Election 2018

9/07/2012

| |

கிழக்குவாழ் தமிழ் மக்களின் உரிமையைக் காத்து நிற்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அரசுடன் இணைந்து செயற்படுகின்றது என்றும், தமிழர்களின் உரிமை விடயத்தில் நழுவல் போக்கை கடைப்பிடிக்கின்றது என்றும் சில அரசியல் வாதிகள் தமது பிரசார மேடைகளில் பேசிவருகின்றார்கள். இதன் மூலம் கிழக்கு வாழ் தமிழ் மக்களின் மனத்தில் ஆழப்பதிந்திருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மீது கறை பூச வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமிழரின் உரிமைக்காக கடந்த காலத்தில் செய்தவை என்ன? செய்து கொண்டிருப்பவை என்ன? உரிமைக்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எத்தகைய நகர்வினை மேற்கொள்கின்றது? போன்றவற்றை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
தமிழ் மக்களின் கடந்தகால நிலை
தமிழரின் உரிமை என்று நாங்கள் இங்கு ஆராய முற்படும்போது எமது கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்காக நாம் எத்தகைய உரிமைகளை எதிர்பார்க்கலாம் அல்லது சாத்தியம் என்று முதலில் அறிந்து கொள்ளவேண்டும்.  உண்மையில் 1956 களில் இருந்து  இலங்கையில் இருந்த சிங்களப் பேரினவாதிகளால் திட்டமிட்ட முறையில் தமிழர் புறக்கணிப்புக்கள், வண்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. தமிழர்களின் கலவியில் , அபிவிருத்தியில் , உரிமையில் தலையிடுகின்றதும் அவர்களின் அடிப்படை உரிமைகiளையே தட்டிப் பறிக்கின்றதுமான செயல்கள் மலிந்திருந்தன. 1956 இல் தனிச்சிங்களச் சட்டம் அமுலில் வந்ததிலிருந்து சிங்களப் பேரினவாதிகளின் கோரமுகங்கள் தமிழர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தின. அதன் பின்னா கட்டம் கட்டமாக சிங்கள பேரினவாதிகளின் அடக்கு முறைகள் தமிழர் வாழ்ந்த நிலப்பிரப்புகளில் தீவிரமடையத் தொடங்கின. இதனால் தமிழர்கள் கிளர்ந்தெழத் தொடங்கினார்கள். வடக்குப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டு அடக்குமுறைக்கெதிரான தமிழர் அமைப்புக்கள் உதயமாகத் தொடங்கின.
சிங்களப் பேரினவாதிகளின் தமிழர்களுக்கெதிரான அடக்குமறைகளினால் இலங்கையிலிருந்து பிரிந்து சென்று தமிழீழம் என்ற தனிநாட்டை அமைப்பதே இறுதி முடிவு என்ற கொள்கையுடன் பல்வேறு ஆயுத அமைப்புக்களும் வலுப்பெறத் தொடங்கின. இந்தவேளையில் தமிழர்களின் உரிமை விடயத்தில் இந்தியாவும் தனது ஆதரவை ஆரம்பத்தில் வழங்கி ஆயுதப் பயிற்சிகள் மற்றும் ஆயுத உதவிகள் செய்து போராட்ட அமைப்புக்களை ஊக்கப்படுத்தியது. இவ்வாறு இருந்த காலப்பகுதியில் இலங்கையின் இனவிகிதாசாரத்தைப் பார்ப்போமானால் குறிப்பாக 1981 இல் சிங்களவர்கள் 64 சதவீதத்தினரும், இலங்கை தமிழர்கள் 13 சதவீதத்தினருமாக காணப்பட்டனர். அதேவேளை முஸ்லிம்கள் 7 சதவீதமாகக் காணப்பட்டனர்.

