உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

7/11/2012

| |

விவசாய மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கு கடந்த காலங்களில் முதலமைச்சர் ஆற்றிய சேவைக்கு நன்றி கடனாக கோறளைப் பற்று தெற்கு பிரதேச விவசாய சம்மேளனம் முன்னாள் முதலமைச்சருக்கே ஆதரவு

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விவசாய சம்மேளனம் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை தாம் ஆதரிக்கவுள்ளதாக விவசாய சம்மேளனம் முடிவு செய்துள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் தேவன் தெரிவித்தார். இன்று(07.07.2012) இன்று கிரான் உவெஸ்லி மண்டபத்தில் இடம்பெற்ற கலந்தரையாடலிலே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலகத்திற்கட்பட்ட விவசாய மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கு கடந்த காலங்களில் முதலமைச்சர் ஆற்றிய சேவைக்கு நன்றி கடனாகவே தாங்கள் இம் முறை முதலமைச்சருக்கு ஆதரவு வழங்குவதாக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தார்கள்.
 
22 விவசாய கண்டங்களைச் சேர்ந்த விவசாயப் பெருமக்கள் தமது பூரண ஆதரவை நிச்சயம்வழங்கவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தார்கள். இக் கலந்தரையாடலில் 22 விவசாயக் கண்டங்களின் வட்டவிதானைமார்களும். கிரான் கூட்டுறவு சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.