உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/10/2012

| |

18 வயது யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

ஆனமடு, திவுல்வெவ பிரதேசத்தில் இளம் பெண்ணொருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில்  ஒருவர்  திங்கட்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். 
ஆனமடு, திவுல்வெவ பிரதேசத்தில் திருமணமாகாத நிலையில் குழந்தையொன்றின் தாயை நேற்று திங்கட்கிழமை இரவு கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர். 
ஆனமடு திவுல்வௌ பிரதேசத்தைச் சேர்ந்த உதேசிகா (வயது 18) என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவர். 

இப்பெண்ணும் சந்தேக நபரும் 3 வருடங்களுக்கு முன்னர்  பிரதேசத்தை விட்டு வெளியேறி பிறிதொரு இடத்தில் கணவன், மனைவியாக வாழ்ந்துவந்ததாகவும் இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தையொன்று உள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். 

இப்பெண் 3 வருடங்களுக்கு முன்னர் 15 வயதை உடையவரென்பதால் சிறுமியைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபருக்கு எதிராக ஆனமடு நீதிமன்றத்தில் தற்போது வழக்கு விசாரணை நடைபெறுவதாகவும் உறவினர்கள் கூறினர். 

சட்டப்படி திருமணம் செய்துகொள்ளாத இவர்கள் சில காலம் கணவன், மனைவியாக வாழ்ந்துவந்ததாகவும்  பின்னர் இப்பெண் சந்தேக நபரை விட்டுப் பிரிந்து தனது தாயுடன் வாழ்ந்துவந்துள்ளார்.  இந்நிலையில், சந்தேக நபர் தன்னுடன் வருமாறு பல தடவைகள் இப்பெண்ணிடம் கேட்டபோதிலும், இதனை இப்பெண் மறுத்துவந்துள்ளதாகவும் உறவினர்கள் குறிப்பிட்டனர். 

நேற்றையதினம் இப்பெண்ணை சந்தித்த சந்தேக நபர் தன்னுடன் வருமாறு கேட்டதாகவும் இதற்கு மறுப்புத் தெரிவித்த இப்பெண்ணை ஆத்திரமடைந்த சந்தேக நபர் கத்தியால் குத்தியும் பொல்லால் தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த இப்பெண் ஆனமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் ஆனமடு பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.