும் முன்னேற்ற மடைந்துள்ளன.
பிரேசில், பெரு, மெக்சிக்கோ போன்ற நாடுகள் மாத்திரமின்றி, தென்னாபிரிக்க வலயத்திலும் வெற்றிகரமான அபிவிருத்தியைப் பெற்றுக்கொண்டு அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளாக இவை மாறி வருகின்றன. சிறந்த காலநிலையைக் கொண்ட நாடுகளிலேயே விவசாயம், பெற்றோலியம், தங்கம் உள்ளிட்ட மேலும் பல முக்கிய வளங்கள் காணப்படுகின்றன.
சுற்றாடல் மாநாட்டில் கலந்து கொண்ட போது தென் அமெரிக்க வலய நாடுகளிடையே சர்வதேச உறவுகளை விருத்தி செய்து கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கனவே தென்னாபிரிக்க வலய நாடுகளில் கட்டியெழுப்பப்பட்டுள்ள நேரடி உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இலங்கைக்கு காணப்படுகின்றது.
அதற்கு சிறந்த முன்மொழிவுகளை ஜனாதிபதி அவர்கள் அதன் போது முன்வைத்ததுடன் எல். ரீ ரீ. ஈ. ஆதரவாளர்கள் ஆபிரிக்க வலய நாடுகளிலே இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிழையான பிரசாரங்களுக்கு தொடர்ந்தும் இடமளிக்காது, அந்த வலய நாடுகள் இலங்கையுடன் உறவை பேண வேண்டியதன் அவசியம் பற்றியும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
தற்போது அந்த வலயத்திலே ஜப்பான், சீனா, இந்தியா போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள உறவுகள் மற்றும் முதலீடுகள் என்பன விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையினைப் பார்க்கும் போது இலங்கையானது ஆரம்ப மட்டத்திலே காணப்படும் நிலையினை அறியக்கூடியதாக உள்ளது.
ஐரோப்பா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் மற்றும் ஆசிய வலய நாடுகளைச் சேர்ந்த 60 இற்கும் மேற்பட்ட நாடுகளும் இலங்கை மேற்கொண்டு வரும் வெளிநாட்டு தூதரக செயற்பாடுகள் இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பெரும் பயனளித்து வருகின்றன.
இலங்கையுடன் 53 வருட நீண்ட கால உறவினைப் பேணி வரும் கியூபாவுடன் தற்போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள உறவானது தென் அமெரிக்க நாடுகளினால் இலங்கையின் பிரவேசத்திற்கு சிறந்த களம் அமைத்து கொடுத்துள்ளது. பிரேசில், சிலி, மெக்சிக்கோ, ஆர்ஜென்டீனா போன்ற நாடுகளிடம் இருந்து எமக்கு பல்வேறு வசதிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.
இதன் பிரகாரம் தெங்கு கைத்தொழில், விவசாயப் பயிர்கள், கல்வி விளையாட்டுத்துறை போன்ற வசதிகளையும் சுகாதாரத் துறை மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் என்பவற்றுடன் புலமைப் பரிசில் நிகழ்ச்சித் திட்டங்கள் என்பவற்றினையும் விருத்தி செய்வதற்கும் முடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.
கியூபாவுடன் கடந்த 53 வருடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வரும் உறவு மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் பொருளாதார ரீதியிலான கொடுக்கல் வாங்கல் என்பனவும் தென் அமெரிக்க நாடுகளில் இருந்து இலங்கைக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய நன்மைகளுக்கு மேலும் வழியமைத்துக் கொடுக்கின்றன.
இலங்கைக்கும் மென்டேன்கோ நாட்டுக்கும் இடையே பொருளாதார உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் பிரேசிலில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் இதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் மென்டென்கோ நாட்டின் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் மூலம் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் சிறந்த உறவு பேணப்படுவதற்கு வாய்ப்பு ஏற்படும். மேலும் இதன் போது சிலி மற்றும் கியூபா போன்ற நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைகள் மற்றும் இருதரப்பு உறவுகள் என்பவற்றை முன்னெடுப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.
இலங்கைக்கு அந்நிய செலாவணியை அதிகம் ஈட்டித் தருகின்ற தேயிலை, இரத்தினக்கல், ஆபரணங்கள் போன்ற துறைகளை விருத்தி செய்வது தொடர்பாகவும் இதன்போது ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுத்ததுடன் தெற்காசிய வலயத்தில் மாத்திரமின்றி, தென்னாபிரிக்க மற்றும் லத்தீன் வலய நாடுகளுடன் மேலும் பலதரப்பு உறவுகளை பேணுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கை ஜனாதிபதி அவர்கள் இந்த வலயத்திலே நேர்வரிசை சர்வதேச உறவுகளின் வலையமைப்பு ஒன்றினை ஸ்தாபித்துள்ளதுடன், அதன் மற்றுமொரு முயற்சியாக அண்மையில் அமைச்சரவையினால் ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்த 15 நாடுகளுடன் ராஜதந்திர உறவுகளைப் பேணுவதற்கு கொள்கை ரீதியாக தீர்மானிக்கப் பட்டுள்ளமை யானது மிக வும் முக்கிய விடயமாகும்.
