உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/05/2012

| |

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடமைக்க 35 ஏக்கர் காணி ஒதுக்கீடு

கொழும்பு நகரத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்காக 15 வௌ;வேறு இடங்களில் 35 ஏக்கர் காணி நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. 

தெரிவு செய்யப்பட்ட இடங்களிலுள்ள குடும்பங்கள் சகல வசதிகளும் கொண்ட அடுக்குமாடி வீடுகளில் குடியமர்த்தப்படவுள்ளனர். இந்த குடும்பங்கள் வசித்த இடங்கள், கொழும்பு நகர அபிவிருத்தி திட்டத்துக்கு அமைய வர்த்தக மற்றும் அரை – அபிவிருத்தி செற்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். 

ஏற்கனவே, தொடங்கிவிட்ட இந்த செயற்திட்டத்தின்படி, மோசமான நிலைமையில் சேரிகளில் வாழும் மக்களுக்கு 65,000 வீடுகள் வழங்கப்படும் நகர அபிவிருத்தி அதிகாரசபை 9781 வீடுகளை அமைப்பதற்கான ஒப்பந்தங்களை 11 செயற்திட்டங்களின் கீழ் வழங்கியுள்ளது. 

ஏற்கனவே, நிர்மாணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த வீடுகள் இரண்டு வருடங்களில் பூர்த்தியாக்கப்படும். கம்பனி வீதி, கிருளப்பனை ஆகிய பகுதிகள் மீள்குடியேற்றத்துக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் இனங்காணப்பட்டுள்ளன.