அந்தவேளையில் 1983 இல் ஜீலைக் கலவரம் தமிழர்கள் மத்தியில் மாறமுடியாத ஒரு வடுவாகவும், தமிழர்கள் இனி சிங்களவர்களுடன் சேர்ந்து வாழமுடியாது என்றநிலையையும் ஏற்படுத்தியது. இத்தகைய வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம் பெற்ற ஒரு ஆயுத அமைப்பாக வலுப்பெறுகிறது. தமழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது இலங்கையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, புதத்ளம் ஆகிய 9 மாவட்டங்கள் அடங்கிய பகுதியை தமிழருடைய தாய்நிலம் எனவும் அதுவே தமிழீழத்pற்குரிய பிரதேசம் எனவும் அறிவித்தனர். இது இவ்வாறிருக்க இப்பகுதியினுள் முஸ்லிம் மக்களும் மன்னார், திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலே வாழ்ந்த வந்தனர்.  இத்தகைய நிலையில் தமிழீழம் என்ற நிலப்பரப்பை தனித்து நாடாக்குவதற்கு அக்காலத்தில் இருந்த எந்தவொரு அரசாங்கமும் விரும்பியதுமில்லை. அதேவேளை இதனை தமது ஆக்கிரமிப்pனால் அழித்தொழிக்கவே முற்பட்டனர். அந்தவேளையில் தமிழரின்பால் அக்களை கொண்டு இந்திய அரசு குறைந்த பட்சமாவது இலங்கையில் உள்ள தமிழர்கள் உரிமையுடன் வாழ்வதற்கு வழிசமைப்பதற்கு வடக்கு கிழக்கு இணை;த மாகாணசபை ஆட்சிமுறையினை சிபாரிசு செய்தது. ஆனால் அக்கால கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அனுமதியுடன் அந்த முறை சிபாரிசு செய்யப்படவில்லை என்றும், அதனை தாம் ஏற்கமுடியாது என்றும் மறுத்து விட்டனர். இருந்தும் இந்தியா வரதராஜப் பெருமாள் தலைமையில் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையை அமைத்து இரண்டுவருட நிருவாகத்தினை நடாத்தியது.

