உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

8/19/2012

| |

தமிழரசுக் கட்சியினர் ஒன்றும் மகான்களல்ல
 
தமிழரசுக் கட்சியினர் ஒன்றும் மகான்களல்ல. மகான்களின் பெயர்களை விளம்பரப் பலகைகளாக்கி வியாபாரம் செய்யும் மிகக் கேவலமான அரசியல்வாதிகள் கூட்டமே அவர்கள் என்று சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.
 
நாவிதன் வெளியில் இடம் பெற்ற அரசியல் கூட்டமொன்றின் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
 
எம் மக்களை ஏமாற்றுவது எப்படி என்கின்ற வித்தையினை மாத்திரம் நன்கு பயின்றுள்ள கூட்டமைப்பு தொடர்ந்தும் அவற்றினை எம் மக்கள் மீது பிரயோகித்து வருகின்றது. அந்த வகையில், எமது அம்பாறை மக்களது வாக்குகளையும் வீணடித்து கிடைக்கின்ற சந்தர்ப்பத்தினைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தலை மறைவாகி விடுவதே அவர்களது நோக்கம். தம்மால் எதனையும் சாதிக்க இயலாது என்று தெரிந்தும் விதண்டா வாதத்திற்கே அவர்கள் இத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 
 
பிள்ளையானை வீழ்த்தப் போகின்றோம் எனக் கூறி ஒட்டு மொத்தக் கிழக்குத் தமிழரது வாழ்விலும் விசப் பரீட்சை வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் எமது மக்களும், நாமும் நிச்சயமாகத் தோற்கப் போவது கிடையாது. மேலாதிக்க சிந்தனையாளர்களான இவர்களது சுயரூபத்தினை நாம் உணந்து கொண்டது போல, எம் மக்களும் இன்று உணர்ந்திருக்கின்றனர். 
 
அரசியல் ரீதியான தெளிவு நிலை இப்போது தான் மெல்ல மெல்ல வெளிச்சமடைந்து வருகின்றது. எமது சமூகத்தினைச் சுற்றியுள்ள மாய வேலியினை நிச்சயம் நாம் உடைத்தெறிவோம் என்று கூறினார்.
 
கடந்த வியாழக்கிழமை  நாவிதன் வெளியில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான திரு.புஸ்பராசா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாவிதன் வெளி பிரதேச சபைத் தவிசாளர், உபதவிசாளர் ஆகியோரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.