உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/06/2012

| |

ஆஸி சென்ற இலங்கையர் 18பேர் நவுறு தீவுக்கு அனுப்பிவைப்புஅகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்களில் சுமார் 18 பேர் உட்பட 33பேர் அடங்கிய குழுவொன்று தென் பசுபிக் கடற்பரப்பைச் சேர்ந்த நவுறு தீவை இன்று வெள்ளிக்கிழமை சென்றடைந்துள்ளனர். 
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்கள் அடங்கிய ஆறாவது குழவினரே இன்று நவுறு தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று அவுஸ்திரேலியன் அசோசியேட் பிரெஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 
இவ்வாறு இன்றைய தினம் நவுறுவுக்கு சென்றடைந்த குழுவினரில் 14 ஆப்கானியர்களும் ஒரு ஒரு ஈரானியரும் உள்ளடங்குகின்றனர். இவர்களின் வருகையினை அடுத்து அகதி அந்தஸ்து கோரி நவுறு தீவில் பகுதியில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 184ஆக அதிகரித்துள்ளது. 
கிறிஸ்மஸ் தீவிலிருந்து விசேட விமானமொன்றின் மூலமே இவர்கள் இன்று காலை நவுறுவைச் சென்றடைந்துள்ளனர். இவர்கள் தற்காலிக 
இடமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 
கடந்த செப்டெம்பர் மாதம் மூன்று பேர் அகதி விண்ணப்பத்தை நிராகரித்த நிலையில் நாடு திரும்பியதை அடுத்து 181 புகலிடக் கோரிக்கையாளர்கள் றவுறுவில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.