Election 2018

9/06/2012

| |

கிழக்கின் தனித்துவத்தையும் சமுக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க முற்படும் இனவாதசக்திகளை தோற்கடிப்போம்கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் 08ம் திகதி இடம்பெறவுள்ளது.கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டபோது அதனை எந்த ஒரு தமிழ் தலைமைகளும் ஏற்றுக்கொள்ளவில்லை.தனித்த கிழக்கு தமது கொள்கைகளுக்கு முரணானது எனவும் கிழக்கை வடக்கிலிருந்து பிரிப்பது கிழக்குமாகாணமக்களின் அழிவுக்கே வழிகோலும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முதற்கொண்டு அனைத்து தமிழ் தலைமைகளும் கிழக்கு மாகாணசபையை கடுமையாக எதிர்த்தனர். ஊடகங்களும் புத்திஜீவிகளும் கூட கிழக்கு மாகாணசபையை ஏற்றுகொள்வது உலகமகா துரோகம் என்று பிரசித்தம் செய்தன.பாசிச புலிகளின் பலியெடுப்புகளும் தமிழ் தலைமைகளின் பலத்த எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஏளனங்களையும் எள்ளிநகையாடல்கலையும் தாண்டி உருவாக்கப்பட்டதுதான் கிழக்கு மாகாணசபை ஆகும். 

தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் கடுமையான விலை கொடுப்புகளும்  ஜனநாயகத்தின் மீதான பற்றுறுதியுமே  இந்த கிழக்கு மாகாணசபையின் 
அத்திவாரமாகும். இந்த நிலையில் தான்  கிழக்கு மாகாண சபைக்கான இரண்டாவது தேர்தல் எதிர்வரும் 08ம் திகதி இடம்பெறவுள்ளது.சபை உருவாக்கப்பட்ட போது யுத்த அவலங்கள்,வன்முறைகள்,ஆயுத கலாச்சாரம்,தமிழ்-முஸ்லிம் இனவிரிசல்கள்,ஏழ்மை என்று முகம் கொடுக்க நேர்ந்த சவால்கள் ஏராளம் ஆகும்.எனினும் சுற்றிவர எழுந்து நின்ற பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அனைத்து சவால்களையும் வென்று கிழக்குமாகாணசபை  தனது முதலாவது ஆட்சிகாலத்தை அர்த்தமுள்ளதாக்கியுள்ளது என நாம் கருதுகின்றோம்.இயல்புவாழ்வை நிலைநாட்டுவதிலும், அமைதியை பேணுவதிலும்,ஜனநாயகமீட்சியை உருவாக்குவதிலும்,சமுகநல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதிலும்,அபிவிருத்திபாதையில் முன்னேறுவதிலும்கிழக்குமாகாண சபையினது முதலாவது ஆட்சிக்காலம் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்துள்ளது 


மாகாண சபையின் ஊடாக முதலமைச்சரின் நேரடி ஒதுக்கீட்டில் மட்டகளப்பு மாவட்டத்தில் மட்டும் 450 கோடி ரூபாய்கள் பெறுமதியான அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.சபையில் இதுவரை காலமும் நிறைவேற்றப்பட்ட நியதிச்சட்டங்கள் மாகாணசபைகளுக்குரிய அதிகாரங்களை கையகப்படுத்துவதற்கான படிமுறை வளர்ச்சியின் முதற்கட்ட வெற்றிகளாகும் அதிகாரம் மிக்க மாகாண சபைகளை கட்டிஎழு ப்பும் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு சிறந்த சட்ட வலுவாக அடித்தளத்தை இந்நியதிச்சட்டங்கள் இட்டுள்ளன வரிவசூலிப்பு சட்டம்,பாலர் பாடசாலைச்சட்டம்,தனியார் போக்குவரத்து சட்டம்  என்பன குறிப்பிடத்தக்கன.
அதே போன்று மாகாண சபைகளின் அதிகாரங்களில் தலையிடுவதாகவும் சிறுபான்மை மக்களின் இருப்பினை கேள்விக்குள்ளாக்குவதாகவும்அமைந்த சில சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் தடுத்து நிறுத்துவதில் கிழக்கு மாகாணசபை வெற்றி கண்டுள்ளது .உள்ளுராட்சி சட்ட மூலம்,காணி சீர் திருத்த சட்டம்மூலம் ,நாடுநகர  சட்டம்மூலம்,என்பன குறிப்பிடத்தக்கன.கடந்த நான்கு வருட காலமும் எந்த ஒரு யாழ் தலைமைகளின் தலையீடுமின்றி கிழக்குமாகாணம் நின்மதியாக இருந்தது.
வடமாகாண சபை ஒன்றை இதுவரை உருவாகமுடியாத தமிழ் தலைமைகளின் கையறுநிலையில் கிழக்கு தலைமைகளின் முன்கையெ டுப்பு மட்டுமே கிழக்கு மாகாணசபையை சாத்தியப்படுத்தியது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இத்தேர்தலில் போட்டியிட்டு கிழக்கு மாகாண  தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து தமிழ்மக்களின் பிரதி நிதித்துவத்தை அழித்தொழிக்கும் முயற்சியில் யாழ் -தலைமைகள் ஈடுபட்டுள்ளமை கேவலமான அரசியல் செயற்பாடு என நாம் கருதுகின்றோம்.
எமது சொந்த வழிமுறைகளுடாக.எமது வரலாற்றின் துணைகொண்டு எமது சொந்த முயற்சியில் உருவாக்கிய எமது மக்களின் அமைதியான வாழ்வில் மீண்டும் தமிழ் தேசியம் .வடகிழக்கு இணைப்பு போன்ற காலாவதியாகிப்போன கொள்கைகளை நுழைக்க முயலும் இனவாத பிற்போக்கு தலைமைகளை இத்தேர்தலில் கிழக்கு மக்கள் தோற்கடிக்க வேண்டும் என கோருகின்றோம்.கிழக்கின் பல்லின கலாச்சாரத்திற்கு எதிரான இக்கோட்பாடுகள் எமது மாகாணத்தின்  தனித்துவத்தையும் சமுக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க முயலும் எத்தனங்களாகும்.எனவே கிழக்கின் தலைமையை ஆதரிப்பதோடு யாழ் -மேலாதிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு சாவு மணியடிக்கும் நாளாக இத்தேர்தல் தினத்தை பயன்படுத்துமாறு வாக்காளர்கள் அனைவரையும் கோருகின்றோம்.

ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி  05-09-2012
kilakku@hotmail.com