உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/09/2012

| |

பொலிஸ் திணைக்களத்துக்காக ரூ. 50 மில்லியன் செலவில் 18 குதிரைகள்

பொலிஸ் திணைக்களத்தின் குதிரைப்படைப் பிரிவுக்கு 18 குதிரைகளைக் கொள்வனவு செய்ய அத்திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதற்காக 50 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ள நிலையில், அதற்காக அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து  மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன. 

கொள்வனவு செய்யப்படவுள்ள விசேட ரகத்தைச் சேர்ந்த குதிரைகளுக்காக தலா 2.7 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்வதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 

பொலிஸ் குதிரைப்படைப் பிரிவானது நாட்டின் மிகவும் மரியாதைமிக்க விழாப் படையணியாகத் திகழ்கின்றது. இந்நிலையில், தற்போது மேற்படி பிரிவில் 40 குதிரைகள் காணப்படுகின்ற போதிலும் அவை தீவிரமாக கடமையாற்றும் வயதைக் கடந்துள்ளன.  இவை அதிகளவான மக்கள் கூட்டத்தைக் கலைப்பதற்காகவும், தேசிய சம்பிரதாயபூர்வ நிகழ்ச்சிகளின்போதும் பயன்படுத்தப்பட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.