உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/04/2012

| |

மட்டு.விமான நிலைய புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு


உள்ளூர் விமான சேவையை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு விமான நிலையத்தை புனரமைக்கும் செயற்திட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பு விமான நிலையத்துக்கான பொதுக் கட்டடத்துக்கான பெயர் பலகையைத் திரைநீக்கம் செய்து புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்துவைத்தார்.
இலங்கை அரசாங்கத்தின் நிதியில் 800 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு விமான நிலையத்தின் பொதுக் கட்டடமும், விமான ஓடுபாதையும் நிர்மாணிக்கப்படவுள்ளன. பொதுக் கட்ட டத்துக்கான பெயர் பலகையை ஜனாதிபதி அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்ததுடன், சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன விமான ஓடுபாதைப் புனரமைப்புப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைத்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, சி.பி. ரட்ணாயக்க, சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி, பிரதி அமைச் சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருண் தம்பி முத்து, விமானப்படைத் தளபதி ஹர்ஷ அபேவர்த்தன மற்றும் நான்கு மதத் தலை வர்கள் உட்பட பலர் கலந்து கொண்டி ருந்தனர்.
உள்ளூர் விமான சேவையை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலுள்ள 10 உள்ளூர் விமான நிலையங்கள் அமைக் கப்படவுள்ளன.
இவற்றில் கிழக்கு மாகா ணத்தில் அம்பாறை, சீனன்குடா, மட்டக்க ளப்பு ஆகிய மூன்று இடங்களில் உள்ளூர் விமான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட வுள்ளன. இதற்கமைய அடுத்த வருடம் மார்ச் ஏப்ரல் மாத காலப்பகுதியில் மட்டக்களப்பு உள்ளூர் விமான நிலையத்தின் ஓடுபாதை மற்றும் பொதுக்கட்டடம் ஆகிய வற்றின் நிர்மாணப் பணிகள் நிறைவுசெய் யப்பட வுள்ளன.
கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் உள்ளூர் விமான நிலை யங்களை அமைக்கும் முயற்சிகளைப் பிற்போட்டு வந்தன. எனினும், தற்போதைய அரசாங்கத்தின் துரித செயற்திட்டத்தின் கீழ் சமகாலத்தில் 10 உள்ளூர் விமான நிலையங்கள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.