உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/20/2012

| |

உள்ளூராட்சி அதிகார சபைகள் தொடர்பான இரு சட்டமூலங்கள் அடுத்தமாதம் நிறைவேற்றப்படும்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய தேர்தல் முறைமை குறித்த இரு சட்டமூலங்கள் ஒக்டோபர் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படும் என அரசாங்கத் தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்த) சட்டமூலம் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டம் ஆகிய இரு சட்டமூலங்களையும் நிறைவேற்றுவதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் கண்டுள்ளனர். 
உத்தேச சட்டத்தின்படி, உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான 70 சதவீத பிரதிநிதிகள் தொகுதிவாரி முறைமை மூலம் தெரிவுசெய்யப்படுவர். 30 சதவீதமான பிரதிநிதிகள், விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையின் மூலம் தெரிவுசெய்யப்படுவர்.