உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

8/30/2012

| |

யாழ் மேலாதிக்கவாதிகளின் அத்தனை சதிகளையும் முறியடித்து முன்னேற கிழக்கு மக்கள் எனக்கு வல்லமை தருவார்கள்


கடந்த செவ்வாய்கிழமை (28.08.2012) இரவு தேற்றாத்தீவுக் கிராமத்தில் இடம் பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் சந்திரகாந்தன் கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்..!
இத் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து எம்மீதான சேறுபூசல்கள் மீண்டும் ஆரம்பித்துவிட்டன,வரலாற்றில் ஒருபோதும் இல்லாத ஒற்றுமைவேசம் போட்டுக் கொள்ளும் தமிழ்த் தலைமைகள் அனைத்தும் எனது மண்ணுக்கு வந்து என்னை வீழ்த்த எனது மக்களிடமே ஆணைகோரும் இறுமாப்பினை முறியடித்து முன்னேறுவேன்.
1977ம் ஆண்டு சொல்லின் செல்வர் இராஜதுரைக்கு எதிரானசதியில் எப்படி வீட்டுச் சின்னம் முன்னிறுத்தப்பட்டதோ? அதேபோன்று இம்முறையும் வீட்டுச் சின்னம் சதியின் சின்னமாக வந்திருக்கின்றது. முதலாவது கிழக்குமாகாணசபை உருவாகியபோது எங்களைத் துரோகி என்றவர்கள்,நாங்கள் உருவாக்கிய மாகாணசபையில் வந்து துளியளவும் வெட்கமின்றி பங்கு கேட்டு நிற்கின்றனர். ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுகளிலும் இடம் பெறுவது போல அனைத்து ஊடகங்களும் யாழ் மேலாதிக்கத்திற்கு துதிபாடி,சாமரம் வீசி நிற்கின்றன.
எமது செய்திகள் அனைத்தும் இருட்டடிப்புச்  செய்யப்படுகின்றது. “இந்ததேற்றாத்தீவு மண்ணில் வைத்து கூறுகிறேன்,
  யாழ் மேலாதிக்கவாதிகளின் அத்தனை சதிகளையும் முறியடித்துமுன்னேற"
கிழக்குமக்கள் எனக்கு வல்லமை தருவார்கள் எனத் தெரிவித்தார்.