அந்நாடுகளா வன, மொரித்தே னியா இஸ்லாமியக் குடியரசு, கோபோ குடியரசு, செக் குடியரசு, மத்திய ஆபிரிக்க குடியரசு, ஈக்வடோர் துனியா குடியரசு, நைஜீரிய குடியரசு, கபோன் குடியரசு, கெம்பியா குடியரசு, வேக்கின்னா குடியரசு, மலாவி குடியரசு, சியாராலியான் குடியரசு, கெமரன் குடியரசு, கேப்வட் குடியரசு, டிஜிபுட் குடியரசு மற்றும் ஐவரிகோஸ்ட் குடியரசு என்பனவாகும்.
இதன் பிரகாரம் எதிர்வரும் காலங்களில் உலகிலே 100 இற்கும் மேற்பட்ட நாடுகளுடன் ராஜதந்திர உறவுகளைப் பேணி வருகின்ற நாடாக இலங்கை காணப்படுகின்றமை பெருமைக்குரிய விடயமாகும்.
ரியோ + 20 இல் ஜனாதிபதி
சுற்றாடல் மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி அவர்கள் உலகிற்கு சிறந்ததோர் முன்மாதிரியை எடுத்துக்கூறும் வகையில் பசுமை தன்மையின் அபிவிருத்தியினை சிறந்த முறையில் பேணி அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இலங்கை மேற்கொள்ளும் முயற்சி தொடர்பாக தமது உரையிலே விளக்கினார்.
வெறுமனே தமது அபிவிருத்தியை மாத்திரம் நோக்காகக் கொண்டு தொடர்ச்சியாக சூழலை மாசுபடுத்திவந்த அபிவிருத்தியடைந்த நாடுகள் இன்று மீண்டும் திரும்பிப் பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான நாடுகளின் செயற்பாடுகள் காரணமாக உலகில் அனைத்து நாடுகளும் அழிவினை சந்திக்க நேரிடுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்; சூழல் மாசடைவதை தடுப்பதற்கான கொள்கையினை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ளல் வேண்டும் எனவும், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் சூழலைப் பாதுகாப்பதற்காக அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மூன்று தசாப்தங்களாக நாட்டிலே நிலவிய பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் இலங்கையானது சிறந்த பொருளாதார அபிவிருத்தியை நோக்கிப் பயணிப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார். மேலும் மஹிந்த சிந்தனையில் உள்ளூர் பொருளாதாரக் கொள்கை மூலம் சர்வதேச ரீதியில் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடிகளுக்கு சிறந்த முறையில் முகம்கொடுக்க முடிந்ததாகவும் கூறினார்.
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சூழலை நேசிக்கக்கூடிய அபிவிருத்திப் பணிகள்
சூழலுடனான அபிவிருத்தியின் மூலம் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவினை பேணிவருவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், எதிர்கால சந்ததியினரின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் இந்த மாநாட்டின் நோக்கத்தை வெற்றிகொள்வதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வலியுறுத்தினார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்; இலங்கையின் அபிவிருத்தி மாதிரியானது சூழலை நேசிக்கக் கூடியவாறு மக்களின் கருத்துக்களை உட்கொண்டு கட்டியெழுப்பப்பட்ட ஒன்றாகும் எனவும் கூறினார்.
ஜனாதிபதி அவர்களிடம் இருந்து தூதுவர்களுக்கு ஒரு செய்தி
2016 ஆம் ஆண்டிலே இலங்கையின் தனிநபர் வருமானத்தை 4000 அமெரிக்க டொலர்களாக மாற்றுவதற்காக தூதுவர்களின் விசேட அர்ப்பணிப்பு தேவைப்படுவதாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்.
சுற்றுலா அபிவிருத்தி, வெளிநாட்டு முதலீடு, சர்வதேச நட்பை விஸ்தரித்தல் உட்பட தாய்நாட்டின் நற்பெயரை விருத்தி செய்யக்கூடியவாறான நடைமுறைகளின் முக்கியத்துவம் மற்றும் எல். ரீ. ரீ. ஈ. ஆதரவாளர்கள் கொண்டு செல்லும் போலிப் பிரசாரங்களை பொய்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் என்பன தொடர்பாகவும் இதன்போது ஜனாதிபதி அவர்கள் தூதுவர்களுக்கு விளக்கிக் கூறினார்.
இன்று வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தி வேகம் 22 வீதத்தை அடைத்துள்ளதாகவும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறந்த வாழ்க்கை முறை மற்றும் அரசியல் ஸ்திரத் தன்மை என்பன தொடர்பான செய்திகளை உலகின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கு வெளிநாட்டு தூதுவர்களுக்கு காணப்படும் கடமையையும் பொறுப்பையும் மனதில் வைத்து அவர்கள் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெளிநாட்டு தூதுவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.