உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/04/2012

| |

20 விழுக்காடு செறிவு கொண்ட யுரேனியத்தைப் பெற ஈரான் விரும்புகிறது


வெளிநாடுகள் வழங்கிய 20 விழுக்காடு செறிவு கொண்ட யுரேனியத்தை ஈரான் பெற்றால், இத்தகைய செறிந்த யுரேனியத்தைச் சொந்தமாக உற்பத்தி செய்ய வேண்டிய தேவை ஈரானுக்கு இருக்காது என்று ஈரான் அரசுத் தலைவர் முகமது அகமதினேஜரிது அக்டோபர் திங்கள் 2ம் நாள் கூறினார்.
3.5 விழுக்காடு செறிவு கொண்ட யுரேனியத்துக்கு ஈடாக 20 விழுக்காடு செறிவு கொண்ட யுரேனியத்தைப் பெற ஈரான் விரும்புகின்றது. ஆனால், இதுவரை, எந்த நாடும் அல்லது நிறுவனமும் ஈரானுக்கு 20 விழுக்காடு செறிவு கொண்ட யுரேனியத்தை வழங்க வில்லை என்று தெஹரானில் அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் முகமது அகமதினேஜரிது கூறினார். அணு ஆற்றல் பிரச்சினையில் தனது உரிமையை ஈரான் கைவிடாது என்று அதே வேளை அவர் வலியுறுத்தினார்.