உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/09/2012

| |

வெனிசூவேலாவில் 4-வது தடவையும் அதிபரானார் சாவேஸ்

வெனிசூவேலாவின் இடதுசாரித் தலைவர் ஹூகோ சாவேஸ் நான்காவது தடவையாகவும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் ஹென்ரிக் கேப்ரிலேஸை விட 10 வீதம் அதிகமாக, 54 வீதமான வாக்குகளை சாவேஸ் பெற்றுள்ளார்.
வெனிசுவேலா அதன் ஜனநாயக சோசலிஸ பாதையில் தொடர்ந்தும் வீறுகொண்டு பயணிக்கும் என்று ஹூகோ சாவேஸ், வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள அவரது ஆதரவாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
லத்தீன் அமெரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு எதிராக குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் தலைவர்களில் அதிபர் சாவேஸ் மிக முக்கியமானவராக பார்க்கப்படுகிறார்.
இம்முறைத் தேர்தலில் தோல்வியடைந்தெள்ள எதிரணியினர், நாட்டில் அரைவாசிப்பேர் அதிபர் சாவேஸின் கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருப்பதை அவர் உணரவேண்டுமென்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
சாவேஸ் அண்மையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றிருந்தார். அவர் இப்போது பூரணமாக குணமடைந்துவிட்டதாகக் கூறுகிறார்.
எண்ணெய்வளம் மற்றும் இயற்கை வாயு என உலகின் பெரும்பங்கு இயற்கை வளப் படிமங்களை கொண்ட நாடு வெனிசூவேலா என்பது குறிப்பிடத்தக்கது.