உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

8/18/2012

| |

தமிழ் மேலாதிக்க அரசியல்வாதிகளின் கிழக்கு மீதான படையெடுப்பு

எதிர்வரும் தேர்தலையொட்டி பல கட்சிகளினதும் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் ஒற்றுமைக் கோசம் போட்டுக் கொண்டு கிழக்கு மண்ணில் கால்; பதித்துள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் துரைராஜசிங்கத்தை தவிர மற்றைய அனைவரும் செல்லாக்காசுகள். கடந்த காலங்களில் படுகொலைக் கலாச்சாரத்தில் கைதேர்ந்த விற்பனர்கள். அதிலும் தன் சொந்த மனைவியையே வெட்டிக் கொன்று சிறைவாசம் அனுபவித்த கொலைகாரன் ஒருவனும் அடங்கும்.
 
இந்நிலையில் கள்ளர்களும், கயவர்களும், கொள்ளையர்களும், கொலைகாரர்களும் கூட்டமைப்பினை தமது கூடாரமாக்கி உள்ளார்கள். வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால் யாரும் வென்று விடலாம் என்ற இறுமாப்பில் களமிறங்கியுள்ள இவர்களின் உண்மை முகங்கள் அம்பலமாகி வருகின்ற நிலையில் இவர்களை ஆதரித்துப் பேசுவதற்கோ யாரும் அற்ற நிலையே காணப்படுகின்றது. இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து எல்லாத் தமிழ் கட்சியின் தலைவர்களும் கிழக்கு நோக்கிப் படையெடுத்து பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
 
இவர்களது கூட்டங்களுக்கு மிகக் குறைவான அளவிலே மக்கள் பங்குபற்றுகின்ற நிலையில் சம்பந்தனின் பாதுகாப்பிற்காகக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்ற பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் 100க்கு மேலாகக் காணப்படுகிறது. ஸ்ரீலங்கா அரசின் ஆடம்பர வாகனங்களில் பலத்த பாதுகாப்புடன் பிள்ளையான் போட்ட வீதிகளால் உலா வந்து கொண்டு தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்றுங்கள் என்று இவர்கள் பேசுவது சாத்தான்கள் வேதம் ஓதுவதைப் போல் இருப்பதாகவும், வேட்பாளர் துரைராஜசிங்கத்தைத் தவிர வேறு எவருமே சொக்கத் தங்கமல்ல என முன்னாள் அதிபர் நவராசலிங்கம் கருத்துத் தெரிவித்தார்.