உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/18/2012

| |

இலங்கையுடன் சீன ஒத்துழைப்புக் கூட்டாளியுறவின் வளர்ச்சி

இலங்கையில் பயணம் மேற்கொண்டிருக்கும் சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் வூ பாங்கோ இலங்கை நாடாளுமன்றத் தலைவர்  சமல்•ராஜபக்சவுடன் செப்டம்பர் 17ஆம் நாள் பிற்பகல் கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
உலகில் சீன மக்கள் குடியரசை மிக முன்னதாக ஏற்றுக்கொண்ட நாடுகளில் இலங்கை ஒன்றாகும். குறிப்பாக இரு நாட்டுப் பன்முக ஒத்துழைப்புக் கூட்டாளியுறவை உருவாக்கியது முதல், இரு தரப்புறவு நீண்டகாலமாக வளர்ச்சியடைந்து வருகிறது. சீனாவும் இலங்கையும் தொலைநோக்கு ஒத்துழைப்புகளை ஆழமாக்கி இரு நாட்டு அரசு, நாடாளுமன்றம் உள்பட பல்வேறு நிலைகளின் நட்புறவை வலுப்படுத்தி இரு நாட்டு வர்த்தகத்தின் சமநிலை வளர்ச்சியை நனவாக்கப் பாடுபட வேண்டும். மேலும், சீன மொழிக் கல்வி, சுற்றுலா, பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பாதுகாப்பு முதலிய மானிடப் பண்பாட்டியல் துறைகளின் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து விரிவாக்க வேண்டும் என்று வூ பாங்கோ அப்போது தெரிவித்தார்.
பொருளாதாரத்தை வளர்ப்பது, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது, சமூக நல்லிணக்கத்தைப் பேணிக்காப்பது முதலிய துறைகளில் சீனாவின் பயனுள்ள அனுபவங்களை இலங்கை நாடாளுமன்றம் கற்றுக்கொள்ள விரும்புகிறது. இத்துறைகளில் சீனத் தேசிய மக்கள் பேரவையுடன் ஒத்துழைக்கவும் விரும்புவதாக சமல்•ராஜபக்ச கூறினார்.