உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/10/2012

| |

கஷினோவில் வென்றதாகக் கூறப்படும் ரூ.60 லட்சத்துடன் ஜப்பான் பிரஜை கைது

கஷினோவில் வெற்றிபெற்ற 60 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட ஜப்பான் பிரஜையொருவரை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அமெரிக்க, ஹொங்கொங் டொலர்கள் மற்றும் கொரிய வொன் ஆகிய நாணயத்தாள்களுடன் டுபாய் ஊடாக கெய்ரோவுக்கு பயணிக்க முயற்சித்த நிலையிலேயே மேற்படி ஜப்பான் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

44 வயதான இவர், தான் ஒரு சட்டத்தரணி என்றும் கஷினோவில் வெற்றிபெற்ற இந்த பணத்துடன் கெய்ரோ சென்று அங்கும் கஷினோ சூதாட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தார்.