உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/04/2012

| |

தமிழ் நாட்டு பயணத்தை தவிர்க்கவும்' : இலங்கை அரசு

இலங்கை குடிமக்கள் மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் நாட்டுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று இலங்கை அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
சமீபத்தில் தமிழ் நாட்டுக்கு வரும் இலங்கையர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக கூறும் இலங்கை வெளிநாட்டமைச்சு, எனவே இலங்கை பிரஜைகள் தங்களது பாதுகாப்பை மனதில் கொண்டு, இனி மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் நாடுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு செல்வதில் பிரச்சினை ஒன்றும் இல்லை என்றும் அது கூறியிருக்கிறது.
சமீப காலங்களில் தமிழ் நாட்டுக்கு வந்த இலங்கை சுற்றுலா பயணிகள், யாத்ரிகர்கள், விளையாட்டு மற்றும் கலாசார துறை தொடர்பானவர்கள், தொழில் முறை பயிற்சிக்காக வருபவர்கள் என பல்தரப்பட்டவர்கள் இது போன்ற அச்சுறுத்துலுக்கு ஆளாவதாக அது கூறியிருக்கிறது.
அதேவேளை, இந்த விடயத்தில் இலங்கை பயணிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை இலங்கை கேட்டிருக்கிறது.