உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/10/2012

| |

18 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய நடவடிக்கை

பல்வேறு காரணங்களாலும் இலகுவில் ஆபத்துக்கு ஆளாகும் பலவீனமான நிலையிலுள்ள 18 வயதிலும் குறைவான பெண் பிள்ளைகளின் உரிமைகளை பாதுகாக்கவென புதிய நடவடிக்கையை தொடரவுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சு இன்று கூறியது. 

பெண்களின் அந்தஸ்துக்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவிடம் பல அங்கத்துவ நாடுகள் முன்வைத்த ஆலோசனைகளின் அடிப்படையில் ஒக்டோபர் 11ஆம் திகதியை பெண் பிள்ளைகள் தினமாகக் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

முதலாவது சர்வதேச பெண் பிள்ளைகள் தின கொண்டாட்டத்தை கருத்திற்கொண்டு அமைச்சு, பெண் பிள்ளைகளைப் பாதுகாக்கும் புதிய ஏற்பாடுகளை செய்யவுள்ளது என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கல்வி, சுகாதார வசதி, மொழி, குடும்ப அலகு, பெற்றோர் ஆதரவு, சமூக பாதுகாப்பு, பால்நிலை உரிமைகள் என்பவற்றை பெண் பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுப்பதே சர்வதேச பெண் பிள்ளைகள் தினத்தைக் கொண்டாடுவதன் நோக்கமானும் என அமைச்சின் அதிகாரி மேலும் கூறினார்.