இவ்வாறு எமக்குக் கிடைத்த வாய்ப்பை அன்று நாம் தவறிவட்டோம். அந்தத் தவறினால் அடையப்படமுடியாத இலக்கைநோக்கி வடகிழக்கில் ஆயுதப்போராட்டம் முனைப்புப்பெற்றது. தமிழர்களும் எமது படைபலத்தை, ஆயுத பலத்தை அதிகரித்தோம். அரசாங்கங்களும் தமது படைபலம், ஆயுத பலத்தை அதிகரித்தது. ஆனால் இங்கு எமது தமிழர்களின் படைபலமோ , ஆயுத பலமோ 1 மடங்கு அதிகரிக்கின்ற போது அரசாஙகத்தின் படைபலமும், ஆயுத பலமடமும் பல மடங்கு அதிகரித்துக் கொண்டே போனது.
விடுதலைப்புலிகள் தந்திரோபாயமாக சில தாக்குதல்களில் வெற்றியீட்டியிருந்தாலும்,சொத்து இழப்பு, மக்களின் அவலவாழ்க்கை என்பதே எமது தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாகவும் கிடைத்துக்கொண்டிருந்தது. குறிப்பாக யுத்தவேளைகளில் மக்கள் குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் விடுதலைப் புலிகளினால் தாக்குதல்கள் நடாத்தப்பட்டபோது இறந்த இராணுவத்தினரைவிட பாதிக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. தொடர்ச்சியான சுற்றிவளைப்புக்கள், கைதுகள் போன்றன இத்தகைய காலத்தில் அதிகரித்திருந்தது. வீடுகளில் இரவில் நிம்மதியாக தூங்கமுடியாத நிலை, வீட்டில் நெடுநேரம் இருந்து படிக்கமுடியாத நிலை, நாட்டின் எந்தவொரு பாகத்திற்கும் சென்றுவரமுடியாத நிலை முதலிய பாதகமான விளைவுகள் எமது தமிழர்களுக்கு ஏற்பட்டது.
யுத்தகாலங்களில் விவசாய நடடிவக்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. குறிப்பாக இராணுவக் கட்டுப்hடற்ற பகுதிகளுக்கு விவசாய நடவடிக்கைகளுக்கு செல்வது என்பது மிகவும் கடினமான விடயமாகவிருந்தது. இதனால் எமது தமிழர் பகுதிகள் வறுமையால் வாடியது.  பல கிராமங்களில் மூன்றுவேளை உணவுண்ணமுடியாத நிலையை இது தோற்றுவித்தது. கல்வி நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக இரவில் என்னேரமும் இராணுவ ரோந்து நடவடிக்கைகள் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளில் காணப்பட்டதனால் இரவு நேர மாணவாகளின் சுயகற்றல் பாதிக்கப்பட்டது. அத்துடன் பிரேத்தியேக வகுப்புகளுக்கு சேன்று வரமுடியாத நிலை காணப்பட்டது. இவற்றை விட சில இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசங்களில் மிகவும் மோசமாக கல்வி நிலை காணப்பட்டது. இதற்கு அப்பகுதிகளில் மின்சார வசதியின்மை, தொடர் செல் தாக்குதல் மற்றும் ஆகாய வெளி தாக்குதல்களுக்கு பயந்து பங்கர்களுக்குள் ஒளிந்துகொள்ளவேண்டிய நிலைமை போன்றன இதற்கு அடிப்படையாக அமைந்தது.
இறுதியாக  எமது தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் பலர் கொல்லப்படுவதற்கு இத்தகைய தவறான அணுகுமுறைகள் வழிசமைத்தது. இன்றும் கூட யுத்தம் கொடுத்த அவலங்கள் பலவிதவைகளையும், பல ஊணமுற்றவர்களையும் , தாய்தந்தையற்ற அனாதை குழந்தைகளiயும் எமக்கு சொத்தாக தந்து சென்றது. எனவே எமது உரிமைப்போராட்டத்தில் நாம் இழந்தது எமது சொத்தையும், உயிர்களையுமே தவிர பெற்றது ஒன்றுமில்லை. உண்மையில் அன்று அந்த மாணகாண சபையினை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டு ஆட்சிஅமைத்திருந்தால் இன்று இந்த நிலை தோன்றியிருக்காது.
ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இன்று மிகவும் விவேகமாகச் சிந்தித்து கிழக்கு வாழ் தமிழ் மக்களின் உரிமை,  அபிவிருத்தி என்பவற்றை வளப்படுத்தி வருகின்றது. கடந்த 2008 ஆம் ஆண்டில் கிழக்குமாகாண சபை தேர்தல் இடம்பெற்றபோது துணிந்து தேர்தலில் போட்டியிட்டு ஆடசியைக் கைப்பற்றியது எமது முதல்வர் சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியாகும். தமிழ் மக்கள் விடுதலைப் பலிகள் கட்சி அன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டிரு;தாலும் அதிக ஆசணங்களையும், அதிக விருப்பு வாக்குகளையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பெற்றிருந்தது.
