உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/12/2012

| |

சளி,காய்ச்சலை குணப்படுத்தும் ஸ்பிரே


சளி மற்றும் காய்ச்சலை குணப்படுத்துவதற்கு புதிய வகை ஸ்பிரே மருந்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சளி,காய்ச்சல் போன்ற நோய்கள் வைரஸ் கிருமியால் ஏற்படுகின்றன. இவைகள் காற்றின் மூலம் மனிதர்களின் உடலுக்குள் பரவுகின்றன.

நோய்களை குணப்படுத்த ஊசி மற்றும் மருந்து,மாத்திரைகள் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இவற்றை குணப்படுத்த ஸ்பிரே மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டனின் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் பணிபுரியும் நிபுணர்கள் அதற்கான ஸ்பிரே மருந்தை தயாரித்துள்ளனர்.

எஸ்பர் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தி கிளிசளின் மற்றும் மஞ்சளை சேர்த்து மருந்து தயாரித்தனர். அவற்றை மூக்கில் ஸ்பிரே மூலம் உறிஞ்சினால் போதும். சளி மற்றும் காய்ச்சல் குணமாகியது.

இவை மனித உடலுக்கு சென்று சளி மற்றும் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் கிருமிகளை அழிக்கிறது. அதன் மூலம் நோய் குணமாகிறது. இந்த மருந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.