உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/14/2012

| |

கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் ஆட்சியமைக்க அரசாங்கம் தயார்

Hakeem-Mahindaகிழக்கு மாகாண சபையில் ஆட்சியை அமைப்பதற்கான தயார் நிலையில் தாங்கள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும்,அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த கிழக்கு மாகாண ஆளுநருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக அறிவித்துள்ளார்.

மாகாண ஆளுநர் றியல் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரமவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மேலும் குறிப்பிட்டள்ளதாவது, கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சி என்ற வகையில் இந்தக் கடிதத்தை அனுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும்தேசிய சுதந்திர முன்னணியும் கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்க ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அமைச்சர் சுசில் பிரேமஜயந்தமாகாணசபைக்குத் தெரிவான உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலைத் தேர்தல் ஆணையாளர் வர்த்தமானியில் வெளியிட்ட பின்னர் முதலமைச்சர் பெயரை அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.