Election 2018

9/16/2012

| |

கிழக்கில் ஆட்சியமைப்பது UPFA என்பது உறுதி; மு.காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பால் தாமதம் முதலமைச்சர் யார்?

மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
கிழக்கு மாகாண சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14 ஆசனங்களையும் அதன் பங்காளிக்கட்சிகளாக இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திரமுன்னணி ஆகியன தனித்துப் போட்டியிட்டு முறையே 7 ஆசனங்களையும், ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தன.
கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஐ.ம.சு முன்னணிக்கு தனித்துக் களமிறங்கிய மு.காவின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில் அக்கட்சியின் ஆதரவு தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சராக யார் நியமிக்கப்படுவாரென்ற வினா அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. ஊடகங்கள் தமக்குக் கிடைத்த தகவல்களை வைத்து ஒரு சிலரை மையப்படுத்தி செய்திகளைப் பிரசுரித்து வருகின்றபோதும் இது குறித்து அரசின் உயர்மட்டம் தெளிவான அறி விப்பை இன்னும் விடுக்கவில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் முதலமைச்சர் கோரிக்கையை அடிநாதமாக வைத்து தேர்தல் காலங்களில் தமது பிரசாரங்களை முடுக்கி விட்டிருந்தது. தற் போதைய பேச்சுவார்த்தையிலும் அரச தலைமையிடமும் அந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படு கின்றது. இதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அதாவுல்லா தலைமை யிலான தேசிய காங்கிரஸ¤ம், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ¤ம் தமது கட்சிகளுக்கு முதலமைச்சர் பதவியைக் கோரியுள்ளன. இந்தக் கட்சிகளின் தலைவர்கள் கிழக்கு மாகாண விவகாரத்தைக் கையாளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அடங்கிய குழுவிடம் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளதுடன் தமது தெரிவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் அமீரலியை பிரேரித்துள்ளன.
தாம் தொடர்ந்தும் அரசாங்கத்துடனேயே இருக்கும் கட்சிகளெனவும் இன்ப துன்பங்களில் கைகொடுப்பவைகளெனவும் எடுத்தியம்பியுள்ளன.
கடந்த தேர்தலில் தமக்கு முதலமைச்சர் பதவி தொடர்பில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோதும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அது நிறை வேறாமற் போனமையையும் அவ்விரு கட்சிகளும் சுட்டிக்காட்டியுள்ளன.
இதேவேளை கிழக்கில் ஐ.ம.சு.முன்னணி ஆட்சியமைப்பதில் பங்காளியாகியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது கட்சியின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றவருமான ஹாபிஸ் நkர் அஹமட்டை முதலமைச்சர் பதவிக்கு நியமிக்குமாறு அரசிடம் கோரி யுள்ளது. அதேவேளை முன்னாள் முதல மைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனையே (பிள்ளையான்) மீண்டும் முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டுமென்ற ஒரு சாராரின் கோரிக்கைகள் வலுவாக எழுந்துள்ளதுடன் அது தொடர்பில் அரச உயர் மட்டத்துக்கும் உணர்த்தப்பட்டுள்ளது.
முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் தேவை என்ற விடயத்தில் மு.கா அரசிடம் உறுதியான கோரிக்கைகளை முன்வைத்துள்ள போதிலும் தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ¤க்கு அந்தப்பதவி கிடைக்கக் கூடாது என்பதில் அக்கட்சி தீவிரமாகவுள்ளது.
அதேவேளை மு.காவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படுவதால் ஏற்படும் இடர்பாடுகளையும் சிக்கல்களையும் தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அரச மேல்மட்டத்திடம் தெளிவுபடுத்தி யுள்ளன.
