உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/11/2012

| |

ஜப்பானில் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டம்

பிரிக்ஸ் நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்கள் கூட்டம் 11ம் நாள் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. தற்போதைய ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பொருளாதார நிலைமை, பிரிக்ஸ் நாடுகளுக்கு இது ஏற்படுத்தக் கூடிய தாக்கம், சர்வதேச நாணய நிதியத்தின் பங்குச் சீர்திருத்தம், அடிப்படை வசதிகளுக்கான முதலீடு, பிரிக்ஸ் நாடுகளின் தொடர்புடைய பணிக் குழுக்களின் பணி முதலியவை பற்றி, பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் விவாதித்தனர். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2012ம் ஆண்டு கூட்டம் 12ம் நாள் டோக்கியோவில் துவங்கவுள்ளது. அவற்றின் 188 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்வர்.