நாம் அணைவரும் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் . எம்மமைப் பொறுத்தவரையில் தனிநாடு என்ற ஒன்றை நாம் கேட்க முடியாது . அன்று நாம் தனிநாடு கேட்பதற்கு காரணம் அன்றிருந்த அரசாங்கங்கள் எம்மை புறக்கணித்திருந்தது. அNது போன்று எமது இனத்திற்குரிய உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று நிலைமைஅ மாறிவிட்டது. இலங்கையில் எல்லா இடங்களிலும் சமத்துவம் , தமிழர்களின் உரிமைகள் ஆரம்பத்தில் மறுக்கப்பட்டதைப்போன்றல்லாமல் இன்று வழங்கப்பட்டிருக்கின்றது. ஆரம்பத்தில் தமிழர் பகுதிகள் அபிவிருத்தியில் பறக்கணிக்கப்பட்டன. ஆனால் இன்று தென்னிலங்கைக்கு நிகராக வடக்குகிழக்கு பிரதேசங்கள் புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவற்றை விட நாம் ஒன்றை யோசிக்கவேண்டும் எமது தமிழாகளின் சதவீதம் தற்போது இலங்கையில் 10 சதவீதத்தை விட குறைவக உள்ளது. 1981 களில் 13 சதவீதமாகக் காணப்பட்டது தற்போது மிகவும் குறைவடைந்தள்ளது. எங்களுடைய தமிழர்களின் இனவிகிதாசாரத்திற்கு அண்ணளவாக முஸ்லிம்களின் இனவிகிதாசாரமம் காணப்படுகின்றது. அந்தவகையில் அவர்களும் தங்களுக்கும் தனிநாடு வேண்டும் என்று கேட்கலாம் தானே. இவ்வாறு இச்சிறிய நாட்டினுள்ளே தங்களுக்குள்ளே தனிநாடு கேட்டு சண்டை பிடிக்கலாமா?. எனவே இன்றைய நிலையில் எமக்கு தேவையான உரிமைகள் மறுக்கப்படவில்லை. அதேபோன்று அபவிருத்தியில் புறக்கணிக்கப்படவில்லை. இத்தகைய சாதகமான நிலைகள்  இருக்கின்றபோது நாம் இருக்கின்ற இத்தகைய சாதகமான நிலைமைகளையே சிதைத்துவிட திட்டம்போடக்கூடாது.
கடந்த சனாதிபதி தேர்தலிலே நாம் என்ன செய்தோம்?. முற்றுமுழுதாக யுத்தத்தை களத்திலே நின்று வழிநடாத்திய போர்க்குற்றவாளி சரத்பொன்சேகாவை ஆதரித்தோம். உ;ணமையில் நாங்கள் அந்தத் தேர்தலில் ஒன்று ஒதுங்கியிருந்து தேர்தலைப் புறக்கணித்தருக்கலாம். அன்று கூட எல்லோருக்கும் தெரியும் மகிந்த ராசபக்ச அவர்களே மீண்டும் சனாதிபதியாக வருவார் எனும் விடயம். ஏனெனில் இலங்கையில் வடக்கு கிழக்கில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கையே அண்ணளவாக ¼ பங்ஞதான்; வரும் அப்படியிருக்கும்போது சுமார் ¾ பங்கு சிங்களவர்கள்தான் சனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தவர்கபளாக இருக்கிறார்கள். அவர்களில் 90 சதவீதமான ஆதரவு மகிந்தவிற்கே அன்று இருந்தது. அப்படியிருக்கும்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கதையைக் கேட்டு யுத்தக் குற்றவாளியான சரத்பொன்சேகாவினை நாம் ஆதரித்தோம்.
சனாதிபதி தேர்தல் நடந்து முடிவுகள் வந்தபோது என்ன நடந்தது? மீண்டும் சனாதிபதி மகிந்தவே ஆட்சிக்கு வந்தார். உண்மையில் எங்கள் வாக்குகளால் சாதாரணமாக எதிர்ப்பைக் காட்ட முடிந்ததே தவிர எங்களால் ஒருவரை வெற்றி பெறச் செய்முடியவில்லை. இருந்தும் நாம் தோற்கடிக்க எண்ணிய கட்சிதான் எமது கிழக்கு மண்ணில் பல அபிவிருத்திகளைச் செய்வதற்கு ஆணை வழங்கியது. நிதியுதவிசெய்தது. ஆனால் நாம் மாறாக அன்றே சரத்பொன்சேகாவிற்கு எதிராக நின்றிருந்தால் எம் மீது சனாதிபதியின் பற்று தற்போதுள்ளதை விட இன்னும் அதிகரித்திருக்கும். நம்பிக்கை வந்திருக்கும்.

