உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/07/2012

| |

மட்டக்களப்பில் வாக்கெண்ணும் நிலையங்கள் தொடர்பில் அறிவிப்பு


 மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு வின்சண்ட் மகளிர் உயர்தர பாடசாலை மற்றும் மட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகள் கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான வாக்கெண்ணும் நிலையங்களாக அமைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அசங்க ரத்ணாயக்க தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா மற்றும் பட்டிருப்பு தொகுதிகளின் வாக்குகள் மட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியிலும் மட்டக்களப்பு தொகுதி வாக்குகள் மட்டக்களப்பு வின்சண்ட் மகளிர் உயர் தர பாடசாலையிலும் எண்ணப்படவுள்ளன.
 
இந்த இரண்டு பாடசாலைகளிலும் 38 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 4 வாக்கெண்ணும் நிலையங்கள் தபால் மூல வாக்கெண்ணும் நிலையங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
 
1 தொடக்கம் 10 வரையான பகுதியில் கல்குடா தொகுதிக்கான வாக்கெண்ணும் நிலையமும் 11 தொடக்கம் 26வரையான பகுதி மட்டக்களப்பு தொகுதிக்கான வாக்கெண்ணும் நிலையமும்இ 27 தொடக்கம் 34 வரையான பகுதி பட்டிருப்பு தொகுதிக்கான வாக்கெண்ணும் நிலையமாகவும் அமைக்கப்பட்டுள்ளன.
 
வாக்கெண்ணும் நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.