உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/10/2012

| |

தமிழ்தேசியக் கூட்டமைப்பு கட்சியைப் பதிவு செய்யாமல் இழத்தடிப்பதன் நோக்கம் என்ன?– அரசியல் ஆய்வு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பது இலங்கை தமிழரசுக்கட்சி, புளொட்,ஈபிஆர்எல்எவ், தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ முதலிய தமிழ்க்கட்சிகளினுடைய கூட்டாகும். இக்கட்சியில் இத்தனை கட்சிகள் அங்கம் வகிக்கின்றபோதும், இக்கட்சிகளிலெல்லாவற்றிலும் அதிகாரத்தைக் கொண்டதும், தலைமைத்துவத்தை தன்னகத்தே கொண்டதுமாக இலங்கைத் தமிழரசுக் கட்சி காணப்படுகின்றது.
அதாவது சம்பந்தன் அவர்களே இக்கட்சிக்கு தொடர்ச்சியாக தலைமை வகித்து வருகின்றார். அந்த வகையில் அண்மைக்காலத்தில் அங்கம் வகிக்கும் பிறகட்சிகளாலும், புலம்பெயர் தமிழர்களாலும் கட்சியைப் பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கட்சியைப் பதிவு செய்யாமல் தமிழரசுக்கட்சி இழுத்தடிப்பதன் நோக்கம் என்ன என்பதை இக்கட்டுரை ஆராய முற்படுகின்றது.
இலங்கைத் தமிரசுக்கட்சியைச் சேர்ந்தவர்களும், தலைமைத்துவமுமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பதிவு செயயாமல் இழுத்தடித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகின்றது.
அவ்வாறு இழுத்தடிப்பதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றது.
1.    இலங்கைத் தமிழரசுக்கட்டசியே என்றும் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றமை.
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவப்பதவிகளை தாங்களே வகிக்க வேண்டும் என்ற சுயநல நோக்கத்தினால் கட்சி பதிவு செய்யப்படவில்லை. தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் தேர்தல் காலங்களில் பிரசாரங்களை மேற்கொண்டாலும், தேர்தல் வேளையில் இடம்பெறுகின்ற வேட்பாளர் தெரிவின்போது ஏனைய கட்சியைச் சார்ந்த வேட்பாளர்களாயினும் அவர்களும், இலங்கைத் தமிழரசுக்கட்சி என்றே பதிவு செய்யப்படுகின்றனர். அதே வேளை தேர்தல் செயலகத்திலும் இலங்கைத் தமிழரசுக்கட்சியே பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியாகவும், அதனுடைய செயலாளராக மாவை. சேனாதிராசாவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்கின்றபோது, கட்சியின் பதவிகள் பொறுப்புகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள பிறகட்சிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். அந்தவேளையில் சிலவேளையில் தமிழத்தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்புக்கூட பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்குச் செல்கின்ற சூழ்நிலை கூட உருவாகலாம்.
எனவே இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு சம்பந்தன், சேனாதிராசா போன்றவர்கள் தமது பதவிகள் பறிபோய்விடும் என்ற நிலையிலேயே பதிவுசெய்வதில் இழுத்தடித்து வருகின்றனர்.
2.    கட்சிக்கு கிடைக்கின்ற நிதிகளை ஏனைய கட்சிகளுக்கு பங்கிட விரும்பாமை:-
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு புலம்பெயர் தமிழர்களிடமிருந்தும், அமெரிக்கா, இந்தியா போன்ற இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்று கருதுகின்ற சில நாடுகளிலிருந்தும் தொடர்ச்சியாக நிதி உதவிகள் அள்ளி வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்த நிதிகள் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வங்கிக்கணக்குகளிலும், தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த தலைமைத்துத்தைச் சார்ந்தவர்களுக்குமூடாகவே வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்நிதிகளை பெறுவதை பிற கட்சிகளிடம் மறைப்பதுடன், சிலவேளைகளில் நிதி கிடைத்தது பற்றி பிறகட்சிகள் அறிந்துகொண்டால் கிடைத்த நிதியை மிகவும் குறைவாகக் குறிப்பிடுவதன் மூலமும் வெளிநாட்டு நிதிகளை தாம் மாத்திரம் அனுபவித்து வருகின்றனர்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் வழங்கப்பட்ட நிதியில் தலைவர் சம்பந்தன் பிறகட்சி தலைவாகளுக்கு வழங்கியது மிகவும் குறைந்த அளவே. ஏணையவற்றையெல்லாம் அவர் தமது வங்கிக் கணக்குகளில் போட்டுவிட்டார்.
தேர்தல் பிரசாரங்களுக்குக் கூட இலங்கைத் தமிழரசுக்கட்சியைச் சார்ந்தவாகளுக்கு வழங்கப்பட்ட நிதியை விட குறைந்தளவிலான நிதியே பிறகட்சி வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை அக்காலத்தில் அச்சடிக்கப்பட்ட போஸ்டர்களே சான்று பகரும்.
ஆனால் கட்சியினை பதிவு செய்துவிட்டால் நிதிகள் யாவும் ஒட்டு மொத்த பிற கட்சிகளுக்கும் சமமாகப் பங்கிட வேண்டி ஏற்படும். அத்துடன், அந்த நிதிகளை தாம் மாத்திரம் அனுபவிக்க முடியாது போகும் போன்ற சுயநல காரணங்களுமே கட்சியைப் பதிவு செய்யாது இழுத்தடித்து வருவதற்கு பிரதான காரணங்களாகும்.
கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்தின் போது கட்சியைப் பதிவு செய்வதற்கு முயற்சித்த போதும், ஏனைய கட்சிகளின் ஒப்புரிமைக் கடிதம் இணைக்கப்படாமையினால் அது தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்டது.
உண்மையில் ஒரு பழமையான அரசியல் கட்சி இவ்வாறு சட்டமுறைகள் தெரியாமல் நடந்திருக்கக்கூடாது. ஏனெனில் கூட்டுக்கட்சிகளின் அரசியல் கட்சியைப் பதிவு செய்கின்றபோது பங்காளிகளின் ஒப்பபுதல் வேண்டும் என்பது யாவரும் அறிந்ததொன்றாகும். ஆனால் தமிழரசுக்கட்சி வேண்டுமென்றே “தாம் பதிவு செய்ய முயற்சித்தோம் ஆனால் தேர்தல்தினைக்களம் நிராகரித்துவிட்டது.” என்ற வதந்தியை பரப்பவே இவ்வாறு செய்திருந்தது என்பதே உண்மையாகும்.
இவ்வாறு சுயநல நோக்கத்திற்காக கட்சியைப் பதிவு செய்யாது வைத்திருப்பதன் மூலம், அதில் அங்கம் வகிக்கும் பிறகட்சிகள் யாவும் ஒன்று சேர்ந்து ஈழத் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு (நுவுடுயு)ஒரு கூட்டமைப்பை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள சுயநலவாதிகளின் சுகபோக வாழ்க்கை நீடிக்குமா? என்பது பெரும் கேள்விக்குறியாகவுள்ளது.
-    ஆராவாணன் -