10/27/2012

| |

மியான்மரில் இனக்கலவரத்தில் 56 பேர் பரிதாப சாவு : 2,000 வீடுகள் தீக்கிரை


மியான்மரில் ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் வீடுகளை  இழந்துள்ளனர். மியான்மரில் கடந்த ஜூன் மாதம் புத்த மதத்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இனக் கலவரம் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பிலும்  90 பேர் கொல்லப்பட்டனர். 3,000க்கும் அதிகமான வீடுகள் நாசப்படுத்தப்பட்டன. இந்நிலையில், இரு தரப்பினருக்கும் மீண்டும் மோதல் வெடித்தது. இதில்  இதுவரை 25 ஆண்களும் 31 பெண்களும் இறந்துள்ளனர். ஏராளமான வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் 60 ஆண்கள், 4 பெண்கள் படுகாயம்  அடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இனக்கலவரத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால் நாட்டில் பதற்றம் நீடிக்கிறது. கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வர பல இடங்களில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இப்போது மீண்டும் மோதல் நடப்பதால் பல இடங்களுக்கு  ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் குழப்பம் நிலவுகிறது. பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும்  மியான்மரின் பல நகரங்கள், கிராமங்களில் அமைதி திரும்பவில்லை.