Election 2018

8/18/2012

| |

60 பொதுமக்களுடன் பேச 150 மேற்பட்ட அரச பாதுகாப்பு படைகளுடன் சம்பந்தர்.


தமிழ் மக்கள்; விடுதலைப் புலிகளின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மிக மிக வேகமாக இடம் பெற்று வருகின்ற வேளையில், நேற்று புதன் கிழமை கற்குடா தொகுதியில் உள்ள சித்தாண்டி பிரதேசத்தில் வேட்பாளர் க. மோகனை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் இடம் பெற்றது. அதேவேளை சித்தாண்டியில் இன்னுமொரு பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து சம்மந்தன் தலைமையிலான கூட்டமும் இடம் பெற்றது. காலங் காலமாக தமிழரசுக் கட்சியினரின் கோட்டையாகக் கருதப்பட்டு வந்த சித்தாண்டி கிராமமானது இம்முறை தங்களது ஆதரவுத் தளத்தினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு சார்பாக திருப்பியிருக்கின்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளது கூட்டத்திற்கு சுமார் 300 பொதுமக்கள் குழுமியிருந்த நிலையில,;  சம்மந்தனது தலைமையில் இடம் பெற்ற பொதுக் கூட்டத்தில் சுமார் 60 பொதுமக்களே பிரசன்னமாகி இருந்தனர். ஆனால் சம்மந்தரைப் பாதுகாக்க கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட பல இராஜதந்திரிகளின் வேண்டு கோளுக்கிணங்க 150ற்கும் அதிகமான இராணுவத்தினரும், பொலிசாரும் குவிக்கப்பட்டிருந்தமை நகைச்சுவைக்கு உரியதொன்று சிங்கள அரசாங்கம், சிங்கள அரசாங்கம் என்று உரத்துகூவி எதிர்ப்பு அரசியல் நடத்துகின்ற கூட்டமைப்பினருக்கு மட்டக்களப்பு மண்ணில் இவ்வளவு பாதுகாப்பு இதற்கென்று யாருக்குமே தெரியாது.
தாம் உயிர் ஆபத்துகளுக்கு மத்தியில் செயற்படுவதாக மக்களை ஏமாற்றும் கூட்டமைபினரின் இந்த பாணி அவர்களுக்கே கைவந்த கலையாகும். சுமார் ஐந்து நாட்கள் மட்டக்களப்பில் தங்கி இருந்து பிரச்சாரப் பணிகளில் இருந்து வருகின்ற சம்மந்தர், சித்தாத்தர், அடைக்கலநாதன், மாவை,சங்கரி போன்ற தலைவர்கள் ஒரே மேடையில் முரண்பட்ட கருத்துக்களை பேசி வருகின்றமை மக்களிடையே அம்பலமாகி வருகின்றது. முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் என்று புள்ளி விபரங்களைக் காட்டி ஒருபுறம் சம்மந்தர் முழங்க மறுபுறம் சித்தாத்தரோ நாம் வெல்லாவிட்டாலும் பிள்ளையானை தோற்கடிப்பதே எமது நோக்கம் அதற்காக வாக்குகளைப் பிரிக்கவே களமிறங்கியுள்ளோம் என்று பகிரங்கமாகவே பேசுகின்றார்.
அப்படியானால் கூட்டமைப்பினர் யாரை முதலமைச்சராக்கப் போகின்றார்கள் என்கின்ற கேள்வி மக்களிடம் பரவலாக எழுந்துள்ளது.
இந்த நிலையில் சித்தாண்டியில் இடம் பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆதரவுப் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய வேட்பாளர் பிரசாந்தன்  கூட்டமைப்பினரைப் பார்த்து பல கேள்விகளை எழுப்பினார். கூட்டமைப்பினர் மாகாண சபையைக் கைப்பற்ற முடியுமானால் ஏன் அவர்கள் தமது முதலமைச்சர் வேட்பாளர் யார் என அடையாளம் காட்ட முடியாது? மட்டக்களப்பு  மாவட்டத்தில் 1977ம் ஆண்டு இராஜதுரைக்கு எதிராக எப்படி முகாமிட்டு தமிழரசுக் கட்சியினர் வீட்டுச் சின்னத்தை நிறுத்தினார்களோ அது போன்றே இந்த 2012ல் பிள்ளையானுக்கு எதிராக வீட்டுச் சின்னத்தை நிறுத்தியுள்ளனர். ஆனால் 1977ல் மட்டக்களப்பு மக்கள் எப்படி விழித்துக் கொண்டார்களோ! எப்படி வீட்டுச் சின்னத்தின் சதியை தோற்கடித்தார்களோ, எப்படி காசியானந்தன் என்கின்ற யாழ்ப்பாணத்தின் கைக்கூலியை எப்படி இந்த மண்ணை விட்டு விரட்டி அடித்தார்களோ அப்படி எதிர் வருகின்ற 8ம் திகதி கூட்டமைபினரையும் வீpட்டுச் சின்னத்தையும் எமது மக்கள் தோற்கடித்தே தீருவார்கள் என தெரிவித்தார்.
 
கடந்த நாற்பது வருட காலம் தமிழரசுக் கட்சிக்காக உழைத்த சித்தாண்டிப் பிரதேசத்தில் மூத்த பிரஜைகளான முன்னாள் தமிழரசுக் கட்சி சித்தாண்டி பிரதேச அமைப்பாளரான சந்திரகுமார், தமிழரசுக் கட்சியின் பிரபல்யமான பேச்சாளரான அருள் செபஸ்தியன் இருவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சித்தாண்டிக் கூட்டத்தில் பங்கெடுத்து நாம் ஏமாந்தது போதும் இம்முறை தமிழரசுக் கட்சினருக்கே இந்த சித்தாண்டி மக்கள் சாவுமணி அடிக்கக் காத்திருக்கிறார்கள் எனவும் சித்தாண்டிப் பிரதேசம் இம்முறை முதலமைச்சராக வரவிருக்கின்ற பிள்ளையானின் வெற்றியில் மிக முக்கியமான பங்கெடுக்கும் என கூறியபோது மக்களின் கரகோசம் வானைப் பிளந்தது.