உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/16/2012

| |

கடன் எல்லையை ரூ.6000 கோடியினால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்

இவ்வாண்டின் அரசாங்கத்தின் கடன் எல்லையை ஆறாயிரம் கோடி ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

முப்படை, இலங்கை மின்சாரசபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு செலுத்த வேண்டிய கடனுக்காக ஆறாயிரம் கோடி ரூபாவுக்கு திறைசேரி கடன்பத்திரங்களை விநியோகிப்பதே அரசின் கடன் எல்லையை அதிகரிப்பதற்கு காரணமாகியுள்ளது. இந்நிலையில், பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு முப்படையினர் வழங்க வேண்டிய கடனுக்காக 950 கோடி ரூபாவுக்கும் இலங்கை மின்சார சபையினால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு வழங்க வேண்டிய கடனுக்காக 50,50 கோடி ரூபாவுக்கும் நிறைசேரியின் கடன் பத்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. 

அந்தவகையில், இவ்வாண்டின் அரசாங்கத்தின் கடன் எல்லை 1,13, 900 கோடி ரூபாவிலிருந்து 1,19,900 கோடி ரூபாவாக 6ஆயிரம் கோடி ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு சமனாக அரசாங்கத்தின் மொத்தச் செலவினம் 2,19,400 கோடி ரூபாவிலிருந்து 2,25,400 கோடி ரூபாவாக 6ஆயிரம் கோடி ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.