Election 2018

8/23/2012

| |

எமது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. எட்டுத்திக்கும் மதயானைகளாக சூழ்ந்து நிற்கும் கயவர்கள் அனைவரையும் வீழ்த்தி வெல்வோம்இந்தமக்களுக்குப் பணியாற்றவென்றே நாம் புறப்பட்டோம். நாம் தலைநிமிர்ந்து நிற்கின்றோம் ஆனால் சம்மந்தர் மிகவும் பயந்த ஒரு கோழை நான் ஏன் இப்படிக் கூறுகிறேன் என்றால் சந்திரி;கா கொண்டு வந்த தீர்வுப் பொதியில் தமிழர்களுக்கு மிகவும் வலுவானதும் நியாயமானதுமான பல்வேறுபட்டஅதிகாரங்கள் மலிந்துகாணப்பட்டன. என்றுசம்மந்தர் மிகஅண்மையில் ஓர் கருத்தினை வெளியிட்டிருந்தார். இப்போது கடந்துவிட்ட காலம் பற்றி கருத்துக் கூறும் இவர் எம் மக்களுக்கு உண்மையிலேயே அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்கும் எண்ணம் கொண்ட மனிதராக இருந்திருந்தால் ஏன் அன்று சந்திரிகாவின் தீர்வுப் பொதியினை துணிந்து ஏற்கவில்லை? அது ஒரு நல்லதீர்வு என்று கூறுபவர் அன்றே இதனைப் பொறுப்பேற்றிருக்கலாம் தானே?

ஆனால் இவர் அன்று என்ன செய்தார்?
ஐக்கியதேசியக்கட்சியும் ஆனந்தசங்கரியும் இணைந்து தீர்வுதிட்ட ஆவணங்களை பாராளுமன்றத்தில் தீயிட்டுஎரித்தபோது வாயேதிறக்காமல் அமர்ந்திருந்தார். இன்று விடுதலைப் புலிகள் மடிந்த பின்னர் சந்திரிகாவின் தீர்வுப் பொதி அதிகாரம் மிகுந்ததாக இருந்ததாம்.

இதேபோன்றுதான் 2008இல் பிரிக்கப்பட்டகிழக்கில் போட்டியிடுவது தமிழர்களுக்குத் செய்யும் வரலாற்றுத் துரோகம் என்று சொல்லிவிட்டு இன்று புலித்தலைமை மடிந்த பின்னர் என்ன கூறுகிறார்?
அதிகாரம் மிக்கமுதலமைச்சரையும் கிழக்குமாகாணசபையையும் உருவாக்க காலத்தின் கட்டாயம் கருதி கிழக்குமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்களாம்..!
அப்படிஎன்றால் 2008ல்  எம் மக்களுக்கு அதிகாரங்களும் தீர்வுகளும் தேவையான விடயங்களாக இருக்கவில்லையா?
இவர் கூறும் காலத்தின் கட்டாயம்அப்போது எங்கேபோனது? விடுதலைப் புலிகள் இருக்கும் போது ஒருபேச்சு இறந்தபின்னர் ஒருபேச்சு. நிலையான கொள்கைகள் இல்லை,பற்றுறுதி இல்லை. அதற்குள் விடுதலைப் புலிகள் இருக்கும் போது எம்மை சுயமாக சிந்திக்கவிடவில்லை என்றும் சொல்கிறீர்கள்.
சுயமாக சிந்திக்கத் தெரியாதவர்கள்,முடியாதவர்கள் எல்லாம் ஏன் ஐயா மக்களுக்காக அரசியல் செய்யவருகிறீர்கள்?

நாம் முதுகுக்கு பின்னால் பேசுபவர்கள் அல்ல கோழைகளும் அல்ல. எம் மக்களின் அழிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாமலேயே சாவினைத் துச்சமென்றெண்ணி தலைமையினை ஏற்றோம். இன்னோர் சமூகத்தின் கரங்களில் பறிபோகவிருந்த மாகாணசபையினையும் கைப்பற்றினோம் கிழக்குமண்ணின் இருப்பினைத் தக்கவைத்துக் கொண்டோம்.

என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார். நேற்றுமாலை இருதயபுரத்தில் இடம் பெற்றதேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்?

மேலும் அவர் தொடர்ந்துஉரையாற்றுகையில்...
நாம் போராளிகளாக இருந்தபோது மின்மாற்றிகளைத் தகர்த்தால் தம்பி இன்னுமொரு மின்மாற்றியிருக்கிறது அதையும் உடைத்துவிடுங்கள் எமக்கு எதற்கு மின்சாரம் என்று கூறிய மக்கள் இன்று எமது கிராமத்திற்கு மின்சாரம் வழங்கினால்தான் வாக்குபோடுவோம். என்கின்றனர். அந்தளவிற்கு மக்கள் தெளிவடைந்திருக்கின்றனர். அவர்களையாராலும் எமாற்றிவிடமுடியாது.
எமது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. எட்டுத்திக்கும் மதயானைகளாக சூழ்ந்து நிற்கும் கயவர்கள் அனைவரையும் வீழ்த்திவெல்வோம் என்று கூறினார்.
இக்கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.