தறபோதைய நிலையில் செய்யவேண்டியது
எனவே நாம் நம்பிக்கையயை வளர்த்தெடுப்பதற்கு முனைய வேண்டும். அதற்காக எமது பகுதிகளில் வெற்றி பெற்று கிழக்கு மண்ணை ஆழப்போவது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பதை நன்குணர்ந்து அதற்கு எமது ஆதரவைத் தெரிவித்து எமது உரிமைகளையும், அபிவிருத்தியையும்  பெற்றுக்கொள்ளவேண்டும்.
சர்வதேசம் எம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. நாம் அரச கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்னபதை கூறிக்கொண்டு மீண்டும் நாம் அரசுக்கு எதிராக வாக்களிக்க முற்பட்டால் அதாவது வெற்றிலைக்கு எதிராக வாக்களிக்க முற்பட்டால் எம்தலையில் நாமே மண்ணை அள்ளிப்போட்டது போன்று எம்தமிழ் தலைமைத்துவத்தை அகற்றுவதற்கு நாமே வாக்களித்தது போன்றதாகும்.

எனவே இந்த நாட்டில் எமது உரிமைகளையும், அபிவிருத்தியையும் பெற்று வாழ்வதே தலை சிறந்த வழி என்பதை அறிந்து எமது அரசியல் பாதையை திட்டமிடவேண்டும். இந்தவிடயத்திலாதான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு வாழ் தமிழர்களின் உரிமைக்காக எவ்வாறு காய்களை நகர்த்தி வருகின்றது. அதன் தலைவர் பிள்ளையான் பலவருட அரசியல் வாதிகள் இத்தனை வருடகாலம் சிந்திக்காத நல்ல தந்திரோபாயமான சிந்தனைகளை இன்று சிந்தித்து வெற்றிலையில் தமது கட்சியினைர தமது தலைமையில் களமிறக்கியிருக்கிறார். இதுவரை மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களிலிருற்தே பி;ள்ளையான் அவாகளின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டதொன்றாகிவிட்டது. இந்த நிலையில் ஒவ்வொரு தமிழ் மகனும், ஒவ்வொரு தமிழ் பிரதேசங்களும் முழுமையதன தமது ஆதரவை வழங்கினால் எமது மண்ணில் தமிழ் தலைமை அதாவது பிள்ளையான் அவர்கள் மிகவும் அதிக வித்தியாசத்தில் எமது மண்ணை முதல்வராக ஆழும் அதிகாரத்தை கொடுக்காலம். அது மாத்திரமன்றி நாம் முழுமையாக பிள்ளையான் அவர்களுக்கு ஆதவளிப்பதுடன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏணைய உறுப்பினர்களுக்கும் வாக்களித்து அவர்களையும் வெற்றிபெறச் செய்வதனூடாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பலத்தையும், பிள்ளையான் அவாகளின் மக்கள் ஆதரவையும் அரசுக்கு தெரிவித்து அதன் மூலம் எமது முதல்வருக்கு மிகவும் சக்தியுள்ள முதல்வராகவும், பேரம்பேசக்கூடிய தலைமைத்துத்தையும் வழங்கமுடியும்.
எனவே கடந்தகால வராலாறுகள் கசப்பானவiதான். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தமிழீழம் என்பதோ நிறைவேறாத ஒரு விடயமாகிவிட்டது. தரைப்படை, வான்படை, கடற்படை என மூன்று படைகளையும் சுமார் 30 ஆயிரம் போராளிகளையும் கொண்டிருந்த வேளையில் சாத்தியமாக்கமுடியாத விடயத்தை இனி ஒருபோதும் நினைத்துப் பார்க்கமுடியாது. இது மறுக்கமுடியாhத உண்மை. எனவே தற்போதைய யதார்த்த நிலைமையை உணர்ந்து தெளிவடைந்து எமது மக்களையும், மண்ணையும் அபிவிருத்தி செய்யவேண்டும், அத்துடன் எமது உரிமைகளை விட்டுக்கொடுக்காதளவிற்கு நாம் பலம் பெறவெண்டுமானால் எமது கிழக்கு மண்ணை ஒரு தமிழன் ஆழவேண்டும். அதுவும் மறுபடியும் எமது மண்ணை ஆழக்கூடிய தமிழன் என்றால் அது பிள்ளையான்தான்.
வெற்றிலைச்சின்னம் சிங்களவர்களுக்குரியது என சிலர் புரியாமல் பேசுகிறாhகள். ஆனால் கிழக்கு மண்ணைப் பொறுத்தவரையில் இத்தேர்தலில் அவ்வெற்றிலைச்சின்னத்தின் தலைமைப் பொறுப்பு ஒரு தமிழனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது என்பதை நாம் உணர்ந்துகொண்டு எமது தலைமையின் கரங்களைப் பலப்படுத்த கிழக்கு வாழ் தமிழனின் உரிமையை விட்டுக்கொடுக்காதிருக்கக்கூடியவாறு நாம் சிந்தித்து செயற்படவேண்டும்.
உரிமைகளுக்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் செய்தது என்ன?
கிழக்கு வாழ் தமிழ் மக்களின் தனித்துவக் கட்சியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இன்று பெருவிருட்சமாக வளர்ந்து வருகின்றது. உண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது கிழக்கு வாழ்தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்து வந்துள்ளதனை நாம் பல சந்தர்ப்பங்களில் அறிந்து கொள்ள முடியும்.

