10/27/2012

| |

மட்டக்களப்பில் நாளை 10 மணிநேர மின்வெட்டு


மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை பல இடங்களில் 10 மணித்தியால மின்வெட்டு இடம் பெறுமென இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இம் மின்வெட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 இடங்களில் மேற்கொள்ளப்படுமெனவும் மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெறவுள்ளதால் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான 10 மணிநேர மின்வெட்டு மண்டூர், வெல்லாவெளி, கோயில்போரதீவு, பொறுகாமம், பழுகாமம், முனைக்காடு, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, திக்கோடை, அரசடித்தீவு, தும்பங்கேணி, தாந்தாமலை, அம்பிளாந்துறை, எருவில், குறுமண்வெளி, பெரியகல்லாறு, கோட்டைக்கல்லாறு, களுவாஞ்சிக்குடி, களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையம், மாங்காடு, குருக்கள்மடம், கிரான்குளம், புதுக்குடியிருப்பு, தாளங்குடா மற்றும் மண்முனை ஆகிய பிரதேசங்களில் அமுல்படுத்தப்படும் என கல்லடியிலுள்ள பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.