நிலைமை இவ்விதமிருக்க முன்னாள் அமைச்சரும் திருமலை மாவட்டத்தில் ஸ்ரீ.ல.சு.க சார்பில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டவருமான நஜீப் ஏ.மஜீத்தின் பெயரும் முதலமைச்சர் பதவிக்கு பலமாக அடிபடுவதுடன் அவர் நியமிக்கப்படுவதற் கான சாத்தியக் கூறுகள் மேலோங்கியி ருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மு.காவும், அதன் அரசியல் எதிரிகளான தேசிய காங்கிரஸ், அ.இ.முஸ்லிம் காங் கிரஸ் ஆகியன முதலமைச்சர் தொடர்பில் மாறுபட்ட கோரிக்கைகளை முன்வைத் திருப்பதனால் ஒரு குழப்பமான நிலை தோன்றியுள்ளது. எனவே எல்லோருக்கும் பொதுவான ஒருவராக நஜீப் ஏ.மஜீத் இனங்காணப்பட் டுள்ளாரெனவும் அவரை நியமிக்கும் வாய்ப்புகள் பெரிதும் உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்ட கால விசுவாசியான நஜீப் ஏ.மஜீத், மர்ஹும் அஷ்ரப்பின் காலத்தில் சந்திரிகா - அஷ்ரப் ஒப்பந்தத்தின் பின்னர் இடம் பெற்ற பொதுத்தேர்தலில் திருமலை மாவட்டத்தில் மு.கா. எம்.பியாகத் தெரிவு செய்யப்பட்டவர். மர்ஹும் அஷ்ரப், மு.கா தலைவர் ஹக்கீமுடன் நெருக்கமாகச் செயற்பட்டவர். அதேவேளை பிற்காலத்தில் அமைச்சர்களான, ரிசாட், அதாவுல்லா ஆகியோருடனும் நஜீப் ஏ.மஜீத் நல்லுறவுடன் செயற்பட்டு வந்தவர். அத்துடன் அமைச்சர் பதவி வகித்தவர். இத்தகைய காரணங் களினால் அவரது பெயர் பலமாக அடிபடுகின்றது.
தமிழ்க் கூட்டமைப்பு மிகவும் பணிவாக இறங்கி, பகிரங்கமாக முதலமைச்சர் பதவியை முஸ்லிம் ஒருவருக்கு வழங்குவோ மென்று அறிவித்தமை முஸ்லிம் அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மு.கா தலைமைத் துவத்துக்கு சங்கடமான ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளதுடன் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமையுங்களென்ற ஒரு சாராரின் கோரிக்கைக்கு வலு சேர்த்துள்ளது. அரச எதிர்ப்பு ஊடகங்களுக்கும் அரச எதிர்ப்பையே தொழிலாக நடத்தும் அரசியல்வாதிகளுக்கும் இது ஒரு பேசும் பொருளாக மாறியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாம் யாருக்கு ஆதரவு வழங்குவதென்பதை பகிரங்கமாக இன்னும் அறிவிக்காத நிலையில் அக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உள்ளக விமர்சனங்களையும் உள் முரண்பாடுகளையும் தவிர்க்கும் வகையில் இன்று மீண்டும் கொழும்பில் கூடுகின்றது. தேர்தல் வெற்றியின் பின்னர் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் அக்கட்சியில் வெற்றிபெற்ற மாகாணசபை உறுப்பினர்கள், மு.கா பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் தலைவர் ஹக்கீமின் இல்லத் திலும், தாருஸ்ஸலாமிலும், கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலிலும் கூடி நிலைமைகளை பலதடவைகள் ஆராய்ந்தனர். அரசாங்கம் மற்றும் தமிழ்க் கூட்டமைப்புடன் ஆட்சியமைப்பதிலுள்ள சாதக, பாதகங்கள் இங்கு விரிவாக ஆராயப்பட்டபோதும் உறுதியான முடிவுகள் எடுக்கப்படாத நிலையில் தலைவர் ஹக்கீமுக்கே தீர்மான மெடுக்கும் அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டன.
நிலைமை இவ்விதமிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங் கிரஸ் தமக்குத்தான் ஆட்சி அமைக்க ஆதரவளிக்குமென உறுதியாக நம்பி யுள்ளபோதும் அந்த நம்பிக்கை இப்போது படிப்படியாகக் கரைந்து வருகின்றது. வடக்கு - கிழக்கு இணைப்பு மற்றும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை பிரதான கோஷங்களாக முதன்மைப்படுத்தி வாக்குகளை வசீகரித்த தமிழ்த்தலைமையுடன் முஸ்லிம் தலைமை கூட்டுவைக்கக்கூடிய சூழ்நிலை மிகவும் அரிதாகவேயுள்ளது. தலைவர்கள் என்னதான் கருதினாலும் முஸ்லிம் மக்களின் மனோபாவம் ஹினிதி-ஷிழிணிவி கூட்டுக்கு எதிராகவேயுள்ளது.
கடந்த காலங்களில் பேச்சுவார்த்தை மேசைகளில் முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கையை ஏற்காத தமிழ்த்தலைமைகள் தற்போது முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு இவ்வளவு விட்டுக் கொடுப்புக்களைச் செய்வதும் அதன் காலில் விழாத குறையாக கெஞ்சி மண்டியிடுவதும் ஏன் என்ற வினாவுக்கு இன்றும் சரியான விடை கிடைக்கவில்லை அரசாங்கத்தை சர்வதேச ரீதியில் அம்பலப்படுத்துவதற்கு இதுவே பொருத்த மான மார்க்கம் எனக் கூட்டமைப்பு கருதுவதனாலேயே முஸ்லிம் காங்கிரஸ¤க்கு இவ்வளவு விட்டுக்கொடுப்பு செய்வதற்கான மூலகாரணமென ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.