உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/12/2012

| |

2ஆவது சர்வதேச விமான நிலையம் 2012ஆம் ஆண்டு இறுதிக்குள் திறப்பு; அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன


இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமானநிலையம் 2012 இறுதிக்குள் திறந்துவைக்கப்படும் என்று சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். 
 
நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை இலங்கை விமான விபத்துகள் தொடர்பான ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
இலங்கை விமானசேவையின் பாதுகாப்புத் தொடர்பில் நாம் பெருமையடைகின்றோம். கடந்த தசாப்தத்தில் விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் தடுக்கி விழுந்ததில் மட்டும் இரண்டு  பேர் மரணித்துள்ளனர். வேறு விமான விபத்துகள் இடம்பெறவில்லை. 
 
குறிப்பாக, எமது நாட்டில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸுக்குச் சொந்தமான 21 விமானங்கள், மிஹின் லங்காவுக்குச் சொந்த மான 3 விமானங்கள் ஆகியனவே  சேவையில் ஈடுபடுகின்றன. ஆசிய வான்பரப்பிலேயே உலகிலுள்ள விமானங்களுள் 100இற்கு  35 சதவீதமானவர்கள் பயணிக்கின்றனர். 
 
எமது விமானசேவை தெற்காசியாவில் முதலாம் இடத்தையும், ஆசியாவில் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளது. இதனையிட்டு நாம் பெருமையடைகின்றோம். அத்துடன், இலங்கையில் சர்வதேச விமானசேவைகள் மட்டுமன்றி, உள்ளூர் விமானசேவைகளும், விமான நிலையங்களும் நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றன. இரத்மலானை விமான நிலையம் உள்ளூர் சேவைக்காகத் திறந்துவைக்கப்படவுள்ளது. அத்துடன், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட விமானநிலையங்களும் நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றன.