Election 2018

9/07/2012

| |

கிழக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார்? (பாகம் 03)‏

                                                                                                                         
- அஸ்வின் மித்ரா

கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள் கடந்த காலங்களில் பல்வேறு கட்சிகளிலும் இருந்தவர்கள் என்பதோடு கூட்டமைப்பு சொல்வதுபோன்று கொள்கைவாதிகளோ இலக்கியவாதிகளோ அல்ல. பட்டிருப்பு தொகுதியில் போட்டியிடுபவர்கள் குணம் சென்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றிலையில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்இ ஏ.சு.மகேந்திரன் படகில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்இ வெள்ளிமலை ஐந்து வருடங்களில் 06 கட்சிகளுக்கு மாறியவர் என மக்கள் ஏளனம் செய்வதையும் ஒதுக்கிவிட முடியாது. வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால் யாரும் இலகுவாக வெற்றியீட்டலாம் என்ற நப்பாசையில் இவர்கள் களமிறங்கியுள்ளார்கள். இதுபோன்றவர்கள் நாளை பதவிகளுக்காக ஆளும் கட்சி நோக்கி தாவ மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என்பதும் மக்கள் மத்தியில் உலவுகின்ற பேச்சு.

அந்த வகையில் இதுபோன்ற வேட்பாளர்களுடைய செல்வாக்கோ வசீகரமோ கூட்டமைப்புக்கு வாக்குகளை அள்ளி வழங்கிவிடப் போவதில்லை. ஆனால் என்னதான் என்றாலும் தமிழர்கள் வீட்டுக்கு தானே வாக்களிக்க வேண்டும் என ஊடகங்கள் பரப்பியுள்ள அப்பாவித்தனமான சமூக மனநிலை கூட்டமைப்பிற்கு பலமானதாகும்.

மேலும் கூட்டமைப்பின் கொள்ளை விளக்க பிரச்சாரங்கள் நேரத்திற்கு நேரம் வேட்பாளருக்கு வேட்பாளர் மாறுபட்டு முரண்பட்டு வருகின்றது. இந்நிலைமையானது பழம்பெரும் கொள்கைகொண்ட உறுதியான தலைமை என்று மக்கள் கூட்டமைப்பின் மீது கொண்டிருந்த நம்பிக்கைகளை தளர்த்தி வருகின்றது.

அரசாங்க கட்சியில் போட்டியிடுபவர்களை தோற்கடிக்கவே நாங்கள் களமிறங்கியிருக்கின்றோம் என ஆரம்பத்திலேயே கூட்டமைப்பு தெரிவித்தது. பின்னர் சித்தாண்டியில் இடம்பெற்ற அரசியல் கூட்டத்தில் வைத்து சம்பந்தர் ஐயா கூறினார் மட்டக்களப்பு மாவட்டத்தில் எமக்கு 08 ஆசனங்கள் கிடைக்கும். ஆகவே ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைப்போம். இவ்வாறு மட்டக்களப்பு விஜயங்களை முடித்துக்கொண்டு திருகோணமலைக்கு சென்ற சம்பந்தன் ஐயா மட்டக்களப்பில் எமக்கு 05 ஆசனங்கள் கிடைக்கும் ஏனைய மாட்டங்களின் நிலைமைகளும் சாதகமாக இருக்கும். ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து எங்களால் ஆட்சியமைக்க முடியும் என்ற ஓர் கருத்தினையும் திருகோணமலையில் இடம்பெற்ற அரசியல் பிரச்சாரம் ஒன்றில் வெளியிட்டிருந்தார்.

பின்னர் அம்பாறை மாவட்டத்தில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தனித்து ஆட்சியமைக்கும் என்று இன்னுமோர் புதிய கருத்தினையும் வெளியிட்டார். இடத்திற்கு இடம் வேறுபட்ட கருத்துக்களை முரண்பட்ட விதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையானது மாற்றி மாற்றி கூறி வருவதை அவதானிக்க முடிகிறது.

இதுமட்டுமன்றி புலம்பெயர் புலி பினாமி ஊடகங்களை நம்பி சரணடைந்துள்ள கூட்டமைப்பினர் புலிச்சாயம் பூசி தமது பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றமையும் இவர்களது தனித்து நின்று வெற்றிபெற முடியாத சூழ்நிலையினை உணர்த்தியிருக்கின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர்களை நோக்கினால் சமூகத்தினால் பெரிதாக மதிக்கப்படும் பெரிய மனிதர்கள் எனும் புதியவர்கள் யாரும் இல்லை. அந்த வகையில் முதலமைச்சர் உட்பட மூன்று மாகாண சபை உறுப்பினர்களும் உள்ளுராட்சி சபையின் தவிசாளர் ஒருவரும் சமூக சேவையாளராக அறியப்பட்ட ஒருவரையுமே கொண்டுள்ளது. செங்கலடியைச் சேர்ந்த மோகன் எனும் சமூக சேவையாளர் ஆனவர் சென்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவராவார்.

மற்றும் வாகரையைச் சேர்ந்த ஜெயம்இ வந்தாறுமூலையைச் சேர்ந்த பிரதீப் மாஸ்டர் ஆகிய இருவருக்கும் மாவட்ட ரீதியில் பெரிதான அறிமுகம் இல்லை. இந்த விடயத்தினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பலவீனமாகவே கொள்ள வேண்டும்.

போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சிறிதரனும் மாவட்ட ரீதியில் பெரிதாக அறிமுகம் இல்லாதவர். ஆனாலும் இவர் துரித செயற்பாட்டாளராக மக்களால் அறியப்பட்டவர். ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்றே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரும் பிரசாந்தன் போன்ற ஓரிருவரைத் தவிர தமது சொந்த வாக்கு வங்கி இல்லாதவர்களாகவே காணப்படுகின்றனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினதும் முதலமைச்சர் மீதான அபிமான வாக்குகளை மட்டுமே இவர்கள் நம்பியிருக்கின்றனர்.

வாகரையைச் சேர்ந்த ஜெயம் என்பவருக்கு 7000 – 8000 வரையான எண்ணிக்கை கொண்ட வாக்கு வங்கி இருக்கின்ற போதிலும் அது சூழ்நிலை ஒப்பீட்டளவில் மிகக் குறுகியது. இந்த நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிரந்தர வாக்கு வங்கியாக படுவான்கரை பிரதேசமும்இ அடிமட்ட மக்களின் செல்வாக்கு மட்டுமே காணப்படுகின்றது. அபிவிருத்தித் திட்டங்கள்இ கல்வி மேம்பாடுஇ முதலமைச்சரின் போராட்டகால ஆதரவுத்தளம்இ போன்றவை மட்டுமே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு சார்பாக அமையும்.

மாகாண ரீதியில் ஐக்கிய மக்கள் சுகந்திரக் கூட்டமைப்பு 20 இற்கும் மேற்பட்ட ஆசனங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கும். அதன் அடிப்படையில் கட்சிக்குள் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெறக்கூடிய சாத்தியக்கூறு முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கே உண்டு. அவர் 45000 – 50000 வரையான விருப்பு வாக்குகளைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது முதலமைச்சராக சந்திரகாந்தனே வெற்றியீட்டுவார் என்பது உறுதி.

-நன்றி தேனீ