உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/12/2012

| |

கல்லடி கடற்கரையோரப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது

மட்டக்களப்பு,காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி, திருச்செந்தூர் பகுதி கடற்கரையோரத்தில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை இந்த சடலத்தை கடற்கரையோரத்தில் நின்ற பொதுமக்கள் சிலர் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து,குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.

இதனடிப்படையில் மீட்கப்பட்ட சடலம் களுவாஞ்சிகுடி,சூரையடி கிராமத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான விமலசிறி விமலசேன ( 39 வயது) என அவரது மனைவியினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 30ஆம் திகதி களுவாஞ்சிகுடி கடலில் இயந்திரப் படகு ஊடாக மீன்பிடிக்கச் சென்றதில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிருடன் கரை சேர்ந்தார். மற்றையவர் காணாமல்போயிருந்தார்.

இந்நிலையில் இவரை தேடும் பணிகளில் உறவினர்கள் கடந்த இரு வாரங்களாக ஈடுபட்டுவந்த நிலையில் சடலம் இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.
சடலம் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.