உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/06/2012

| |

நோபல் பரிசு அடுத்த வாரம் அறிவிப்பு

உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசுகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படுகின்றன.
மருத்துவம், இயற்பியல், ரசாயனம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில், தலை சிறந்த நிபுணர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், நோபல் பரிசு, வழங்கப்பட்டு வருகிறது. உலக அமைதிக்காகவும், மக்களுக்கும், தன்னலமற்ற சேவையாற்றுபவர்களுக்கும், சமாதான விருது வழங்கப்படுகிறது. நோபல் பரிசு, யாருக்கு கிடைக்கும் என்பது தொடர்பாக சூதாட்டங்களும் அரங்கேறி வருகின்றன. எனவே, நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள், மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
சீன எழுத்தாளர் மோ யான், ஜப்பானிய இலக்கியவாதி ஹருக்கி முரகாமி, எகிப்திய தன்னார்வலர் மேகல் கோப்ரான் ஆகியோருக்கு நோபல் பரிசு கிடைக்கும் எனக் கூறி, சூதாட்டக்காரர்கள், வாடிக்கையாளர்களிடம் பணத்தை வசூலித்து வருகின்றனர். வரும், 8ம் தேதி, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவர் பெயரும், 9ம் தேதி, இயற்பியலுக்கான பரிசும், 10ம் தேதி, ரசாயனத்துக்கான பரிசும், 11ம் தேதி, இலக்கியத்துக்கான பரிசும், 12ம் தேதி, அமைதிக்கான பரிசும், 15ம் தேதி, பொருளாதாரத்துக்கான பரிசும் அறிவிக்கப்பட உள்ளன.