1. மாகாண சபைத் தேர்தல் - 2008 இல் துணிந்து நின்று போட்டியிட்டமை
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 2008 இல் இடம்பெற்றபோது தமிழ்தேசியக் கூட்டமைப்போ நாங்கள் வடக்கு கிழக்கு பிரிந்திருக்கின்றபோது போட்டியிடமாட்டோம் என்று ஒதுங்கிக் கொண்டார்கள். ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அரசுடன் இணைந்து போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றி தமிழர்களின் தலைமைத்துவத்தை இம்மண்ணில் உறுதிப்படுத்தியது. உண்மையில் அன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தேர்தலில் போட்டியிடாவிட்டால் நிலைமை எவ்வாறு இருந்திருக்கும் ?. தேர்தலில் முஸ்லிம்களின் சார்பில் போட்டியிட்ட ஹிஸ்புல்லா வெற்றி பெற்றிருப்பார். முஸ்லிம் தலைமைத்துவம் கிழக்குமண்ணை ஆட்சி செய்திருக்கும். ஆனால் எமது உரிமையை பாதுக்காக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அன்று அரசுடன் இணைந்து போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றினார்கள்.

2. பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டமை
கடந்த 2010 இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து போட்டியிடும் தீர்மானத்தை எடுத்திருந்தது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் ¾ பங்கும், முஸ்லிம்கள் ¼ பங்கும் உள்ளனர். இத்தகைய நிலைமையில் 5 ஆசணங்களில் 4 ஆசணங்கள் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டும். ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அத்தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இரண்டு ஆசணங்களை மாத்திரமே பெறமுடிந்திருக்கும். ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் சேகரிக்கப்படும் வாக்குகளும் சேர்த்து 3 ஆசணங்களை முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடு;த்திருக்கும். இதனை அறிந்து தமிழர்களுக்கு வரலாற்றுத் துNhகத்தை செய்துவிடக்கூடாது என்பதற்காகவே தனித்து போட்டியிட்டது. அதேவேளை பெரியளவில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மௌனம் காத்தும் வந்தது. இத்தகைய போக்கு தமிழர்களின் உரிமைக்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு செயலாகும்.

3. செயற்கையான குடியேற்றங்களை தடுத்து நிறுத்தியமை
கிழக்கு மண்ணைப் பொறுத்த வரையில் மூவின மக்களும் வாழ்கின்ற பிரதேசமாகும். இங்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழர்களும், அடுத்தாக முஸ்லிம்களும், மிகச் சொற்ப அளவில் சிங்களவர்களும் (எல்லைக் கிராமங்கள் சில) வாழ்கின்றனர். இத்தகைய மட்டக்களப்பில் தமிழர்களின் உரிமைகள்  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினாலேயே பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. இயற்கையாக ஆரம்ப காலங்களில் வேற்றினத்தவர் வாழ்ந்த பிரதேச்களில் அவர்கள் மீள்குடியேறுகின்றபோது அதனை ஒன்றும் செய்துவிடமுடியாது. ஆனால் தமிழர்களின் நிலப்பகுதிகள் மீது அத்துமீடி வேறு ஓர் இனம் குடியேற முற்படும்போது அதனை தடுத்து நிறுத்திய பெருமை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையே சாரும். குறிப்பாக மட்டக்களப்பின் படுவான் கரை பிரதேசத்தில்  உள்ள மாவடிஓடை எனும் கிராமத்தில் முஸ்லிம்கள் அத்துமீறிக்குடியேறியபோது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியிருந்தது. அதேபோன்று அண்மையில் மட்டக்கனப்பிற்கு மகிந்த வந்திருந்தபோது கூட பிள்ளையான் அவர்களால் தமது பிரதேச அபிவிருத்தியுடன் காணி உரிமை போன்றனவும் தரப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

