உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/01/2012

| |

ஜனாதிபதியின் ஆலோசகருக்கு அமோக வரவேற்பு

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கு அவரது சொந்த ஊhரான பேத்தாழை கிராம மக்கள் மற்றும் பேத்தாழை இளந்தளிர் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்வு மிகவும் கோலாகலமாக இன்று(29.09.2012) இடம் பெற்றது.
பேத்தாழை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி வரவேற்பு நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான நாகலிங்கம் திரவியம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் மன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் கட்சியின் முக்கியஸ்த்தர்களும் ஊரின் பிரமுகர்கள் பொது மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள். இதில் உரையாற்றி சந்திரகாந்தன், தேர்தலில் தமிழ் மக்கள் விட்ட தவறு மற்றும் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாது போனது அத்தோடு தமிழ் முதலமைச்சரை நாம் பெறமுடியாது போனமைக்கான காரணங்கள் என்னபன தொடர்பாக விரிவான ஓர் உரையினை ஆற்றினார்.