உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/23/2012

| |

மு.கா. தமிழ்கூட்டமைப்பை ஆதரித்திருந்தால் அது வரலாற்றுத்தவறாகும்.

 அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதித்தலைவர் ஆதம்பாவா மௌலவி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்கூட்டமைப்பை ஆதரித்திருந்தால் அது வரலாற்றுத்தவறாகவும் அதேவேளை தற்கொலைக்கு ஒப்பானதாகவும் அமைந்திருக்கும் இவ்வாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதித்தலைவரும் அம்பாறை மாவட்ட தலைவருமான மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா தெரிவித்தார்.

அண்மைக்காலமாக ஊடகங்களில் மு.கா.வுக்கு எதிரான பிரச்சாரங்கள் பரவலாக முடுக்கிவிடப்பட்டிருப்பதனைக் கண்டித்து அவர் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆட்சியைத் தீர்மானிக்கின்ற சக்தியாக மு.கா. திழ்ந்ததில் சகல முஸ்லிம்களுக்கும் பெருமை. ஆதலால் மிகவும் கவனமாக சிந்திக்கவேண்டிய கட்டத்தில் மு.கா வும் தலைமையும் இருந்தது.

மு.கா.வுக்கு ஆட்சியமைக்க இரு வழிகள் இருந்தன.

1. அரசாங்கத்துடன சேர்ந்த ஆட்சி அமைப்பது.

2.தமிழக் கூட்டமைப்புடன் சேர்ந்து அமைப்பது.

தமிழர் கூட்டமைப்புடன் ஆட்சிக்கு போளால் முகா.முதலமைச்சர் வந்திருக்கலாம். ஆனால் அதற்கு பின்னர் பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டி வந்திருக்கும். அது மு.கா.வின் முடிவாகவும் இருந்திருக்கும். 

மு.கா.வை நோக்கி புலிகள் புலிகள் எனக் கூக்குரலிடுவோருக்கு அது சாதகமாக அமைந்திருக்கும். கூடவே முஸ்லிம்களிடமிருந்து மு.கா.வை ஓரம் கட்டவும் முடிந்திருக்கும்.

ஆக ஏழு பேருடன் தமிழர் தரப்புடன் போகின்றபோது அவர்களின் அத்தனை செயற்பாடுகளுக்கும் செவிசாய்க்க வேண்டிய சூழ்நிலை வந்திருக்கும்.

• உதாரணமாக முஸ்லிம் மக்கள் விரும்பாத வட-கிழக்கு இணைப்புக்கு ஆதரவு நல்க வேண்டிவந்திருக்கும்.

• ஜெனீவா சென்று மத்திய அரசுக்கு எதிரா செயற்பட வேண்டிவந்திருக்கும்.

• தமிழ்க்கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தும் முகவராகச் செயற்படவேண்டி வந்திருக்கும்.இதனை புலிகளின் காயங்களால் ஆறாது இன்னும் நொந்துபோயுள்ள முஸ்லிம் சமுகம் அங்கீகரிக்குமா? புத்தளம் மக்களிடம் செல்ல முடியுமா.,?

எனவே. கூட்டமைப்புடன் சேராமல் விட்டது சாணக்கியமான செற்பாடாகும்.

மத்தியில் ஆட்சியிலுள்ள அரசைப் புறந்தள்ளிட்டு தமிழ்த்தரப்புடன் கூட்டுவைப்பதற்கு இதுவல்ல தருணம். அதற்கு இன்னும் காலம் கனியவில்லை. அவசரப்பட்டு முடிவெடுப்பதால் கட்சிக்கு மாத்திரமல்ல முழு முஸ்லிம் சமுகத்திற்கும் கேடு விளையுமென்பது எனது கருத்தாகும்.

தமிழ் ஊடகங்களும் நிதானமாக இந்த விடயத்தில நடந்துகொள்ள வேண்டும்.தாறுமாறாக மனம்போன போக்கில் எல்லாம் எழுத முற்படக் கூடாது என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்..

(காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா)   *
இலங்கைநெட்