4. தமிழர்களின் தனித்துவமான வழிபாட்டுத்தலங்களின் வளர்ச்சிக்கு வித்திட்டமை.
ஒரு இனத்தின் தனித்துவம், அடையாள் என்பது அதனுடைய கலாசாரம், சமயம் என்பவற்றுக்கூடபாகவும் பேணப்படும். அந்தவகையில் தமிழர்களின் தனித்துவத்தை அடையாளப்படுத்துபவையாக சைவ ஆலயங்களும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலயங்களும் காணப்படுகின்றன. எனவே எமது தமிழ் இனத்தின் தனித்தவத்தை பெணுவதற்றகாக ஆலயங்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் பலிகளினால் பல்வேறு நிதியுதவிகள், ஒலிபெருக்கிகள் முதலியன பல இடங்களில் வழங்கிவைக்கப்பட்டிரக்கின்ற. உண்மையில் எமது சமய கலாசார விடயங்கள் பாதுகாக்கப்படும்போது தானாகவே இனத்தின் நிiலைப்பும் உறுதிப்படுத்தப்படும். என்பதை உணர்ந்தே இத்தகைய செயற்றிட்டங்களை தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செய்து வருகின்றது.

5. தமிழர்களின் கல்வி நிலையை மேம்படுத்தும் செயற்றிட்டங்கள்.
அறிவாளிகளும், அறிவாளிகளைக் கொண்ட நாடகளுமே இன்று உலகின் வல்லரசுகளாகத் திகழ்கின்றன. அந்தவகையில் எமது தமிழ் இனம் ஒன்றும் கல்வியில் பின்தங்கியவாகள் இல்லலை. ஆனால் கடந்தகால யுத்தங்கள், ஒழங்கான அரசியல் வழிநடத்தல் இன்மையே மட்டக்களப்பு மாவட்டம் போன்றவற்றின் கல்வி நிலையை பின்னடைய வைத்தன. இதனால் ஏற்பட்ட விளைவு எமது பகுதியிலேயே அதிகாரிகளாக சிங்களவரோ அல்லது முஸ்லிமோ பதவி வகித்தார்கள் குறிப்பாக இன்று பல மருத்துவமனைகளில் சிங்கள இனத்தவாகளெ மருத்துவாகளாக கடமை புரிகின்றார்கள். இதற்குக் காரணம் நாம் அவர்களை போன்று கல்வித் துறையில் அதிக ஈடுபாடீல்லாமல் பின்தங்கியதுதான. இந்த நிலைமைய எமக்குனு தந்தவர்கள் முன்னைய தமிழ் அரசியல் தலைவாகள். ஆகவே எமது மண்ணில் உள்ள பதவிகளை நியாயப்படி எமக்கு கிடைக்கவேண்டிய பதவிகளை நாம் பெறவேண்டுமாயின் கல்வியில் அதிக அக்கறை செலுத்தி முன்னேற வேண்டும். நாம் அவ்வாறு படித்து நல்ல நிலைக்கு வருகின்றபோது எமக்கு கிடைக்கவேண்டிய ஒவ்வொரு பதவியையும் எமது தமிழன் ஒருவன் பெற்றுக்கொள்ளமுடியும். இதனையுணர்ந்தே தமிழ் மக்கள்  விடுதலைப் புலிகள் கட்சியின் முதல்வர் பல்வேறு செயற்றிட்டங்களை பாடசாலைகளுக்கு முன்மொழிந்தார். அதுமட்டுமன்றி இத்தேர்தலில் வெற்றி பெற்றவுடன் கல்வி அமைச்சினை தமது கட்சிக்கு வழங்கும்படி கேட்கப்போவதாகவும் பிரசாரக் கூட்டமொன்றிலே தெரிவத்தார்.

இவ்வாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தமது கிழக்கு வாழ் தமிழர்களின் உரிமைக்காக தமது அதிகாரத்தின் உச்சஅளவைப் பயன்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எதிhகாலத்தில் தமிழர்கள் முழுமையான பலத்தினை வாக்கின் மூலம் வழங்குவதனூடாக தமிழனின் தலைநிமிர்விற்கு வழிவகுக்கலாம்.
  -ஆராவாணன் -