உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/16/2012

| |

வருங்கால தொலைபேசி

நவீன தொடுதிரை தொலைபேசி பயன்படுத்துவதில் உங்களுக்கு சிரமமா..?
உள்ளிருக்கும் விசைகளை அழுத்த முடியாமல் தொடுதிரையில் விரல்கள் சறுக்குகின்றனவா..?
இதற்கெல்லாம் தீர்வாக வருகிறது கலிபோர்னியா,தக்துஸ் நிறுவனத்தின் அரிய புதிய கண்டுபிடிப்பு.
கலிபோர்னியாவின் தக்துஸ் நிறுவனம்இ தொடுதிரை மீது பயன்பாட்டு தேவை ஏற்படுமாயின் தோன்றி பின் மறையக்கூடிய விசைகளையுடைய மெல்லிய அட்டை ஒன்றை உருவாக்கியுள்ளது.
தற்போதைய தொடுதிரை தொலைபேசிகளில் இருக்கும் விசைகளின் அளவுக்கேற்ப அவை அமையும் என அந்நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப உலகின் புதிய கண்டுபிடிப்பான இது நவீன தொலைபேசி மட்டுமல்லாது ‘டேப்லட்’ தொலை இயக்கி போன்றவைகளுக்கும் பயன்படக்கூடும்.
மேலும்,தக்துஸ் தனது தொழில்நுட்ப கண்டுபிடிப்பை தொடுதிரைகள் எதிர்நோக்கும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கமுடைய
‘உலகின் முதல்’ கண்டுபிடிப்பென புகழாரம் சூட்டியுள்ளது.
தக்துஸ்,தொடுதிரை உலகிற்கு ஒரு புது பரிமாணத்தை இதன்வழி அளித்துள்ளது என்றால் அது மிகையாகாது.
நவீன தொடுதிரை சாதனங்கள் குறிப்பாக தொலைபேசிகள் வெவ்வேறான மெல்லிய தட்டைகளைக்கொண்டே அமைக்கப்பட்டவை. புதிதாய் கண்டுபிடுக்கப்பட்ட
‘தொட்டுணரக் கூடிய’ தட்டை தற்போது பயன்பாட்டில் இருக்கும் கண்ணாடி அட்டைகளை போன்றே செயல்படக்கூடியவை என மேலும் கூறியுள்ளது தக்துஸ் நிறுவனம்.