உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/10/2012

| |

2000 வெற்றிடங்களால் தபால் அலுவலகங்கள் மூடவேண்டி ஏற்படலாம்: த.ஊ.சங்கம்

நாடளாவிய ரீதியில் தபால் அலுவலகங்களில் 2000க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருப்பதாகவும் இவை நிரப்பப்படாது போகுமாயின் தபால் அலுவலகங்களை அடுத்த வருடம் மூடவேண்டி வரலாம் எனவும் தபால் ஊழியர் சங்கங்கள் தெரிவித்தன. 

ஊழியர் பற்றாக்குறை காரணமாக தபால் அலுவலகங்களில் கடமைகளில் ஒழுங்கான கட்டமைப்பை பேண முடியாதுள்ளதாக தபால் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் பண்டார கூறினார். 

தபால் அலுவலகங்களில் போதிய ஆளணி இல்லாததால் தபால் அனுப்புதல் போன்ற அடிப்படை வேலைகள் மட்டுமே நடக்கின்றன. இந்த போக்கு தொடருமாயின் தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுவிடும். அப்போது நாம் வேறு வேலை தேடி வேண்டியிருக்கும் என அவர் கூறினார். 

1800 புதிய ஊழியர்களை நியமிக்க பரீட்சை வைக்கப்பட்டு பெறுபேறும் வெளியிடப்பட்டுள்ளது. ஆயினும் புதிய நியமனங்கள் இன்னும் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். 

தற்போது காணப்படும் நிதி, நிர்வாக தடைகள் அகற்றப்படாதுவிடின் தபால் திணைக்களம் விரைவில் மூடப்படலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.