உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/04/2012

| |

மட்டக்களப்பில் பெண்களால் விரட்டியடிக்கப்பட்ட ஆனந்தசங்கரி

கடந்த வெள்ளிக்கிழமை (31.08.2012) மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் கூட்டமைப்பு வேட்பாளர் வெள்ளிமலை அவர்களுக்கு ஆதரவாகத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
இவர்கள் வர்த்தக நிலையங்களுக்குச் சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த போது திடீரென சுற்றி வளைத்த பிரதேசவாசிகளும், வயதான பெண்மணிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டோரைச் சரமாரியான கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தனர்.
பொதுமக்களின் கேள்விக்குப் பதிலிறுக்க முடியாமல் கடுங்கோபத்திற்கு ஆளான வெள்ளிமலை அவர்கள் தகாத வார்த்தைகளால் பொதுமக்களைத் திட்டிப் பேசிக் கொண்டே இடத்தை விட்டு அகன்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் இடம் பெற்ற போது கைத்தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்று பிரதேசவாசி ஒருவரிடம் இருப்பதாகவும், அவரை கூட்டமைப்புப் பிரச்சாரக் குழுவினர் தகாத வார்த்தைகளால் பேசி எச்சரித்துச் சென்றதாகவும் அறிய முடிகின்றது.
அந்தக் காணொளியினை எமது ஊடகத்திற்கு வழங்க குறித்த நபர்  முன்வந்துள்ளதனால் அதனை வெகு விரைவாகப் பெற்று எமது இணையத்தளத்திலும் வெளியிடவுள்ளோம்.