உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/16/2012

| |

Skype மற்றும் Google Talk-கை பயன்படுத்தினால் 15 ஆண்டு சிறைத்தண்டனை

உலகில் அதிகளவான மக்களால் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற தொழில்நுட்பமாக Skype மற்றும் Google Talk திகழ்கிறது.
எனினும் இதன் வளர்ச்சி காரணமாக தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்கும் பல நிறுவனங்கள் நட்டமடைந்துள்ளன.
இக்காரணத்தினைக் கருத்தில் கொண்டு எத்தியோப்பியா,
இணையவழி ஒலிப் பரிமாற்ற சேவைகளைப்(Voice-over-Internet-Protocol (VoIP) பயன்படுத்துபவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்குவதற்கான புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
இந்த சட்டம் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பான தகவல்கள் தற்போதே ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன.
இச்சட்டத்தின் படி இணையவழி ஒலிப்பரிமாற்ற சேவைகளைப் பயன்படுத்தினால் 15 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
தேசிய பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டே இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் போது உண்மையான காரணம் இதுவல்ல என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எத்தியோப்பிய அரசாங்கம் அந்நாட்டின் தொலைத்தொடர்பாடல் சேவை வழங்கலில் ஏக போக உரிமையைக் கொண்டுள்ளது. அதன் சேவையான ‘எத்தியோ டெலிகோ’ அந்நாட்டின் ஒரே சேவை வழங்குநர் என்பதுடன் கட்டணமும் மிக அதிகமாகக் காணப்படுகின்றது.
ஆனால் மக்கள் Skype போன்ற சேவைகளைக் குறைந்த கட்டணத்தில் அதிகமாகப் பயன்படுத்துவதனால் அரசாங்கத்தின் வருவாய் வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.