உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/06/2012

| |

மனித அபிவிருத்தியில் இலங்கை 28% வளர்ச்சி


1980ஆம் ஆண்டிலிருந்து 2011 வரையான காலப்பகுதியில் இலங்கையானது மனித அபிவிருத்திச் சுட்டெண்ணில் 28 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி சபை நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட 'இலங்கை மனித அபிவிருத்தி அறிக்கை 2012'இல் கூறப்பட்டுள்ளது. 

இலங்கையின் தனிமனித வருமானம் இரண்டு மடங்காகியுள்ளது எனவும் வறியோர் தொகை அரைவாசியாக குறைந்துவிட்டது எனவும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 சதவீதமாக பேணப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்கு முக்கிய பங்காற்றிய டாக்டர் நிஷா அருணதிலக்க கூறினார். 

சுகாதாரம், கல்வி, வருமானம் ஆகிய முக்கிய காட்டிகளில் கம்பஹா மாவட்டம் முன்னிலை வகிப்பதாகவும் இந்த மாவட்டத்தின் மனித அபிவிருத்தி சுட்டெண் மலேசியாவுக்கு சமமாக உள்ளது எனவும் அவர் கூறினார். 

உயர் வருமான வகைப்படுத்தல்களுக்குள் நாடுகள் செல்லும்போது வருமான பகிர்வில் ஏற்படும் சமமின்மையை குறைப்பதில் இலங்கை ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக முடியும் என இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி சபையின் உதவிச் செயலாளர் நாயகம் அஜே சிப்பர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

உத்வேகத்துடன் முன்னேறத் துடிக்கும் மத்தியதர வர்க்கத்தினரில் எமது கவனத்தை செலுத்துவதே கூடிய பலன் தரவல்லது என நாணய கூட்டுறவு விவகார சிரேஷ்ட அமைச்சரான டாக்டர் சரத் அமுனுகம தெரிவித்தார்.